Benefits Of Walking : "தினமும் 4,000 (Steps) நடந்தால், மரணத்தை தள்ளி போடலாம்"
Benefits Of Walking :
Benefits Of Walking : நாம் தினமும் 4,000 அடிகள் நடந்தால் மரணம் முதல் இதய நோய் பாதிப்புகள் வரை தள்ளி போடலாமென போலந்து மருத்துவ பல்கலைக்கழகம் சமீபத்தில் நடத்திய ஆய்வு முடிவுகளில் கூறப்பட்டுள்ளது. போலந்து நாட்டில் உள்ள “லாட்ஸ் மருத்துவ பல்கலைக்கழகம்” (Lodz Medical University) சுமார் 2 லட்சத்து 27 ஆயிரம் பேரின் தரவுகளை வைத்து ஆய்வு ஒன்று நடத்தியது. அந்த ஆய்வு முடிவுகளில் கூறப்பட்டுள்ளதாவது.
அதிக தூரம் நடைப்பயிற்சி மேற்கொள்வோருக்கு ஏராளமான நன்மைகள் கிடைக்கிறது. ஒருவர் இவ்வளவு தூரம் தான் நடக்க வேண்டும் என உச்சபட்ச அளவீடுகள் என்று எதுவும் இல்லை. இருப்பினும், இது உங்கள் உடல் நலம், திறன் மற்றும் ஆரோக்கியத்தை பொறுத்தது.
இதய நோயின் பாதிப்பில் இருந்து நம்மை பாதுகாக்க, தினமும் 2,337 அடிகள் நடப்பது அதாவது 25 நிமிடங்கள் தொடர்ந்து நடைப்பயிற்சி மேற்கொள்வது மிகவும் அவசியமானதாகும் (Benefits Of Walking) என்று மருத்துவ ஆய்வு முடிவுகளில் தெரிவிக்கப்பட்டுள்ளது. மிகவும் முக்கியமானது இளம் வயதில் ஏற்படும் மரணத்தை தடுக்க, தினமும் 3,967 அடிகள் நடப்பது, அதாவது 40 நிமிடங்கள் தொடர்ந்து நடைப்பயிற்சி செய்வது அவசியம். நாம் நடக்கும் ஒவ்வொரு 1,000 அடிகள் அதிகரிப்பிற்கும் 15 சதவீதம் அளவுக்கு அபாயம் குறைகிறது.
60 வயதிற்கு மேற்பட்டோர் எனில், தினமும் 6,000 முதல் 10,000 அடிகள் வரை நடப்பவருக்கு, அதே வயதுடைய நடைப்பயிற்சி மேற்கொள்ளாதவர்களோடு ஒப்பிடும்போது 42 சதவீதம் அபாயம் குறைவாக இருக்கும். இது ஆண், பெண் என இருபாலினத்துக்கும் பொருந்தும் என இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.
உலக சுகாதார நிறுவனம் (WHO) :
உலக சுகாதார அமைப்பின் கூற்றுப்படி, உட்கார்ந்த வாழ்க்கை முறை, பல்வேறு நோய் பாதிப்புக்கு மூல காரணமாக விளங்குகிறது என்றும் உடற்பயிற்சி செய்வதை வழக்கமாக்கி கொள்ளாதோருக்கு, டைப் 2 நீரிழிவு, இதய பாதிப்பு, புற்றுநோய் மற்றும் நாள்பட்ட நோய் பாதிப்பு அபாயம் அதிகரிக்கிறது.
குறிப்பு :
Benefits Of Walking : நடை பயிற்சி அதிகரிக்க, லிப்ட் போன்ற மின்சாதனங்களை பயன்படுத்துவதை தவிர்த்து, மாடிப்படிகளில் நடந்து செல்லலாம். பார்க்கிங்கில் வாகனங்களை சற்று தூரமாக நிறுத்தி விட்டு, அலுவலகத்திற்கு நடந்து செல்லலாம். மொபைல் போனில் பேசும் நேரங்களில், சற்று நடக்க முயற்சிக்கலாம். மதிய உணவுக்கு பிறகு, சிறிது நடப்பது செரிமானத்தை அதிகரிக்கும்.
Latest Slideshows
-
May Day History : மே தினம் உருவானது எப்படி? தோற்றம், முக்கியத்துவம் மற்றும் கொண்டாட்டம்! -
Best Foods for Liver Health : கல்லீரல் ஆரோக்கியத்தை மேம்படுத்தும் சிறந்த 10 உணவுகள்.! -
SSC Jobs 2026 : எஸ்.எஸ்.சி குரூப் டி மற்றும் குரூப் சி பிரிவில் 731 பணியிடங்கள்.. உடனே விண்ணப்பிங்க! -
DC vs PBKS Highlights : டி20 கிரிக்கெட் வரலாற்றில் 265 ரன்களை சேஸ் செய்து வரலாறு படைத்தது பஞ்சாப்! -
Crude Oil Rates Today : இன்றைய கச்சா எண்ணெய் விலை நிலவரம் -
Kirni Fruit Benefits in Tamil : 'கிர்ணி' பழத்தில் கொட்டி கிடக்கும் நன்மைகள்! -
PGCIL Recruitment 2026 : மின்சாரத் துறையில் 660 காலியிடங்கள்.. உடனே விண்ணப்பிங்க! -
RCB vs DC IPL 2026 Highlights : பெங்களூரு அணியை வீழ்த்தியது டெல்லி கேபிடல்ஸ்.! -
Mr. X Movie Review : ஜி20 மாநாடு, அணு ஆயுதத் தாக்குதல் என சுவாரஸ்யமாக இருக்கிறதா மிஸ்டர் எக்ஸ்? -
Fun Facts About Fireflies : மின்மினிப் பூச்சிகள் பற்றிய வேடிக்கையான உண்மைகள்!