-
Tamil Nadu Fuel Crisis News : எரிபொருள் தட்டுப்பாட்டை எதிர்கொள்ள தமிழக அரசின் அறிவிப்புகள்.!
-
Indian Navy Agniveer Recruitment : இந்திய கடற்படையில் 1200 அக்னிவீர்பணியிடங்கள்.. உடனேவிண்ணப்பிங்க.!
-
Tamil Nadu Election Date : மீண்டும் தள்ளிப்போகும் தேர்தல் தேதி அறிவிப்பு.. தமிழகம் உள்பட 5 மாநில வாக்குப்பதிவு எப்போது?
முக்கனிகளில் முதலிடம் பெறும் வாழை பழத்தின் நன்மைகள் |Banana Benefits
Banana Benefits – நன்றாக கனிந்த வாழைப்பழத்தை தினமும் ஒன்று அல்லது இரண்டு சாப்பிடுவது மிகவும் நல்லது. உணவுக்குப் பின் வாழைப்பழத்தை தோல் நீக்கி சிறு துண்டுகளாக நறுக்கி அதன் மீது ஒரு சிட்டிகை உப்பு மற்றும் கருப்பு மிளகு தூவி சாப்பிடுவது மிகவும் நல்லது.
ஊட்டச்சத்துக்கள் விட்டமின் A1, B6, B12, C, Magnesium மற்றும் Potassium வாழைப்பழத்தில் உள்ளது. இவை உடலில் உள்ள நிக்கோட்டினை வெளியேற்ற உதவுகிறது. மேலும் புகைப்பிடித்தலை நிறுத்தவும் உதவுகிறது. வயிற்றுப்புண் மற்றும் மூல வியாதி பாதிப்பு உள்ளவர்களும் வாழைப்பழத்தை தினமும் சாப்பிட்டு வந்தால் பாதிப்பு குறையும்.
குடல் கோளாறான நாள்பட்ட அல்சர் பிரச்சனை தினமும் ஒரு வாழைப்பழத்தை சாப்பிட்டு வந்தால் எளிதில் நீங்கிவிடும். புண்ணுடன் கூடிய குடல் அலற்சி நன்கு கனிந்த பழத்தை சாப்பிட்டால் குணமாகும். வாழைப்பழம் வீக்கம் உள்ளிட்ட பிரச்னைகளை ஏற்படாமல் தடுக்க உதவுகிறது.
வாழைப்பழ நார்ச்சத்து செரிமானத்திற்கு உதவும் மற்றும் மலச்சிக்கலை நீக்கும். இது தவிர, வாழைப்பழத்தில் நிறைந்துள்ள பொட்டாசியம் மூளைக்கு மிகவும் நல்லது. சரியான தூக்கமின்மை, உடற்பயிற்சி இல்லாத, அதிக உடல் செயல்பாடு இல்லாத, உட்கார்ந்த வாழ்க்கை முறை, ,மற்றும் மன அழுத்தம் ஆகியவை மலச்சிக்கலுக்கு வழிவகுக்கும். வாழைப்பழ நார்ச்சத்து மலச்சிக்கலை நீக்கும். உணவு சாப்பிட்டவுடன் வாழைப்பழம் சாப்பிடுவது மிகவும் நல்லது. சைனஸ், சளி தொந்தரவு மற்றும் ஆஸ்துமா தொந்தரவு இருப்பவர்கள் இரவில் வாழைப்பழம் சாப்பிடுவதை தவிர்த்து விடவேண்டும்.






