Gistak Media – Cinema News | Trending News | Latest News

Barley Rice Benefits In Tamil: பார்லி அரிசி கஞ்சியின் 12 நன்மைகள்

உலக அளவில் மனிதரர்களால் உண்ணும் பிரதான உணவு தனியன்களாக அரிசி மற்றும் கோதுமை உள்ளது. இதற்கு அடுத்தபடியாக அதிகம் பயிரிடப்படும் உணவு தானிய வகையாக பார்லி தானியம் உள்ளது. பார்லியை தமிழில் பார்லி அரிசி எனவும் பார்லி தானியம் எனவும் அழைக்கப்படுகிறது.பல்வேறு மருத்துவ குணங்கள் கொண்ட இந்த பார்லி அரிசி அல்லது பார்லி தானியங்களை அதிகம் சாப்பிடுவதால் என்னென்ன நன்மைகள் கிடைக்கும் என்பதை தற்போது காணலாம்.

பார்லி அரிசி மிகவும் சத்தான உணவுகளில் ஒன்றாகும். இந்த பார்லி அரிசி நீரிழிவு நோயாளிகள், இதய நோயாளிகள், கர்ப்பிணிகள், குழந்தைகள், பெரியவர்கள் ஆகியோர் தினமும் சாப்பிடலாம். பார்லி கஞ்சி சிறுநீரக செயல்பாட்டை ஊக்குவிக்கிறது. செரிமான கோளாறுகளில் இருந்தும் பாதுகாக்கிறது. எனவே பார்லி பானத்தை உட்கொள்வதால் உடலில் ஆரோக்கிய சக்திகளை அதிகரிக்கும், உடலில் தேவையில்லாத கொழுப்பு சேர்வதை தடுக்கிறது.

பார்லி அரிசி கஞ்சியின் பயன்கள் (Barley Rice Benefits)

உடல் எடை குறைதல்

பார்லி அரிசி எடை குறைப்புக்கு ஒரு சிறந்த உணவாக உள்ளது. இந்த பார்லியை தொடர்ந்து சாப்பிடுபவர்களுக்கு, உடலில் உள்ள கொழுப்பை உடலில் படியாமல் உடல் எடையை கட்டுக்குள் வைத்திருக்க உதவுகிறது. எனவே பார்லி கஞ்சியை தினமும் சாப்பிட்டு வந்தால் உடல் எடை அதிகரிக்காமல் தடுத்து ஆரோக்கியத்தை மேம்படுத்தும்.

எலும்பு மற்றும் பற்கள் வலிமை

பார்லி தானியங்களில் பாஸ்பரஸ், கால்சியம், மாங்கனீசு, மற்றும் காப்பர் சத்துக்களும் அதிகமாக காணப்படுகின்றன. பார்லி தானியங்களை ஜூஸ் செய்து தினமும் குடிப்பவர்களுக்கு எலும்பும் மற்றும் பற்களும் மிகவும் உறுதியாக இருக்கும். மேலும் வயதானவர்களுக்கு எலும்பு, மூட்டு தேய்மானம் மற்றும் மூட்டுவலி, வலுவிழுத்தல் போன்ற நோய்கள் ஏற்படும் சதவீதம் குறைந்து வருவதாகக் மேலை நாட்டு ஆய்வுகள் தெரிவிக்கின்றன. வயதானவர்களுக்கு வரும் கீல்வாதம் போன்ற குறைபாடுகளும் குறையும். இது சிறுநீரகத்தை செயலாற்ற ஊக்குவித்து செரிமான கோளாறுகள் ஏற்படாமல் பாதுகாக்கும்.

புற்று நோய் தடுப்பு

பார்லியில் உள்ள தாவர ஊட்டச்சத்துக்கள் இயற்கையாகவே புற்றுநோயை எதிர்க்கும் திறனை கொண்டதாகும். பார்லி தானியங்கள் எந்த வகையான புற்றுநோய்களையும் தடுக்கக்கூடிய ஆற்றல் கொண்டவை என்று ஆய்வுகள் தெரிவிக்கின்றன. சீனாவின் யுனான் மாகாணம் மற்றும் திபத்திய பகுதிகளில் இருக்கும் மக்களுக்கு எந்த வகையான புற்று நோய்களும் ஏற்படவில்லை என மருத்துவ ஆராய்ச்சியாளர்கள் தங்கள் ஆய்வில் கண்டுபிடித்துள்ளனர். மேலும் பார்லியில் உள்ள நார்ச்சத்து குடல் புற்றுநோய் மற்றும் மார்பக புற்றுநோயைத் தடுப்பதிலும், நோயால் பாதிக்கப்படுபவர்களின் நோயைக் குறைப்பதிலும் பயனுள்ளதாக இருக்கிறது. அதுமட்டுமல்லாமல் பார்லி கொண்டு செய்யப்பட்ட உணவையோ அல்லது பார்லி கஞ்சையோ குடித்து வந்தால் செரிமான பிரச்சனைகள் எதுவும் ஏற்படாது.

பித்த கற்கள்

நமது உடலில் பித்தப்பையில் ஏற்படும் அதீத அமில சுரப்பி மற்றும் ட்ரைகிளிசரைட் அதிகரிப்பதால் பித்தப்பையில் கற்கள் உருவாகின்றன. குறிப்பாக பெண்களுக்கு இந்த பித்தப்பைக கற்கள் உருவாகும் சதவீதம் அதிகமாக இருக்கும். பார்லி தானியங்கள் கொண்டு செய்யப்பட்ட உணவை சாப்பிடுவதால் உடலில் பித்தப்பையில் சுரக்கும் அமிலங்களின் அளவை சமநிலையாக காட்டி பித்தப்பையில் கற்கள் உருவாகாமல் தடுக்கிறது.

செரிமான கோளாறுகள்

பார்லி உணவை சாப்பிடுவதால் செரிமான பிரச்சனைகள், மலச்சிக்கல் உள்ளவர்களுக்கு பார்லி சிறந்த உணவாக உள்ளது. பழங்களில் இருக்கும் நார்ச்சத்து வயிறு மற்றும் குடலில் உள்ள செரிமான நுண்ணுயிரிகளின் வளர்ச்சியை பெருக்கி, உணவை எளிதில் ஜீரணிக்க உதவுகிறது. தினமும் பார்லி தானிய உணவு அல்லது பார்லி கஞ்சியை உட்கொள்வது வயிறு மற்றும் குடல்களின் ஆரோக்கியத்திற்கு நல்லது என்று மருத்துவர்கள் கூறுகிறார்கள்.

பீட்டா - குளுக்கான்

பார்லி தானியங்களில் பீட்டா குளுக்கன் நிறைந்து உள்ளது. இந்த பீட்டா குளுக்கான் சத்துக்கள் நமது நோய் எதிர்ப்பு மண்டலத்தில் உள்ள ஆன்டி – ஆக்ஸிடன்ட்களை அதிகரித்து நோய்கள் நம்மை எளிதில் தாக்காமல் தடுக்கிறது. மேலும், இந்த பார்லி தானியங்களில் வைட்டமின் C இருப்பதால், அதை உண்பவர்களின் நோய் எதிர்ப்பு சக்தி அதிகரிக்கிறது. காயங்கள் மற்றும் புண்கள் விரைவாக குணமடைய செய்ய உதவுகிறது.

கர்ப்பிணி பெண்கள்

கருவுற்ற பெண்களுக்கு சிறந்த சத்தான உணவுகளில் பார்லியும் ஒன்றாக உள்ளது. கருவுற்ற பெண்கள் தினமும் பார்லி கஞ்சி சாப்பிடுவதால் உணவுகள் எளிதில் ஜீரணமாகும். மேலும், பிரசவத்தின் போது ஏற்படும் தலைச்சுற்றல் மற்றும் கர்ப்பகால நீரிழிவு நோயைத் தடுக்கும் ஆற்றல் பார்லி தானியத்திற்கு உள்ளது. கருவுற்ற பெண்களின் இரத்தத்தில் உள்ள நச்சுக்கள் அனைத்தும் சிறுநீர் மூலம் வெளியேற்றி உடலை சுத்தப்படுத்தும் வேலையை பார்லி சிறப்பாக செய்கிறது.

இதய நோய்கள்

இதய நோயாளிகளுக்கு பார்லி ஒரு மிகசிறந்த ஒரு உணவாகும். இது உடலில் உள்ள கெட்ட கொலஸ்ட்ராலின் அளவை கட்டுப்படுத்துவதால் இதய நோயாளிகளுக்கு நன்மையை கொடுக்கிறது. இதற்கு காரணமாக இருக்கும் பார்லியில் உள்ள அமிலம் கொலஸ்ட்ராலை குறைக்க உதவுகிறது. LDL கெட்ட கொலஸ்ட்ராலை குறைத்து HDL என்ற நல்ல கொலஸ்ட்ராலின் அளவை அதிகரிக்க செய்கிறது.

மலட்டுத்தன்மை

ஆண், பெண் இருவரில் மலட்டுத்தன்மை ஏற்படுவதற்கு பல காரணங்களில் ஒன்று ஊட்டச்சத்து இல்லாத உணவை உட்கொள்வது. பார்லியில் அர்ஜினைன் என்ற வேதிப்பொருள் அதிகமாக உள்ளது. இது ஆண்களின் நரம்பு மண்டலத்தை பலப்படுத்துகிறது, உயிர் அணுக்களன் எண்ணிக்கையை அதிகரிக செய்து குழந்தைபேறு கிடைக்க செய்கிறது. பெண்களின் கருப்பையில் கருமுட்டைகளின் அதிகமான உற்பத்திக்கு உதவுகிறது.

இரத்த சோகை

இரத்த சிவப்பணுக்களின் எண்ணிக்கை குறைந்தால் இரத்த சோகை ஏற்படும். இரத்த சோகையை தடுக்க வைட்டமின் 12 சத்துக்கள் நிறைந்த உணவுகளை உண்ணும் பொது இரத்த சோகை குறையும். பார்லியில் இரும்புச்சத்து மற்றும் வைட்டமின் பி12 சத்துக்கள் நிறைந்துள்ளது. பார்லி கஞ்சியை தினமும் குடித்தால் இரத்த சோகையை எதிர்க்கும். உடலுக்கு வலிமையையும் அதிகரிக்கும்.

சரும பாதுகாப்பு

பார்லி மனித சருமத்திற்கு பல நன்மைகளை கொடுக்கக்கூடிய ஒரு தானியமாகும். பார்லி கஞ்சியை குடிப்பவர்கள் மற்றும் பார்லியில் செய்யப்பட்ட உணவுகளை அதிகம் உட்கொள்பவர்கள் சருமத்தில் ஈரப்பதத்தை தக்க வைத்துக் கொள்ளலாம். தோல் சுருக்கங்கள் மற்றும் தோல் வறட்சியைத் தடுக்கிறது. மேலும் சருமத்தின் நிறத்தை மேம்படுத்தி இளமைத் தோற்றத்தை அதிகரிக்கிறது. பார்லி மாவுடன் தண்ணீர் கலந்து முகத்தில் தடவி சிறிது நேரம் கழித்து முகத்தை கழுவி வந்தால் முகம் புத்துணர்ச்சியுடன் இருப்பதோடு முகப்பரு தழும்புகளும் விரைவில் மறையும்.

இதய நோய்கள்

இதய நோயாளிகளுக்கு பார்லி ஒரு மிகசிறந்த ஒரு உணவாகும். இது உடலில் உள்ள கெட்ட கொலஸ்ட்ராலின் அளவை கட்டுப்படுத்துவதால் இதய நோயாளிகளுக்கு நன்மையை கொடுக்கிறது. இதற்கு காரணமாக இருக்கும் பார்லியில் உள்ள அமிலம் கொலஸ்ட்ராலை குறைக்க உதவுகிறது. LDL கெட்ட கொலஸ்ட்ராலை குறைத்து HDL என்ற நல்ல கொலஸ்ட்ராலின் அளவை அதிகரிக்க செய்கிறது. பார்லியை தினமும் சாப்பிட்டால் உடலில் உள்ள சத்துக்கள் அதிகரிக்கும். எனவே அனைவரும் பார்லியை தினமும் உணவுடன் சேர்த்து சாப்பிட்டு நமது உடலை ஆரோக்கியமாக வைத்துக்கொள்வோம்.

Latest Slideshows

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *

Scroll to Top