Gistak Media

Bank of Baroda Jobs 2026 : வங்கியில் 140 அதிகாரி பணியிடங்கள்.. டிகிரி இருந்தா போதும்

குஜராத் மாநிலம் வதோராவை தலைமையிடமாக கொண்டு செயல் பட்டு வரும் பேங்க் ஆஃப் பரோடா (Bank of Baroda Jobs 2026) வங்கிக்கு நாடு முழுவதும் கிளைகள் உள்ளன. இந்த வங்கியில் மொத்தம் 104 பணியிடங்களை நிரப்புவதற்கான அறிவிப்பு ஒன்று வெளியாகி இருக்கிறது.

பணியிட விவரங்கள்

  • AVP II – குழுத் தலைவர் பணி (Group Head) – 04
  • AVP II – மண்டலத் தலைவர் பணி (Territory Head) – 17
  • துணை மேலாளர் – மூத்த உறவு மேலாளர் பணி (Senior Relationship Manager) – 70
  • துணை மேலாளர் – செல்வ ஆலோசகர் பணி /முதலீடு மற்றும் காப்பீடு (Wealth Strategist) – 13

ஆகிய (Bank of Baroda Jobs 2026) பணியிடங்கள் நிரப்பப்பட உள்ளின.

கல்வித் தகுதி தேவைகள்

  • விண்ணப்பதாரர்கள் அங்கீகரிக்கப்பட்டுள்ள பல்கலைக்கழகங்களில் ஏதேனும் ஒன்றில் ஒரு பிரிவில் இளங்கலைப் பட்டம் (Graduation) பெற்றவர்களாக இருக்க வேண்டும்.
  • மேலாண்மையில் (Management) 2 வருட முழுநேர முதுகலைப் பட்டப்படிப்பு முடித்த விண்ணப்பதாரர்களுக்கு மற்றும் டிப்ளமோ முடித்த விண்ணப்பதாரர்களுக்கு முன்னுரிமை ஆனது வழங்கப்படும். 
  • NISM அல்லது IRDA போன்ற ஒழுங்குமுறைச் சான்றிதழ்கள் வைத்திருக்கும் விண்ணப்பதாரர்கள் கூடுதல் தகுதியுள்ள விண்ணப்பதாரர்களாக கருதப்படுவார்கள்.
Bank of Baroda Jobs 2026 - GISTAK media

Bank of Baroda Jobs 2026 : பணி அனுபவ தேவைகள்

 ஒவ்வொரு பணிக்கும் தேர்ந்து எடுக்கப்படவுள்ள விண்ணப்பதாரர்கள் ஒரு குறிப்பிட்ட கால பணிஅனுபவம் பெற்றவர்களாக இருக்க வேண்டும் என்று குறிப்பிடப்பட்டுள்ளது.

  • AVP II – குழுத் தலைவர் பணிக்கு நிதிச் சேவைத் துறையில் 10 வருட அனுபவம் பெற்றவர்களாக இருக்க வேண்டும். அதில் 5 வருடங்கள் செல்வ மேலாண்மை/சில்லறை வங்கி/முதலீடுகளில் விற்பனையில் பெரிய குழுவை நிர்வகித்த அனுபவம் பெற்றவர்களாக இருக்க வேண்டும்.
  • AVP II – மண்டலத் தலைவர் பணிக்கு செல்வ மேலாண்மையில் ரிலேஷன்ஷிப் மேலாண்மைப் பிரிவில் குறைந்தபட்சம் 6 வருட அனுபவம் பெற்றவர்களாக இருக்க வேண்டும். அதில் 2 வருடங்கள் குழுத் தலைவராக பணியாற்றிய அனுபவம் பெற்றவர்களாக இருக்க வேண்டும்.
  • துணை மேலாளர் – மூத்த உறவு மேலாளர் பணிக்கு குறைந்தபட்சம் 3 வருடம் வங்கி அல்லது நிதி நிறுவனங்களில் ரிலேஷன்ஷிப் மேலாளராக பணியாற்றிய அனுபவம் பெற்றவர்களாக இருக்க வேண்டும்.

தேவையான வயது வரம்பு குறிப்புக்கள்

  • AVP II – குழுத் தலைவர் பணிக்கு 01.03.2026 நிலவரப்படி குறைந்தபட்சமாக 31 ஆண்டுகள் முதல் அதிகபட்சமாக 45 ஆண்டுகள் வரை உள்ள விண்ணப்பதாரர்கள் விண்ணப்பிக்கலாம்.

 

  • AVP II – மண்டலத் தலைவர் பணிக்கு 01.03.2026 நிலவரப்படி குறைந்தபட்சமாக 27 முதல் அதிகபட்சமாக 40 வயது வரை உள்ள விண்ணப்பதாரர்கள் விண்ணப்பிக்கலாம்.

 

  • துணை மேலாளர் – மூத்த உறவு மேலாளர் பணிக்கு 01.03.2026 நிலவரப்படி குறைந்தபட்சமாக 24 ஆண்டுகள் முதல் அதிகபட்சமாக 35 ஆண்டுகள் வரை உள்ள விண்ணப்பதாரர்கள் விண்ணப்பிக்கலாம்.

 

  • துணை மேலாளர் – செல்வ ஆலோசகர் பணிக்கு 01.03.2026 நிலவரப்படி குறைந்தபட்சமாக 24 ஆண்டுகள் முதல் அதிகபட்சமாக 45 ஆண்டுகள் வரை உள்ள விண்ணப்பதாரர்கள் விண்ணப்பிக்கலாம்.

அரசு விதிகளின்படி உள்ள வயது வரம்பில் தளர்வு விவரங்கள்

  • SC/ST பிரிவினருக்கு 5 ஆண்டுகள் வயது தளர்வுகள் அளிக்கப்படும்.
  • OBC பிரிவினருக்கு 3 ஆண்டுகள் வயது தளர்வுகள் அளிக்கப்படும்.
  • மாற்றுத்திறனாளிகளுக்கு 10-15 ஆண்டுகள் வரை வயது தளர்வுகள் அளிக்கப்படும்.

தேர்வு செய்யும் முறை

கீழ்க்கண்ட 4 நிலைகளின் அடிப்படையில் விண்ணப்பதாரர்கள் தேர்வு செய்யப்படுவார்கள்.

  • விண்ணப்பதாரர்களின் விண்ணப்பங்கள் (Bank of Baroda Jobs 2026)சரிபார்ப்பு நடைபெறும்.
  • விண்ணப்பதாரர்களுக்கு ஆன்லைன் தேர்வு (Computer Based Test) நடத்தப்படும்.
  • விண்ணப்பதாரர்களுக்கு உளவியல் தேர்வு (Psychometric Test) நடத்தப்படும்.
  • விண்ணப்பதாரர்களுக்கு நேர்முகத் தேர்வு (Interview) நடத்தப்படும்.

விண்ணப்பக் கட்டண விவரங்கள்

  • பொதுப்பிரிவு மற்றும் OBC பிரிவு விண்ணப்பதாரர்கள் ரூ.850/- கட்டணம் செலுத்த வேண்டும்.
  • பெண் விண்ணப்பதாரர்கள், SC/ST விண்ணப்பதாரர்கள், முன்னாள் ராணுவத்தினர் மற்றும் மாற்றுத்திறனாளி விண்ணப்பதாரர்கள் ரூ.175/- கட்டணம் செலுத்த வேண்டும்.
  • இந்தக் கட்டணத்தை விண்ணப்பதாரர்கள் ஆன்லைன் மூலம் மட்டுமே செலுத்த வேண்டும்.

விண்ணப்பிக்க முக்கிய தேதிகள்

தகுதியும் ஆர்வமும் உள்ள விண்ணப்பதாரர்கள் பேங்க் ஆஃப் பரோடாவின்(Bank of Baroda Jobs 2026) Careers’ பக்கத்தில் www.bankofbaroda.bank.in சென்று ஆன்லைனில் மார்ச் 27, 2026 முதல் ஏப்ரல் 16, 2026 வரை விண்ணப்பிக்கலாம். தகுதி மற்றும் பணி அனுபவமுள்ள பட்டதாரிகளுக்கு இது ஒரு பொன்னான வாய்ப்பாகும்.

Latest Slideshows

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *

Scroll to Top