Gistak Media

பச்சை பயிரில் இவ்வளவு நன்மைகளா?

பச்சை பயறு (Green Gram) என கூறப்படும் பாசி பயறு (Mung bean) நம் உடல் இயக்கத்திற்கும், ஆரோக்கியத்திற்கும் உணவு பெரும்பங்கு வகிக்கிறது. நாம் உண்ணும் உணவு பொருட்களில் ஒவ்வொரு விதமானச் சத்துக்கள் நிறைந்துள்ளது. குறிப்பாக பயிர் வகைகளை உட்கொள்வது உடலுக்கு மிகவும் நல்லது அதில் ஊட்டச்சத்துக்கள் நிறைந்துள்ளது. அதிலும் முளைகட்டிய பயிர்களை சாப்பிட்டால் உடல் வலிமையாகவும், ஆரோக்கியமாக  இருக்கும். விளையாட்டு வீரர்கள், உடற்பயிற்சியாளர்கள், உடல் பலவீனமாக உள்ளவர்கள் தங்களின் உடல் ஆற்றல் (Energy) க்காக முளைக்கட்டிய பயிர்களை தினசரி தங்கள் உணவுகளில் சேர்த்துக் கொள்கின்றனர். பயிர் வகைகளில் குறிப்பிட்டு சொல்லக்கூடிய அதிக அளவில் பயன்படுத்தக்கூடிய பச்சைப் பயிரைத் (Green Gram) தான் நாம் இந்த பதிவில் பார்க்க இருக்கிறோம்.

சிறு பயிறு என்று அழைக்கப்படும் பச்சை பயறுக்கு (Green Gram) பாசிப் பயறு (Mung bean) என்னும் இன்னொரு பெயரும் உண்டு இந்த பருப்பை அனைத்து வயதினரும் உட்கொள்ளலாம் இதில் புரோட்டீன், இரும்புச்சத்து, பொட்டாஷியம், சுண்ணாம்புச் சத்து, நார்ச்சத்து  போன்ற சத்துக்கள் நிறைந்துள்ளது. இது உடலில் நோய்கள் தாக்குவதை தடுப்பது மட்டுமின்றி கூந்தலுக்கும், சருமத்துக்கும் மிகவும் நல்லது. இந்தப் பயிரை அதிகம் உணவில் சேர்த்துக் கொண்டால் என்னென்ன நன்மைகள் என்று பார்ப்போம்.

10 Benefits Of Green Gram (Mung bean)

  1. உடல் எடையை குறைக்கவும், உடல் எடையை சீராக வைத்துக்கொள்ளவும் பச்சை பயிர் (Green Gram) மிகவும் உதவியாக இருக்கிறது. இதற்கு காரணம் இந்த பயிரில் உள்ள கலோரிகளே இவை வயிற்றை நிறைவாக வைத்துக்கொள்கிறது. எனவே உடல் எடையை குறைக்க நினைப்பவர்கள் இந்த பயிரை தினமும் சாப்பிடலாம்.
  2. இரத்த அழுத்தத்தை கட்டுப்பாட்டில் வைத்துக்கொள்ளவும், ( Cholesterol ) இரத்த கொழுப்புகளின் அளவை குறைக்கவும் பச்சை பயிறு (Green Gram) பெரிதும் உதவுகிறது.
  3. இரும்புச்சத்து பிரட்சனை உள்ளவர்கள் தினமும் பச்சை பயிரை (Green Gram) சாப்பிட்டால், உடலுக்கு தேவையான இரும்புச்சத்து அதிகரித்து இரத்த சோகைப் பிரச்னையில் இருந்து விடுபடலாம்.
  4. பாசிப் பயிர் (Mung bean) 41 என்கிற குறைந்த க்ளைசீமிக் குறியீட்டு எண்ணை கொண்டுள்ளது, இதனால் இரத்த சர்க்கரையின் அளவை உடனே உயர்த்தாது. மேலும் பச்சை பயிரில் (Green Gram) நார்ச்சத்து அதிகமாக உள்ளதால் டைப்-2 (Type2) நீரிழிவு நோய் ஏற்படும் அபாயத்தை குறைக்க முடியும்.
  5. இந்த பயிரில் ப்ளவனாய்ஸ் போன்ற ஏராளமான ஆன்டி ஆக்சிடெண்ட்கள் நிறைந்து இருக்கிறது. இந்த ஆன்டி ஆக்சிடெண்டுகள் புற்றுநோய் செல் உருவாவதற்கு எதிராக செயல்படுகிறது.
  6. வயிற்றுப்புண் குணப்படுத்துதலில் பச்சை பயிறு மகத்தானது. இது காரத்தன்மையை கட்டுப்படுத்துவதால் அல்சர் பிரட்சனையில் உள்ளவர்கள் இதை உணவில் பயன்படுத்தலாம்.
  7. பாசிப் பயிறு (Mung bean)அடிக்கடி சாப்பிடுவதால் நினைவு திறன் அதிகரிக்கும். மேலும் கர்ப்பிணி பெண்கள் இந்த பயிரை வேக வைத்து சாப்பிட எளிதில் ஜீரணம் ஆகும். அதிலுள்ள சத்துக்கள் நேரடியாக கருவில் இருக்கும் குழந்தைக்கும் சேரும்.
  8. பாசிப் பயிறு குழந்தைகளுக்கும், வளரும் இளம் பருவத்தினருக்கும் சிறந்த ஊட்டச்சத்து உணவு என்று மருத்துவர்கள் பரிந்துரைக்கின்றனர். வயிற்றுப் பிரச்சனை உள்ளவர்கள், காய்ச்சல் மற்றும் அம்மை நோயால் பாதிக்கப்பட்டவர்கள் பாசிப்பயிறு (Mung bean) வேகவைத்த நீரை குடித்தால் இந்த பிரச்னைகள் தீரும். மேலும் காலரா, டைபாய்டு, மலேரியா போன்ற நோய்களையும் குணமாக்குகிறது.
  9. பாசிப் பயிறு (Mung bean) ஆரோக்கியம் மட்டும் இன்றி கூடுதல் அழகையும் தருகிறது. இந்தப் பயிரை குளிக்கும்போது சோப்புக்கு பதிலாக மாவாக உடலில் தேய்த்துக் குளிக்க சருமம் அழகாக இருக்கும். மேலும் தலைக்கு சீயக்காயை போல தேய்த்துக் குளிக்க பொடுகு பிரச்சனை தீரும்.
  10. பாசிப் பயிறு (Mung bean) மாவை முகத்திற்கும் பயன்படுத்த முத்தத்தில் உள்ள பருக்கள் மறையும். முகம் பொலிவாகவும், ஆரோகக்கியமாகவும் இருக்கும்.

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *

Latest Slideshows

Scroll to Top