Gistak Media – Cinema News | Trending News | Latest News

வெற்றிலையின் மருத்துவ பயன்கள் | Benifits of Betel Leaf in Tamil

வெற்றிலை (Betel Leaf) தாவர வகைகளில் கொடி வகையைச் சேர்ந்தது. இது மலேஷியாவில் தோன்றியதாகும். இந்தியாவிலும் இந்தோனேஷியாவிலும் வளர்க்கப்படுகிறது. இந்தியாவில் குறிப்பாக கும்பகோணம், தஞ்சாவூர், தேனீ, நாமக்கல், வேலூர், கரூர், திருச்சி போன்ற மாவட்டங்களில் வெற்றிலையை பணப்பயிராக பயிரிடுகின்றனர். நாம் அறிந்த வகையில் வெற்றிலை என்பது சுப நிகழ்ச்சிகளில் விருந்து முடிந்த பிறகு சாப்பிடுவதை ஒரு வழக்கமாக கொண்டுள்ளார்கள். குறிப்பாக வயதானவர்கள் தங்களின் பொழுதுபோக்கிற்காக இந்த வெற்றிலையை அதிகம் சாப்பிடுகிறார்கள். சிலர் இதன் பயனை அறியாமல் நிறம் மாறும் தன்மைக்காக சாப்பிடுகிறார்கள்.

இன்னும் சிலர் அசைவ உணவு சாப்பிட்டாலே வெற்றிலை (Betel Leaf) சாப்பிடுவதை பழக்கமாக வைத்திருக்கிறார்கள் ஏனெனில் அதிலுள்ள நறுமணசுவை மற்றும் வாய்  புத்துணர்ச்சியே இதற்கு காரணம். இது மட்டும் இன்றி நம் நாட்டின் அனைத்து சுப நிகழ்ச்சிகளுக்கும் வெற்றிலையை பயன்படுத்தும் மரபு இன்றும் வழக்கத்தில் உள்ளது. மேற்கூறிய வகைகளில் எல்லாம் வெற்றிலை (Betel Leaf) பயன்படுகிறது என்றெல்லாம் பரவலாக பார்த்திருக்கிறோம் ஆனால் அதில் எந்த அளவிற்கு மருத்துவ குணம் நிறைந்திருக்கிறது என்பதை இன்றய காலகட்டத்தில் பலரும் அறிந்ததில்லை அவை என்னவென்று பின்வரும் பதிவில் பார்ப்போம். 

வெற்றிலையில் வைட்டமின் சி, கரோடின், தியாமின், நியாசின், ரிபோப்ஃளேவின், நார்ச்சத்து போன்ற சத்துக்கள் நிறைந்துள்ளன. குறிப்பாக கால்சியம் மற்றும் இரும்புச்சத்து அதிகம் உள்ளது. வெற்றிலையின் இலை மட்டுமின்றி அதன் வேரிலும் மருத்துவ பயன்கள் நிறைந்துள்ளது.   

  • வெற்றிலை(Betel Leaf) நச்சுக்களை வெளியேற்றும் தன்மை கொண்டது இது புற்று நோய்களில் இருந்து உடலை பாதுகாக்கிறது.
  • அஜீரணத்தை நீக்கி செரிமானத்தை தூண்டுகிறது. இதனால்தான் விருந்தின் கடைசியில் வெற்றிலையையும்  சாப்பிடுகின்றனர்.
  • இதில் உள்ள ஆன்டி பேக்டீரியல் என்னும் வேதிப்பொருளானது தொண்டையில் உண்டாகும் புண்களை சரி செய்து தொண்டை வலியிலிருந்து நிவாரணம் தருகிறது.
  • வெற்றிலையில் (Betel Leaf)ல்  உள்ள வேதிப் பொருட்கள் மூச்சு முட்டல் போன்ற சுவாச கோளாறுகளை சரி செய்கிறது. மேலும் குளிர் காலங்களில் ஏற்படும் ஜலதோஷம், இருமல் போன்றவற்றிற்கு பெரும் அளவில் உதவி செய்கிறது. இதில் உள்ள நார்ச்சத்து சீதளத்தை சரிசெய்கிறது.
  • வெற்றிலையில் சிறிது கடுகு எண்ணெய் தடவி சூடு செய்து அதை நெஞ்சில் வைத்தால் சளி, இருமல் சரி ஆகும்.
  • வெற்றிலையை (Betel Leaf) மெல்லுவதால் ஈறுகளில் இருக்கின்ற வலி, இரத்த கசிவு ஆகியவைகளை நீக்கி பற்கள் வலுப்பெறவும் ஈறுகளை தயார் செய்கிறது.
  • இது வயிற்றில் உள்ள வாயுவை வெளி தள்ளும் தன்மை கொண்டது. முளை,இதயம், கல்லீரல், மண்ணீரல், கணையம் ஆகியவற்றை பலப்படுத்தி ஆரோக்கியத்தை தரக்கூடியது.
  • இந்த இலை நரம்பு மண்டலத்திற்கு பலம் தருவதால் படிக்கும் குழந்தைகளுக்கு இதன் சாறு கொடுத்துவர நியாபக சக்தியை அதிகரிக்கும்.
  • வெற்றிலையை (Betel Leaf) அடிப்பட்ட உடல் காயத்திற்கு சிறந்த மருந்தாக விளங்குகிறது. இதை தினமும் சாப்பிட்டால் வெளியில் உள்ள புண்களையும், வயிற்றுப்புண்களையும் சரி செய்கிறது. மேலும் இது கிருமி நாசினியாகவும் செயல் படுகிறது.
  • மூட்டு வலியையும் சுலபமாக குறைத்து விடுகிறது. வலி இருப்பவர்கள் வெற்றிலையின் சாறை தினமும் மூட்டு பகுதியில் தடவி வர மூட்டு வலி சரியாகும்.
  • வெற்றிலையில் (Betel Leaf) ஆன்டிபேக்டீரியா நிறைந்துள்ளதால் உடலில் உள்ள பேக்டீரியாக்களை அழித்து சுவாசப் புத்துணர்ச்சிப் பெற பெரிதும் உதவுகிறது. இது உடலில் உள்ள பிஎச் அளவை பராமரிக்க உதவுகிறது.
  • தலை வலியையும் சரிசெய்கிறது. தலை வலியால் அவதிப்படுபவர்கள் இந்த இலையை இடித்து நெற்றியில் தடவினால் தலை வலி குணமாகும்

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *

Latest Slideshows

Scroll to Top