Gistak Media – Cinema News | Trending News | Latest News

Bank Of Maharashtra Recruitment : மகாராஷ்டிரா வங்கியில் 600 காலிப்பணியிடங்கள் டிகிரி முடித்தவர்கள் விண்ணப்பிக்கலாம்

புனேவை தலைமையிடமாக கொண்ட பொதுத்துறை வங்கியான பேங்க் ஆப் மகாராஷ்டிரா வங்கிக்கு இந்தியா முழுவதும் சுமார் 2000 ஆயிரத்திற்கும் மேற்பட்ட கிளைகள் உள்ளன. தற்போது இந்த வங்கியில் காலியாக உள்ள 600 அப்ரண்டிஸ் (Bank Of Maharashtra Recruitment) பணியிடங்களை நிரப்புவதற்கான அறிவிப்பானது வெளியிடப்பட்டுள்ளது.

Bank Of Maharashtra Recruitment :

  1. காலியிடங்களின் எண்ணிக்கை (Total Vacancy) : இந்தியா முழுவதும் உள்ள பேங்க் ஆப் மகாராஷ்டிரா வங்கியில் காலியாக உள்ள அப்ரண்டிஸ் (Apprentice) பணியிடங்களுக்கு மொத்தம் 600 பணியிடங்கள் அறிவிக்கப்பட்டுள்ளது. மேலும் இந்த அறிவிப்பில் தமிழகத்திற்கு 41 பணியிடங்கள் ஒதுக்கப்பட்டுள்ளன. 

  2. கல்வி தகுதி (Educational Qualification) : பேங்க் ஆப் மகாராஷ்டிரா வங்கியில் இந்த அப்ரண்டிஸ் (Apprentice) பணியிடங்களுக்கு அரசாங்கத்தால் அங்கீகரிக்கப்பட்ட கல்வி நிலையத்தில் ஏதேனும் ஒரு பாடப்பிரிவில் இளங்கலை பட்டப்படிப்பு (UG) முடித்திருக்க வேண்டும்.  

  3. வயது தகுதி (Age) : இந்த அப்ரண்டிஸ் (Apprentice) பணியிடங்களுக்கு 20 வயது முதல் 28 வயதிற்குள் இருப்பவர்கள் விண்ணப்பிக்கலாம். மேலும் ஒபிசி பிரிவினருக்கு 3 ஆண்டுகளும், எஸ்.சி/எஸ்.டி பிரிவினருக்கு 5 ஆண்டுகளும் மத்திய அரசு விதிகளின்படி வயது வரம்பில் சலுகை அளிக்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.   

  4. சம்பளம் (Salary) : பேங்க் ஆப் மகாராஷ்டிரா வங்கியில் இந்த அப்ரண்டிஸ் (Apprentice) பணியிடங்களுக்கு (Bank Of Maharashtra Recruitment) தேர்வு செய்யப்படும் நபருக்கு ஒரு வருட காலம் ஒப்பந்த அடிப்படையில் பயிற்சியுடன் மாதம் ரூ.9000/- சம்பளம் வழங்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.  

  5. தேர்வு செய்யப்படும் முறை (Selection Process) : இந்த அப்ரண்டிஸ் (Apprentice) பணியிடங்களுக்கு மொத்தம் 3 நிலைகளில் தேர்வு நடைபெறுகிறது. முதலில் கணினி வழித் தேர்வில் வெற்றி பெற்றவர்கள் நேர்முகத்தேர்வுக்கு அழைக்கப்பட்டு தகுதியான நபர்கள் தேர்வு செய்யப்படுவார்கள் என தெரிவிக்கப்பட்டுள்ளது.      

  6. விண்ணப்பிக்க கட்டணம் (Application Fees) : இந்த அப்ரண்டிஸ் (Apprentice) பணியிடங்களுக்கு தேர்வு கட்டணமாக பொதுப்பிரிவினருக்கு ரூ.150/- ஆகவும், SC/ST பிரிவினருக்கு ரூ.100/- ஆகவும் நிர்ணயிக்கப்பட்டுள்ளது.    

  7. விண்ணப்பிக்க கடைசித் தேதி (Application Last Date) : பேங்க் ஆப் மகாராஷ்டிரா வங்கியில் இந்த அப்ரண்டிஸ் (Apprentice) பணியிடங்களுக்கு விண்ணப்பிப்பதற்கான கடைசி தேதி 24.10.2024 ஆகும்.

  8. மேலும் விவரங்களுக்கு : https://bankofmaharashtra.in/writereaddata/documentlibrary/ccbfbfc3-69ae-40a2-a596-c347e0eccc72.pdf என்ற அதிகாரப்பூர்வ அறிவிப்பினை பார்வையிடவும்.

Latest Slideshows

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *

Scroll to Top