Beetroot Benefits In Tamil : பீட்ரூட் சாப்பிடுவதால் கிடைக்கும் மருத்துவ குணங்கள்
- Beetroot Benefits In Tamil : வைட்டமின்கள், தாதுக்கள், ஆரோக்கியமான கொழுப்புகள், புரதங்கள், கார்போஹைட்ரேட்டுகள் போன்ற பல்வேறு வகையான ஊட்டச்சத்துக்கள் உடலுக்குத் தேவை. இந்த ஊட்டச்சத்துக்கள் அனைத்தும் பழங்கள் மற்றும் காய்கறிகளில் இருந்து எளிதாகப் பெறலாம். இன்றைய பதிவில் தினமும் ஒரு பீட்ரூட் சாப்பிடுவதால் கிடைக்கும் நன்மைகள் பற்றி உணவியல் நிபுணர்கள் கூறிய மருத்துவ குணங்களை தெரிந்து கொள்வோம்.
- பீட்ரூட் ஒரு சூப்பர்ஃபுட், இது தினசரி உணவில் சேர்க்கப்பட வேண்டும் என்று நிபுணர்கள் தெரிவித்துள்ளனர். பொரியல், ஜூஸ், சாலட் போன்ற பல்வேறு வடிவங்களில் இவற்றை சாப்பிடலாம். இதில் உள்ள பல வகையான வைட்டமின்கள் நோய் தாக்குதல்களில் இருந்து உடலை பாதுகாக்கிறது. சோடியம், பொட்டாசியம், கால்சியம் மற்றும் பாஸ்பரஸ் போன்ற பல ஊட்டச்சத்துக்களும் இதில் நிறைந்துள்ளன. தினமும் ஒரு பீட்ரூட் சாப்பிடுவது நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிப்பது மட்டுமல்லாமல், வயிறு மற்றும் சரும ஆரோக்கியத்திற்கும் நன்மை பயக்கும். தற்போது பீட்ரூட் சாப்பிடுவதால் கிடைக்கும் மருத்துவ நன்மைகளை அறிந்து கொள்ளலாம்.
பீட்ரூட்டின் நன்மைகள் :
Beetroot Benefits In Tamil – அல்சர் குணமாக : காரமான உணவுகளை அதிகமாக உட்கொள்பவர்கள் அல்லது உணவில் சரியான வாழ்க்கை முறையை பின்பற்றாதவர்களுக்கு அல்சர் வருவதற்கான வாய்ப்புகள் அதிகம். அல்சரால் பாதிக்கப்பட்டவர்கள் பீட்ரூட்டை உணவில் அதிகம் எடுத்துக் கொள்ளலாம். ஒவ்வொரு நாளும் சாப்பிட வேண்டியத் தேவையில்லை. பீட்ரூட் சாறுடன் சிறிது தேன் கலந்து வெறும் வயிற்றில் வாரம் 3 நாட்கள் சாப்பிட்டு வந்தால் அல்சர் விரைவில் குணமாகும்.
Beetroot Benefits In Tamil – உடலில் உள்ள நச்சுக்களை நீக்க : பீட்ரூட் சிறுநீரகம், பித்தப்பை மற்றும் கல்லீரல் போன்ற உள் உறுப்புகளில் உள்ள நச்சுகளை அகற்றுவதற்கும், உடலில் உள்ள கழிவுகளை வெளியேற்றுவதற்கும் ஒரு சிறந்த தீர்வாக இருக்கிறது. ஒரு மாதத்தில் நான்கு நாட்கள் பீட்ரூட் சாறு சாப்பிட்டு வந்தால் உடல் சுத்தமாகும்.
Beetroot Benefits In Tamil – இரத்த சிவப்பணுக்களின் எண்ணிக்கை அதிகரிக்க : பீட்ரூட்டில் இரும்புச்சத்து மற்றும் வைட்டமின் பி1 அதிகம் உள்ளது, இது இரத்த சிவப்பணுக்களின் எண்ணிக்கையை அதிகரிக்கிறது. மேலும் இரத்த ஓட்டத்தை அதிகரிக்கிறது. பீட்ரூட் சாறுடன் சிறிது எலுமிச்சை சாறு சேர்த்து குடிக்க சுவையும் அதிகரிக்கும். பச்சை பீட்ரூட்டை மெல்லியதாக நறுக்கி எலுமிச்சை சாறுடன் சேர்த்து சாப்பிடுவதால் உடலில் இரத்தம் அதிகரிக்கும்.
Beetroot Benefits In Tamil – தீக்காயம் சரியாக : தோலில் தீக்காயங்கள் ஏதேனும் ஏற்பட்டால் தோலில் புண்கள் மற்றும் கொப்புளங்களை ஏற்படுத்தும். இது அதிக எரிச்சலையும் வலியையும் ஏற்படுத்துகிறது. இத்தகைய தீக்காயங்கள், கொப்புளங்கள் மற்றும் எரிச்சல் ஏற்படாமல் இருக்க பீட்ரூட்டைப் பயன்படுத்தலாம். பீட்ரூட் சாற்றை பாதிக்கப்பட்ட பகுதிகளில் தடவினால் கொப்புளங்கள் ஏற்படாமல் இருக்கும்.
Beetroot Benefits In Tamil – பாலியல் ஆரோக்கியம் மேம்பட : பீட்ரூட்டானது ஒரு இயற்கை வயகரா போல் செயல்படும். பீட்ரூட்டில் உள்ள நைட்ரேட்டுகள் உடலில் உள்ள நைட்ரிக் ஆக்சைடை வெளியேற்றவும், நரம்புகளை விரிவுபடுத்தவும், அந்தரங்க உறுப்பில் இரத்த ஓட்டத்தை அதிகரிக்கவும், பாலியல் வாழ்க்கையை மேம்படுத்தவும் உதவுகிறது.
Beetroot Benefits In Tamil – எலும்பு பிரச்சனையை தடுக்க : பீட்ரூட்டில் சிலிக்கா உள்ளது. இது எலும்புகளுக்கு தேவையான கால்சியத்தை பெற உதவுகிறது. எலும்புகள் மற்றும் பற்களுக்கு கால்சியம் அவசியம். எனவே எலும்புகள் மற்றும் பற்கள் வலுவாக இருக்க, எலும்பு பிரச்சனை உள்ளவர்கள் தினமும் ஒரு டம்ளர் பீட்ரூட் சாறு குடித்து வந்தால் நல்ல பலன் கிடைக்கும்.
Beetroot Benefits In Tamil – சர்க்கரை நோயை கட்டுப்படுத்த : சர்க்கரை வியாதி உள்ளவர்கள் பீட்ரூட்டை உணவில் சேர்த்துக் கொள்வதன் மூலம் சர்க்கரை பசியை போக்கலாம். மேலும் பீட்ரூட்டில் மிதமான கிளைசெமிக் இண்டெக்ஸ் இருப்பதால், அது சர்க்கரையை மெதுவாக குறைகிறது.
Beetroot Benefits In Tamil – கெட்ட கொலஸ்ட்ராலைக் குறைக்க : பீட்ரூட்டில் கரையக்கூடிய நார்ச்சத்து, ஃபிளேவோனாய்டுகள் மற்றும் பீட்டா சயனின் உள்ளது. பீட்டா சயனின்கள் பீட்ரூட்டுக்கு நிறத்தை அளிப்பதோடு செல்களை பலப்படுத்துகிறது. மேலும் பீட்ரூட் இரத்த நாளங்களில் படிந்துள்ள கெட்ட கொழுப்புகளை கரைத்து மாரடைப்பு மற்றும் பக்கவாதம் போன்ற பிரச்சனைகளை தடுக்கிறது.
Beetroot Benefits In Tamil – வயிற்று பிரச்சனை போக்க : சர்க்கரை நோயாளிகள் உணவுக்கு முன் பீட்ரூட்டை சாப்பிடலாம். இப்படி சாப்பிடுவதால் உடலுக்கு இயற்கையான சர்க்கரை கிடைப்பது மட்டுமின்றி செரிமான அமைப்பும் மேம்படும். அதுமட்டுமின்றி, சிறுநீரகம், பித்தப்பை, கல்லீரல் போன்ற உள்ளுறுப்புகளில் உள்ள நச்சுக்களை வெளியேற்றவும், உடலில் உள்ள கழிவுகளை வெளியேற்றவும் பீட்ரூட் ஒரு சிறந்த மருந்தாக உள்ளது.
Beetroot Benefits In Tamil – செரிமானத்தை மேம்படுத்த : பீட்ரூட்டில் நார்ச்சத்து அதிகம் உள்ளது. செரிமான மண்டலத்தில் ஆரோக்கியமான பாக்டீரியாக்கள் இருப்பதால் நோய் எதிர்ப்பு சக்தியை பலப்படுத்துகிறது. இதனால் நோய் வாய்ப்படும் அபாயத்தையும் குறைக்கலாம். இது தவிர, பீட்ரூட்டில் நார்ச்சத்து நிறைந்துள்ளது மற்றும் உங்கள் செரிமானத்தை மேம்படுத்தவும், மலச்சிக்கலை போக்கவும் உதவும். இவ்வாறு பல நன்மைகள் கொண்ட பீட்ரூட்டை சாப்பிட்டு நன்மை பெறுங்கள்.
Latest Slideshows
-
May Day History : மே தினம் உருவானது எப்படி? தோற்றம், முக்கியத்துவம் மற்றும் கொண்டாட்டம்!
-
Best Foods for Liver Health : கல்லீரல் ஆரோக்கியத்தை மேம்படுத்தும் சிறந்த 10 உணவுகள்.!
-
SSC Jobs 2026 : எஸ்.எஸ்.சி குரூப் டி மற்றும் குரூப் சி பிரிவில் 731 பணியிடங்கள்.. உடனே விண்ணப்பிங்க!
-
DC vs PBKS Highlights : டி20 கிரிக்கெட் வரலாற்றில் 265 ரன்களை சேஸ் செய்து வரலாறு படைத்தது பஞ்சாப்!
-
Crude Oil Rates Today : இன்றைய கச்சா எண்ணெய் விலை நிலவரம்
-
Kirni Fruit Benefits in Tamil : 'கிர்ணி' பழத்தில் கொட்டி கிடக்கும் நன்மைகள்!
-
PGCIL Recruitment 2026 : மின்சாரத் துறையில் 660 காலியிடங்கள்.. உடனே விண்ணப்பிங்க!
-
RCB vs DC IPL 2026 Highlights : பெங்களூரு அணியை வீழ்த்தியது டெல்லி கேபிடல்ஸ்.!
-
Mr. X Movie Review : ஜி20 மாநாடு, அணு ஆயுதத் தாக்குதல் என சுவாரஸ்யமாக இருக்கிறதா மிஸ்டர் எக்ஸ்?
-
Fun Facts About Fireflies : மின்மினிப் பூச்சிகள் பற்றிய வேடிக்கையான உண்மைகள்!