Bank Of Baroda Recruitment 2025 : பேங்க் ஆப் பரோடாவில் வங்கியில் 2700 காலிப்பணியிடங்கள்..உடனே விண்ணப்பிங்க
குஜராத் மாநிலம் வதோதராவை தலைமையிடமாக கொண்ட (Bank Of Baroda Recruitment 2025) ஆனது இந்தியாவின் இரண்டாவது பெரிய பொதுத்துறை வங்கியாகும். இந்த வங்கி நிறுவனம் ஆனது இந்திய நாடு முழுவதும் ஆயிரக்கணக்கான கிளைகளை கொண்டுள்ளது. இந்த வங்கி 2025ஆம் ஆண்டுக்கான அப்ரெண்டீஸ் (Apprentice) பயிற்சி பணியிடங்களுக்கான ஒரு பெரிய அளவிலான வேலைவாய்ப்பு அறிவிப்பை வெளியிட்டுள்ளது.
மாநில வாரியாக உள்ள அப்ரெண்டீஸ் காலிப்பணியிடங்களின் விவரங்கள் (Bank Of Baroda Recruitment 2025)
குஜராத் – 400, கர்நாடகா – 440, உத்தரபிரதேசம் – 307, மகாராஷ்டிரா – 297, ராஜஸ்தான் – 215 , தமிழ்நாடு 159, தெலுங்கானா – 154 , டெல்லி (UT) – 119, மேற்கு வங்காளம் – 104, பஞ்சாப் – 96 , மத்தியப் பிரதேசம் – 56, கேரளா – 52, சத்தீஸ்கர் – 48, ஆந்திரப் பிரதேசம் – 38, அசாம் – 21 , பீகார் – 47, சண்டிகர் (UT) – 12 , தத்ரா மற்றும் நகர் ஹவேலி (UT) – 05, கோவா – 10, ஹரியானா – 36 , ஜம்மு காஷ்மீர் – 5 , ஜார்க்கண்ட் -15, மணிப்பூர் -02 மிசோரம் – 05 , ஒடிசா – 29 புதுச்சேரி (UT) – 06 , உத்தரகாண்ட் – 22. இதில் தமிழ்நாட்டில் மட்டும் 153 காலிப்பணியிடங்கள் அறிவிக்கப்பட்டுள்ளன என்பது குறிப்பிடத்தக்கது ஆகும். இந்த 153 காலிப்பணியிடங்கள் ஆனது எஸ்சி – 33, எஸ்டி – 2, ஒபிசி- 51, பொருளாதாரத்தில் பின்தங்கியவர்கள் – 14 மற்றும் பொதுப் பிரிவு – 59 என நிரப்பப்படுகிறது. மாற்றுத்திறனாளிகளுக்கு 7 காலிப்பணியிடங்கள் ஒதுக்கப்பட்டுள்ளன.
ஊதிய விவரம்
தேர்ந்து எடுக்கப்படும் விண்ணப்பதாரர்களுக்கு மாதம்தோறும் பயிற்சி ஊக்கத்தொகயாக ரூ.15,000 ஆனது வழங்கப்படும். ஒப்பந்த அடிப்படையில் இந்த பயிற்சி பணியிடங்கள் ஆனது நிரப்பப்படும். தொடர்ந்து 12 மாதங்கள் பயிற்சி ஆனது வழங்கப்படும்.
கல்வித் தகுதி
அரசு அங்கீகாரம் பெற்ற கல்வி நிறுவனங்களில் ஏதேனும் ஒன்றில் இருந்து ஏதாவது ஒரு டிகிரி முடித்தவர்கள் விண்ணப்பிக்கலாம். மேலும் விண்ணப்பதாரர்கள் அவர்கள் சம்பத்தப்பட்ட மாநிலத்தின் உள்ளூர் மொழி நன்றாக தெரிந்தவர்களாக இருக்க வேண்டும்.
வயது வரம்பு விவரங்கள்
01.11.2025 – தேதிப்படி 20 வயது முதல் 28 வயதுக்கு உட்பட்ட விண்ணப்பதார்கள் விண்ணப்பிக்கலாம். வயது உச்ச வரம்பில் தளர்வுகள் ஆனது அரசு விதிகளின் படி வழங்கப்படும். ஒபிசி பிரிவினருக்கு 3 ஆண்டுகளும் மற்றும் எஸ்சி/எஸ்டி பிரிவினருக்கு 5 ஆண்டுக்ளும், மாற்றுத்திறனாளிகளுக்கு 10 ஆண்டுகளும் வயது வரம்பில் தளர்வுகள் ஆனது வழங்கப்படும்.
தேர்வு செய்யும் முறை
விண்ணப்பதாரர்கள் ஆன்லைன் தேர்வு முறையில் தேர்வு செய்யப்படுவார்கள். 100 மதிப்பெண்களுக்கு ஒரு மணி நேர கால அளவில் கணிதம் மற்றும் திறனறி, ஆங்கிலம் மற்றும் கணினி ஆகிய பகுதிகளில் இருந்து தலா 25 கேள்விகள் என மொத்தம் 100 கேள்விகள் கொண்ட தேர்வு ஆனது 60 நிமிடங்கள் நடைபெறும். இதில் நெகட்டிங் மார்க்குகள் கிடையாது.
விண்ணப்பக் கட்டண விவரங்கள்
பொதுப் பிரிவினருக்கு ரூ.800-ம் மற்றும் மாற்றுத் திறனாளிகளுக்கு ரூ. 400-ம் விண்ணப்பக் கட்டணமாக நிர்ணயக்கப் பட்டுள்ளது. எஸ்.சி /எஸ்.டி பிரிவினர் விண்ணப்பக் கட்டணம் செலுத்த வேண்டியதில்லை.
விண்ணப்பிக்கும் முறை
இந்த பணியிடங்களுக்கு தகுதியும் விருப்பமும் உள்ள விண்ணப்பதாரர்கள் https://nats.education.gov.in/ என்ற இணையதளப் பக்கம் மூலம் ஆன்லைனில். 01.12.2025க்குள் விண்ணப்பிக்க வேண்டும். எனவே ஆர்வமுள்ள விண்ணப்பதாரர்கள் (Bank Of Baroda Recruitment 2025) 01.12.2025 தேதிக்குள் விண்ணப்பிக்குமாறு கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள்.
Latest Slideshows
-
May Day History : மே தினம் உருவானது எப்படி? தோற்றம், முக்கியத்துவம் மற்றும் கொண்டாட்டம்!
-
Best Foods for Liver Health : கல்லீரல் ஆரோக்கியத்தை மேம்படுத்தும் சிறந்த 10 உணவுகள்.!
-
SSC Jobs 2026 : எஸ்.எஸ்.சி குரூப் டி மற்றும் குரூப் சி பிரிவில் 731 பணியிடங்கள்.. உடனே விண்ணப்பிங்க!
-
DC vs PBKS Highlights : டி20 கிரிக்கெட் வரலாற்றில் 265 ரன்களை சேஸ் செய்து வரலாறு படைத்தது பஞ்சாப்!
-
Crude Oil Rates Today : இன்றைய கச்சா எண்ணெய் விலை நிலவரம்
-
Kirni Fruit Benefits in Tamil : 'கிர்ணி' பழத்தில் கொட்டி கிடக்கும் நன்மைகள்!
-
PGCIL Recruitment 2026 : மின்சாரத் துறையில் 660 காலியிடங்கள்.. உடனே விண்ணப்பிங்க!
-
RCB vs DC IPL 2026 Highlights : பெங்களூரு அணியை வீழ்த்தியது டெல்லி கேபிடல்ஸ்.!
-
Mr. X Movie Review : ஜி20 மாநாடு, அணு ஆயுதத் தாக்குதல் என சுவாரஸ்யமாக இருக்கிறதா மிஸ்டர் எக்ஸ்?
-
Fun Facts About Fireflies : மின்மினிப் பூச்சிகள் பற்றிய வேடிக்கையான உண்மைகள்!