Bangladesh Dengue Cases :
பங்களாதேஷ் ஆனது டெங்கு காய்ச்சலினால் (Bangladesh Dengue Cases) மிகவும் பாதிக்கப்பட்டு போராடி வருகிறது. இதுவரை பதிவான வழக்குகளின் எண்ணிக்கை ஆனது 300,000 ஐத் தாண்டியுள்ளதாக குறிப்பிடப்பட்டுள்ளது. சுகாதார சேவைகள் இயக்குநரகத்திலிருந்து பெறப்பட்ட அறிக்கையின்படி மற்றும் bdnews24.com அறிக்கையின்படி, இந்த 2023-ஆம் ஆண்டில் பங்களாதேஷ் ஆனது 301,255 டெங்கு நோய்த்தொற்றுகள் மற்றும் 1,549 இறப்புகள் ஆனது இந்த வைரஸ் நோயால் ஏற்பட்டுள்ளது. 19/11/2023 அன்று மட்டும் 1,291 பேர்கள் புதிய வைரஸ் காய்ச்சலால் பாதிக்கப்பட்டுள்ளனர். 4,949 பேர்கள் தற்போது, நாடு முழுவதும் உள்ள மருத்துவமனைகளில் சிகிச்சை பெற்று வருகின்றனர், டாக்காவில் மட்டும் 1,127 பேர்கள் பாதிக்கப்பட்டுள்ளனர்.
20/11/2023 திங்கட்கிழமை நிலவரப்படி, இந்த டெங்கு நோயால் பங்களாதேஷில் புதிதாகப் பிறந்த குழந்தைகள் முதல் 15 வயது வரையிலான 156 குழந்தைகள் உட்பட குறைந்தது 1,549 பேர் (Bangladesh Dengue Cases) இறந்துள்ளனர். அரசாங்கத்தின் சுகாதார சேவை இயக்குநரகம் ஆனது இந்த 2023ஆம் ஆண்டு மொத்தம் 301,255 டெங்கு வழக்குகள் பதிவாகியுள்ளன என்று தெரிவித்துள்ளது. அடர்த்தியான மக்கள்தொகை கொண்ட பங்களாதேஷ் வரலாற்றில் மிக மோசமான டெங்கு வெடிப்புக்கு உட்பட்டுள்ளது, 1,500 க்கும் மேற்பட்டோர் இறந்துள்ளனர். இறப்பு எண்ணிக்கை அதிகரித்து வருகிறது மற்றும் மருத்துவமனைகள் நிரம்பியுள்ளன.
டெங்கு - ஒரு குறிப்பு :
டெங்கு ஆனது வெப்பமண்டல பகுதிகளில் கொசுக் கடியால் வரும் ஒரு நோயாகும். அதிக காய்ச்சல், தலைவலி, குமட்டல், வாந்தி, தசை வலி மற்றும் மிகக் கடுமையான இரத்தப்போக்கு ஆகியவை இதன் அறிகுறியாகும். இந்த தொடர் நிலை ஆனது மரணத்திற்கு வழிவகுக்கும். டெங்கு வைரஸைப் பரப்புவதில் பெயர் பெற்ற Aedes Aegypt கொசு ஆகும். இந்த நோய் ஆனது ஒருவரிடமிருந்து மற்றவருக்குப் பரவாது என்றபோதும், பாதிக்கப்பட்ட நோயாளியைக் கடிக்கும் கொசு ஆனது பின்னர் ஒரு டெங்கு நோய் கேரியராக (Dengue Carrier) மாறுகிறது. அந்த Aedes Aegypt கொசு கடிக்கும் மற்றவர்களுக்கு டெங்குவை பரப்புகிறது. நீடித்த பருவமழை மற்றும் அதிகரித்து வரும் வெப்பநிலை காரணங்களால் இந்த டெங்கு வெடிப்பு ஏற்பட்டதாக நிபுணர்கள் கூறுகின்றனர். டெங்கு வைரஸைப் பரப்புவதில் பெயர் பெற்ற Aedes Aegypt கொசுவின் பெருக்கத்தைக் கட்டுப்படுத்த போதுமான நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படவில்லை.
முக்தா மருத்துவமனையின் இயக்குனர் டாக்டர் முகமது நியாதுஸ்ஸாமான், “டெங்கு இந்த விகிதத்தில் பரவுவதை நான் ஒருபோதும் பார்த்ததில்லை, இவ்வளவு அதிகமாக டெங்கு நோயாளிகளை நவம்பர் மாதத்தில் பார்ப்பது மிகவும் அசாதாரணமானது” என்று கூறியுள்ளார். DHGS இன் முன்னாள் தலைமை பூச்சியியல் நிபுணர் முகமது கலீலுர் ரஹ்மான், “பல வழிகளில் டெங்குவை கட்டுப்படுத்தலாம் என்றும் இதில் வெக்டார் மேலாண்மை மற்றும் Aedes Aegypt கொசுவின் இனப்பெருக்க மூலங்களைக் குறைப்பது சிறந்தது. அதிகாரிகள் எடுத்த நடவடிக்கைகள் ஆனது திருப்திகரமாக இல்லை” என்று கூறியுள்ளார்.
நவம்பர் மாதத்தின் முதல் 19 நாட்களில் மட்டும் 201 பேர் உயிரிழந்துள்ளதுடன், இக்காலப்பகுதியில் 30,080 புதிய டெங்கு நோயாளர்கள் பதிவாகியுள்ளனர். கடந்த 2022 ஆம் ஆண்டு, பங்களாதேஷில் உள்ள மருத்துவமனைகளில் 62,382 நோயாளிகள் இந்த டெங்கு நோய்க்கு மருத்துவ கவனிப்பைப் பெற்றனர், மேலும் இறப்பு எண்ணிக்கை 281 ஆக இருந்தது, இது 1960 களில் டெங்கு மருத்துவமனைகளில் பதிவுசெய்யப்பட்டதில் இருந்து அதிகபட்சமாகும் என்று ஒரு செய்தி போர்டல் தெரிவித்துள்ளது. இந்த டெங்கு நோய் கடந்த 5 ஆண்டுகளில் மிக மோசமான பரவலைத் தூண்டியுள்ளது.