இந்தியப் பெருங்கடலின் கரையோரங்களில் கிடைக்கும் அயிலை மீன் என்பது இந்தியன் மெக்கரல் (Indian Mackerel) வகையைச் சேர்ந்த மீன் இனம் ஆகும். இந்த அயிலை மீன் புரதம், ஒமேகா-3 கொழுப்புகள் மற்றும் வைட்டமின்கள் B5, B6, D, கால்சியம், பொட்டாசியம், இரும்பு, மெக்னீசியம், துத்தநாகம் (Ayilai Fish Benefits in Tamil) போன்றவை நிறைந்த மீன் ஆகும். நல்ல கொழுப்புகள் அதிகம் உள்ள மீன் இனம் ஆகும்.
அயிலை மீனின் சிறந்த ஆரோக்கிய நன்மைகள் (Ayilai Fish Benefits in Tamil)
மூளை மற்றும் கண்கள் ஆரோக்கியத்திற்கு சிறந்தது
மூளை வளர்ச்சிக்கு உதவுகிறது. மன அழுத்தத்திற்கு சிறந்த நிவாரணம் அளித்து கண் நோய்களைத் தடுக்கிறது
சிறந்த நோயெதிர்ப்பு சக்தியை தருகிறது
அயிலை மீனில் உள்ள அமினோ அமிலங்கள் நோயெதிர்ப்பு சக்தியை மேம்படுத்தி, திசு சேதத்தை சரிசெய்கின்றன.
பற்கள் மற்றும் எலும்புகளுக்கு வலுவளிக்கின்றன
அயிலை மீனில் உள்ள கால்சியம், பாஸ்பரஸ், வைட்டமின் D ஆகியவை எலும்புகள் மற்றும் பற்களை வலுப்படுத்துகின்றன.
கர்ப்பிணிகள் மற்றும் குழந்தைகளுக்கு ஆரோக்கியத்தை அதிகரிக்கின்றன
அயிலை மீனில் உள்ள ஊட்டச்சத்துக்கள் குழந்தைகள் மற்றும் கர்ப்பிணி பெண்களுக்கு சிறந்த ஆரோக்கியத்தை தருகின்றன.
இதய ஆரோக்கியத்தை மேம்படுத்துகின்றன
அயிலை மீனில் உள்ள ஒமேகா-3 கொழுப்புகள் கொலஸ்ட்ரால் அளவைக் குறைத்து, ரத்த அழுத்தத்தை கட்டுப்படுத்தி, மாரடைப்பு மற்றும் பக்கவாதம் போன்றவை வராமல் தடுக்கின்றன.
இரத்த உறைகளுக்கு உதவுகின்றன
அயிலை மீனில் உள்ள வைட்டமின்கள் B5, B6, D (அதிக அளவு) B12 ஆகியவை எலும்புகளின் ஆரோக்கியம், நோயெதிர்ப்பு, மற்றும் இரத்த உறைகளுக்கு உதவுகின்றன.
இரத்த சோகை தடுப்புக்கு சிறந்த பலன் அளிக்கிறது
அயிலை மீனில் அதிக அளவில் பொட்டாசியம், இரும்பு, துத்தநாகம் மற்றும் சோடியம் ஆகியவை உள்ளன. இவை ரத்த அழுத்தம் மற்றும் இரத்த சோகை தடுப்புக்கு சிறந்த பலன் அளிக்கின்றன.
உடல் எடை கட்டுப்பாட்டை பேண உதவுகிறது
அயிலை மீன்கள் குறைந்த அளவு கார்போஹைட்ரேட் பெற்றுள்ளது. மேலும் நல்ல கொழுப்புகளை அதிக அளவில் பெற்றுள்ளது. இவை இரண்டுமே உடல் எடை கட்டுப்பாட்டுக்கு ஏற்றவை ஆகும்.
சிறந்த தசை வளர்ச்சியை தருகிறது
ஒவ்வொரு 85 கிராம் அயிலை மீனிலும் 20.2 கிராம் புரதம் உள்ளது. இது சிறப்பான தசை வளர்ச்சியை தருகிறது.
- மூட்டு வலி மற்றும் விறைப்புத்தன்மையை குறைக்கும் ஆற்றல் பெற்றது. மூட்டு ஆரோக்கியத்தை பேணுவதில் வல்லது.
- சருமத்திற்கு நல்ல பளபளப்பை தருகின்றது மற்றும் சரும ஆரோக்கியத்தை பேணிக் காக்கிறது.