Ayalaan Release Date : சிவகார்த்திகேயன் அயலான் படம் ரிலீஸ் தேதியில் மாற்றமா?
Ayalaan Release Date :
சிவகார்த்திகேயனின் மாவீரன் படம் சூப்பர் ஹிட்டானதை தொடர்ந்து தற்போது தனது 21 வது படத்தில் நடித்து வருகிறார். இதனிடையே அவர் நடிப்பில் உருவாகியுள்ள அயலான் படமானது தீபாவளிக்கு வெளியாகும் என ஏற்கனவே அறிவிக்கப்பட்டிருந்தது. இதனால், விரைவில் அயலான் படத்தின் ட்ரெய்லர் வெளியாகும் எனவும் எதிர்பார்க்கப்பட்டது. இந்நிலையில், அயலான் படத்தின் ட்ரெய்லர் ரெடியாகிவிட்டாலும், படம் சொன்னபடி தீபாவளிக்கு (Ayalaan Release Date) வெளியாகுமா என்பதில் தற்போது சந்தேகம் ஏற்பட்டுள்ளது.
சின்ன திரையில் இருந்து சினிமாவில் துறையில் அடியெடுத்து வைத்த சிவகார்த்திகேயன், கோலிவுட்டின் டாப் ஹீரோக்களில் ஒருவராக கலக்கி வருகிறார். ‘மெரினா’ முதல் படத்தில் தொடங்கி ‘மாவீரன்’ படம் வரை சிவகார்த்திகேயனின் படங்களுக்கு ரசிகர்களிடம் வரவேற்பு கிடைத்ததோடு, பாக்ஸ் ஆபிஸிலும் நல்ல கலெக்ஷன் செய்தன. சமீபத்தில் சிவகார்த்திகேயன் நடிப்பில் வெளியான மாவீரன் படமானது சூப்பர் ஹிட்டானது.
ராஜ்கமல் பிலிம்ஸ் பேனரில் நடிகர் கமல்ஹாசன் தயாரிக்கும் இந்தப் படத்தின் ஷூட்டிங் வேகமாக நடைபெற்று வருகிறது. இதனிடையே சிவகார்த்திகேயனின் அயலான் படத்தின் மீதான எதிர்பார்ப்பு நாளுக்கு நாள் ரசிகர்கள் மத்தியில் எகிறிக் கொண்டே இருக்கிறது. 5 ஆண்டுகளுக்கு முன்னர் தொடங்கிய அயலான் படப்பிடிப்பானது, கொரோனா ஊரடங்கு, பட்ஜெட் பிரச்சினை போன்றவை காரணமாக கிடப்பில் போடப்பட்டது.
அதன் பிறகு மீண்டும் தொடங்கப்பட்ட இந்தப் படத்தின் ஷூட்டிங் கடந்தாண்டு நிறைவுற்றது. ரவிக்குமார் இயக்கத்தில் சயின்ஸ் பிக்ஸன் ஜானரில் உருவாகியுள்ள ‘அயலான்’ படத்துக்கு இசைப்புயல் திரு.ஏ.ஆர்.ரஹ்மான் அவர்கள் இசையமைக்கிறார். சிவகார்த்திகேயனுடன் நடிகை ரகுல் ப்ரீத் சிங் மற்றும் கருணாகரன் உள்ளிட்ட பலர் நடித்துள்ளனர். தமிழில் அயலான் படமானது முதல் ‘ஏலியன்ஸ் சயின்ஸ் பிக்ஸன்’ படமாக இருக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.
Ayalaan Release Date : இந்நிலையில், அயலான் படம் வரும் தீபாவளிக்கு வெளியாகும் என படக்குழு அறிவித்திருந்தது. அதனால் இறுதிக்கட்ட கிராபிக்ஸ் பணிகளில் இயக்குநர் ரவிக்குமார் அவர்கள் பிஸியாக இருந்தார். சீன் பை சீன் படம் முழுவதும் மிரட்டலான மேக்கிங் உடன் உருவாகியுள்ளதாம் அயலான் திரைப்படம். இது அயலான் ட்ரெய்லர் வெளியாகும் போது ரசிகர்களுக்கு தெரியவரும் என நம்பிக்கையுடன் உள்ளார் சிவகார்த்திகேயன். இந்த சூழ்நிலையில் திடீரென அயலான் படத்தின் ரிலீஸ் தேதியில் (Ayalaan Release Date) மாற்றம் இருக்கும் என சொல்லப்படுகிறது.
ஏற்கனவே கார்த்தியின் ‘ஜப்பான்’ திரைப்படம் தீபாவளி ரேஸில் களமிறங்கவுள்ளது. இப்போது நடிகர் பிரபாஸின் ‘சலார்’ திரைப்படமும் தீபாவளிக்கு களமிறங்கும் என தகவல்கள் தெரிவிக்கின்றன. இதுதவிர மேலும் சில படங்களும் தீபாவளி ஸ்பெஷலாக வெளியாகலாம் என எதிர்பார்க்கப்படுகிறது. இதனால், அயலான் படத்தின் ரிலீஸ் தேதி கிறிஸ்துமஸ் அல்லது பொங்கலுக்கு மாற்றப்படலாம் என சொல்லப்படுகிறது. இதுகுறித்து படக்குழு தரப்பில் இருந்து எந்த செய்தியும் வெளியாகவில்லை என்றாலும், அயலான் ரிலீஸ் தேதி மாற்றம் (Ayalaan Release Date) என தகவல்கள் இணையத்தில் வைரலாகி வருகின்றன.
அதேநேரம், அயலான் படத்தின் ட்ரெய்லர் மற்றும் எடிட்டிங் முழுவதும் முடிந்துவிட்டதாகவும், விரைவில் அதன் ரிலீஸ் (Ayalaan Release Date) குறித்து அபிஸியல் அப்டேட் வெளியாகும் என்றும் சொல்லப்படுகிறது. அதில், அயலான் படத்தின் ரிலீஸ் தேதியும் கன்ஃபார்ம் செய்யப்பட்டுவிடும் எனக் கூறப்படுகிறது. அதேபோல், இந்தியாவின் பெஸ்ட் சயின்ஸ் பிக்ஸன் படமாக அயலான் இருக்கும் என கோலிவுட் வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.
Latest Slideshows
-
May Day History : மே தினம் உருவானது எப்படி? தோற்றம், முக்கியத்துவம் மற்றும் கொண்டாட்டம்! -
Best Foods for Liver Health : கல்லீரல் ஆரோக்கியத்தை மேம்படுத்தும் சிறந்த 10 உணவுகள்.! -
SSC Jobs 2026 : எஸ்.எஸ்.சி குரூப் டி மற்றும் குரூப் சி பிரிவில் 731 பணியிடங்கள்.. உடனே விண்ணப்பிங்க! -
DC vs PBKS Highlights : டி20 கிரிக்கெட் வரலாற்றில் 265 ரன்களை சேஸ் செய்து வரலாறு படைத்தது பஞ்சாப்! -
Crude Oil Rates Today : இன்றைய கச்சா எண்ணெய் விலை நிலவரம் -
Kirni Fruit Benefits in Tamil : 'கிர்ணி' பழத்தில் கொட்டி கிடக்கும் நன்மைகள்! -
PGCIL Recruitment 2026 : மின்சாரத் துறையில் 660 காலியிடங்கள்.. உடனே விண்ணப்பிங்க! -
RCB vs DC IPL 2026 Highlights : பெங்களூரு அணியை வீழ்த்தியது டெல்லி கேபிடல்ஸ்.! -
Mr. X Movie Review : ஜி20 மாநாடு, அணு ஆயுதத் தாக்குதல் என சுவாரஸ்யமாக இருக்கிறதா மிஸ்டர் எக்ஸ்? -
Fun Facts About Fireflies : மின்மினிப் பூச்சிகள் பற்றிய வேடிக்கையான உண்மைகள்!