Gistak Media – Cinema News | Trending News | Latest News

ஆரோக்கியத்தை அதிகரிக்கும் கீரைகளின் நன்மைகள் | Benefits of Eating Spinach

Benefits of Eating Spinach: நாம் உண்ணும் உணவில் காய்கறிகளை சேர்த்து உண்ணுவது எவ்வளவு முக்கியமோ அதைவிட முக்கியம் கீரைகளை சேர்த்து உண்ணுவது. தினம் ஒரு கீரையை உணவில் சேர்த்துக்கொண்டால் நம் உடல் நோயின்றி ஆரோக்கியமாக இருக்கும். கீரைகளில் இரும்புச்சத்து, நார்ச்சத்து, சுண்ணாம்புச்சத்து, கரோடின்  போன்றவை அதிக அளவில் இருப்பதால் காய்கறிகளை விடவும் இது சத்து மிக்க ஒரு உணவாக இருக்கிறது. ஒவ்வொரு கீரையிலும் ஒவ்வொரு வகையான மருத்துவ குணங்கள் நிறைந்துள்ளது. எனவே இதை உணவாக உட்கொள்ளும்போது நோயில் இருந்து நம்மை பாதுகாத்துக் கொள்ளலாம்

கீரையின் வகைகளும் அதன் நன்மைகளும்:

  • அகத்திக்கீரை – இரத்தத்தை சுத்தமாக்கி பித்தத்தை தெளியவைக்கும்.
  • காசினிக்கீரை – சிறுநீரகத்தை நன்கு செயல்பட வைக்கும் மற்றும் உடல் வெப்பத்தை தனிக்கும்.
  • சிறுபசலைக்கீரை – சரும நோய்களை தீர்க்கும். பால்வினை நோயை குணமாகும்.
  • பசலைக்கீரை – தசைகளை பலமடையச் செய்யும்.
  • கொடிப்பசலைக்கீரை – வெள்ளை விளக்கும், நீர்க்கடுப்பை நீக்கும்.
  • மஞ்சள் கரிசலை – கல்லிரலை பலமாக்கும், காமாலையை விலக்கும்.
  • குப்பைக்கீரை – பசியைத் தூண்டும், வீக்கம் வத்தவைக்கும்.
  • அரைக்கீரை – ஆண்மையை பெருக்கும்.
  • புளியங்கீரை – சோகையை விலக்கும் கண்நோய் சரியாக்கும்.
  • பரட்டைக்கீரை – பித்தம், கபம் போன்ற நோய்களை விலக்கும்.
  • பொன்னாங்கண்ணிக் கீரை – உடல் அழகையும், கண் ஒளியையும் அதிகரிக்கும்.
  • சுக்கா கீரை – இரத்த அழுத்தத்தை சீர் செய்யும், சிரங்கு மற்றும் மூலத்தை போக்கும்.
  • வெள்ளை கரிசலைக்கீரை – இரத்த சோகையை நீக்கும்.
  • முருங்கைக்கீரை – நீரிழிவை நீக்கும், கண்கள் உடல் பலம்பெறும், சளி இருமலை சரி செய்யும்.
  • வல்லாரைக் கீரை – மூளைக்கு பலம் தரும்.
  • முடக்கத்தான் கீரை – கை,கால், முடக்கம் நீக்கும், வாயு விலகும்.
  • புண்ணக்கீரை – சிரங்கு, சீதளம் விலகும்.
  • புதினாக் கீரை – இரத்தத்தை சுத்தம் செய்யும். அஜீரணத்தை போக்கும்.
  • நஞ்சு முண்ணான் கீரை – விஷம் முறிக்கும்.
  • தும்பை கீரை – அசதி, சோம்பல் நீக்கும்.
  • முள்ளங்கிக்கீரை – நீரடைப்பு நீக்கும்.
  • புளிச்சக்கீரை – கல்லீரலை பலமாக்கும், மாலைக்கண் நோயை விலக்கும்.
  • மணலிக்கீரை – வாதத்தை விலக்கும், கபத்தை கரைக்கும்.
  • மணத்தக்காளி கீரை – வாய் மற்றும் வயிற்றுப்புண் குணமாக்கும், தேமல் போக்கும்.
  • முளைக்கீரை – பசியை ஏற்படுத்தும், நரம்பு பலமடையும்.
  • சக்கரவர்த்திக் கீரை – தாது விருத்தியாகும்.
  • வெந்தயக்கீரை – மலச்சிக்கலை நீக்கும், மண்ணீரல் மற்றும் கல்லீரலை பலமாக்கும், வாத காச நோய்களை விலக்கும்.
  • தூதுவளை – சரும நோயை விலக்கும், சளி தொல்லை நீக்கும்.
  • தவசிக்கீரை – இருமலை போக்கும்.
  • சாணக்கீரை – காயம் ஆற்றும்.
  • வேளைக்கீரை – பசி எடுக்க உதவும், காது வலி மற்றும் வாயு பிரச்சனைகளை தீர்க்கும்.
  • விழுதிக்கீரை – பசியை தூண்டும்.
  • கொடிகாசினிக்கீரை – பித்தம் தணிக்கும்.
  • துத்திக்கீரை – வாய் மற்றும் வயிற்றுப்புண் அகற்றும். வெள்ளை, மூலம் விலக்கும்.
  • மூக்கிரட்டைக்கீரை – சளியை அகற்றும்.
  • நறுந்தாலிக் கீரை – இருதய நோய்கள் மற்றும் இருமல், ஜுரம், நீரிழிவு நோய்களை சரி செய்யும்.

கீரையை எப்பொழுதெல்லாம் சாப்பிடக் கூடாது?

கீரையை இரவு நேரங்களில் உண்ண கூடாது. ஏனென்றால் இதில் பச்சையம் இருக்கிறது அது மட்டுமின்றி இதில் நார்ச்சத்து நிறைந்துள்ளது இதனால் இரவில் கீரையை உணவில் சேர்த்துக்கொண்டால் செரிமான பிரச்சனைகள் ஏற்படும் மேலும் கீரையின் சரியான ஊட்டச்சத்து உடலுக்கு கிடைக்காது. இந்த காரணங்களால் கீரையை இரவு உணவுகளில் தவிர்ப்பது நல்லது. காலை உணவுகளிலும், மதிய உணவுகளிலும் கீரையை எடுத்துக்கொண்டால் செரிமான பிரச்சனைகள் ஏதும் இன்றி உடலுக்கு தேவையான அனைத்து ஊட்டச்சத்துகளும் கிடைக்கும். மேலும் பால் மற்றும் தயிர் சார்ந்த உணவுகளுடனும்  சேர்த்து சாப்பிடக்கூடாது அப்படி சாப்பிட்டால் ஒவ்வாமை உணவாக மாறிவிடும். இதனாலும் நம் ஆரோக்கியம் பாதிக்கும்.

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *

Latest Slideshows

Scroll to Top