Benefits Of Mehndi (Maruthani): மருதாணியின் மருத்துவ குணங்கள்
மருதாணி (Maruthani) என்றவுடன் அனைவருக்கும் நினைவில் வருவது சுப நிகழ்ச்சிகள் தான். ஏனென்றால் பெண்களின் அழகுசார்ந்த பொருட்களில் இதுவும் ஒன்று. மருதாணி (Maruthani) இலைகள் நிறம் தர கூடியவை. எந்த சுபநிகழ்ச்சிகளாக இருந்தாலும் பெரியவர்கள் முதல் சிரியவர்கள்வரை மருதாணியை கைகளிலும், கால்களிலும் தங்களுக்கு பிடித்த வடிவங்களில் வைத்துக் கொள்வார்கள். அவை பார்ப்பதற்கு அழகாக காட்சி அளிக்கும்.
பெரும்பான்மை யானவர்கள் இக்காரணங்களுக்கு தான் மருதாணியை அதிகம் பயன்படுத்துகிறார்கள். ஆனால் இதில் எவ்வளவு மருத்துவ நன்மைகள் நிறைந்துள்ளது என்பதை யாரும் அறிவதில்லை. மருதாணி (Maruthani) ஒரு சிறந்த கிருமிநாசினி. மருதாணிக்கு வேறு பெயர்களும் உண்டு மருதோன்றி, ஐவனம், ஐனா இலை, அழவனம் ஆகும்.
இது மட்டுமின்றி சித்தர்கள் இதற்கு அட்டகர்ம மூலிகை என்று சொல்லி இருக்கிறார்கள். ஏனென்றால் இந்த மூலிகையை நம் வீட்டில் வைக்கும்போது எந்த விதமான கிருமிகள் மற்றும் பூச்சிகளாக இருந்தாலும் அவற்றில் இருந்து நம்மை பாதுகாக்கும். இந்த மருதாணி இலை (Maruthani Leaves) மட்டுமின்றி பூ, காய், வேர், விதை, பட்டை போன்ற அனைத்து பாகங்களிலும் மருத்துவ பயன்கள் நிறைந்துள்ளது.
மருதாணியை கைகளில் வைக்கும்போது அதன் சிவக்கும் தன்மையை பொறுத்து உடலில் உள்ள நோய்களை அரிந்து கொள்ள முடியும். மருதாணி (Maruthani) நன்கு சிவக்கவில்லை என்றால் உடலில் இரத்தம் சுத்தமில்லை என்று இயற்கை மருத்துவத்தில் கூறப்படுகிறது. இது கைகளில் வர்ணம் சேர்க்கும் நல்ல அழகு பொருள் மட்டுமின்றி பல்வேறு மருத்துவ நன்மைகளையும் பெற்றது. மருதாணியை அரைத்து கை, கால்களில் வைத்துக் கொள்ளுவதால் கிடைக்கும் முக்கிய பயன்களையும், அதன் வேறு சிறந்த மருத்துவ பயன்களையும் பார்ப்போம்
மருதாணியின் (Maruthani) நன்மைகள்:
- மருதாணி இலைகளை (Maruthani Leaves) அரைத்து உள்ளங்கை மற்றும் கால்களில் வைத்துக் கொள்வதின் மூலம் அதிக உடல்சூடு, பித்தம் குறைந்து உடல் குளிர்ச்சி அடையும்.
- மருதாணி (Maruthani) நம் கண்களுக்கு தெரியாத விஷக்கிருமிகளை அழிக்கும் ஆற்றல் கொண்டது மருதாணியை அரைத்து அடிக்கடி வைக்கும்போது கை மற்றும் கால் நகங்களில் ஏற்படும் நகச்சொத்தையை குணப்படுத்தும்.
- மருதாணி இலைகளை (Maruthani Leaves) கைகளில் வைப்பதன் மூலம் எதிர்மறை ஆற்றல்கள் விலகி நேர்மறை ஆற்றல் பெருகும். மேலும் மருதாணி இலையை கையில் வைப்பதன் மூலம் மற்றும் அதன் சாறை முகரும்போதும் மன அழுத்தத்தை குறைத்து நிம்மதியையும், மன மகிழ்ச்சியையும் அதிகரிக்கச் செய்யும்.
- மருதாணி இலைகளுடன் வேப்பிலையை சேர்த்து அரைத்து புண்கள், காயங்களின் மீது பூசிவரும்போது குணமாகும். இந்த பசையை தீ காயங்கள், அம்மை கொப்புளங்கள் மீது பூசிவந்தால் விரைவில் ஆரும், தழும்புகள் ஏற்படுவதை குறைக்கும்.
- பொடுகு தொல்லை இருந்தால். மருதாணி (Maruthani) இலை பொடியுடன், வேப்பிலை பொடி கலந்து தலையில் தேய்த்து சிறிது நேரம் கழித்து குளித்து வந்தால் பொடுகு தொல்லை நீங்கும். முடி உதிர்வு பிரட்சனை குறையும். மேலும் மருதாணியின் இலை மற்றும் பட்டையை சேகரித்து அதை காய வைத்து குளியல் பொடி தயாரிப்பில் பயன்படுத்தி குளித்து வந்தால் தோல் வியாதிகள் குறைய ஆரம்பிக்கும்.
- மருதாணி இலைகளை (Maruthani Leaves) சிறிதளவு எடுத்து அதனுடன் சுத்தமான மஞ்சள் தூள் சேர்த்து அரைத்து பசும்பாலில் கலந்து தினமும் அருந்தி வந்தால் மஞ்சள் காமாலை நோய் பாதிப்புகள் குறையும், கல்லீரல், மண்ணீரல், கணையம், பித்தப்பை போன்ற உறுப்புகளின் ஆரோக்கியம் அதிகரிக்கும்.
- கல்லீரலில் தங்கியிருக்கும் நச்சுக்களை வெளியேற்ற கொஞ்சம் மருதாணி (Maruthani) இலைகளை, தூய்மையான தண்ணீரில் சில மணி நேரம் ஊற வைத்து அந்த நீரை அருந்தினால் கல்லீரல், பித்தப்பை, கணையம் போன்ற அனைத்து உறுப்புகளில் தங்கியிருக்கும் நச்சுக்கள் வெளியேறி இவ்வுறுப்புகள் ஆரோக்கியமாக இருக்கும்.
- மருதாணி இலைகள் (Maruthani Leaves) உறவைக்கப்பட்ட தண்ணீரை அருந்தி வருபவர்களுக்கு இரத்த அழுத்தம் சமச்சீரான அளவில் இருக்கச் செய்கிறது.
- இதயத்திற்கு இரத்தத்தை கொண்டு செல்லும் இரத்த நாளங்களில் இரத்தம் கட்டிக்கொள்ளும் நிலை ஏற்படாமல் தடுக்கும் ஆற்றல் மருதாணி இலைகளுக்கு (Maruthani Leaves) உண்டு.
- இதயம் சம்பந்தமான நோய்கள் ஏற்படக்கூடாது என்று நினைப்பவர்கள் மருதாணி இலை (Maruthani Leaves) தண்ணீரை அருந்தி வருவது நல்லது.
- சுத்தமான தேங்காய் எண்ணெயில் தேவையான அளவு மருதாணி இலைகளை (Maruthani Leaves) போட்டு காய்ச்சி, அந்த எண்ணெய்யை தலையில் தடவி வர பொடுகு, முடி உதிர்வு, இளநரை, ஆண்களுக்கு வழுக்கை விழுவது போன்ற பிரட்சனைகளை தீர்க்கிறது.
- பெண்கள் அடிக்கடி தங்களின் கைகளில் இந்த இலைகளை அரைத்து இட்டுக்கொள்வதால் கைகளில் இருக்கும் கடின தன்மை நீங்கி கைகள் மிருதுவாகும்.
- மருதாணியை விரல்களின் நகங்களின் மீது இட்டுக்கொள்வதால் நகச்சுத்து பாதிப்பு ஏற்படாமல் தடுக்கும்.
- மருதாணி இலைகளில் இருந்து பெறப்படும் எண்ணெய்யை வீக்கம் ஏற்பட்டுள்ள இடங்களில் தடவி வருபவர்களுக்கு வீக்கங்கள் விரைவில் வற்றும்.
- மருதாணி (Maruthani) கொழுந்து இலைகளை வெதுவெதுப்பான நீரில் ஊறவைத்து 1 மணி நேரம் கழித்து அந்த நீரை வாயில் ஊற்றி சில வினாடிகள் வைத்திருந்து நன்றாக கொப்பளிக்க வேண்டும். வாய் முழுக்க தண்ணீரை உற்ற வேண்டும். இவ்வாறு செய்து வந்தால் வாய்ப்புண் இரண்டே நாளில் குணமாகும்.
- ஆழ்ந்த தூக்கம் வர உலர்ந்த மருதாணி (Maruthani) பூக்களை தலையணைகளில் பரப்பி உபயோகிக்கலாம்.
- மருதாணி இலைகளை (Maruthani Leaves) தண்ணீரில் ஊறவைத்து, வாய் கொப்பளித்து வருவதன் மூலம் தொண்டை கம்மல், தொண்டை கரகரப்பு குணமாகும்.








