Bharat Taxi : ஓலா, ஊபர் நிறுவனங்களுக்கு போட்டியாக மத்திய அரசின் ''பாரத் டாக்ஸி'' சேவை அறிமுகம்..!
இந்தியா முழுவதும் டாக்ஸி சேவைகளில் தனியார் நிறுவனங்கள் பெரிய அளவில் ஆதிக்கம் செலுத்தி வருகின்றன. சென்னை, மும்பை, கொல்கத்தா, போன்ற பெரு நகரங்களில் நாம் ஓரிடத்தில் இருந்து மற்ற இடங்களுக்கு செல்ல ஓலா (Ola), ஊபர் (Uber), ரேபிடோ (Rapido) போன்ற தனியார் நிறுவனங்களின் செயலிகளை தான் நம்பி இருக்கிறோம். தனியார் நிறுவன செயலிகள் மாலை அலுவலக நேரங்களில் கேப் தேவைகள் அதிகரிக்கும்போதும், பண்டிகை நாட்கள், வார இறுதி நாட்கள் என டிமாண்டிற்கு ஏற்ற வகையில் கட்டணத்தை (Bharat Taxi) உயர்த்துகின்றன. இந்த சமயத்தில் டாக்ஸியில் செல்ல வேண்டும் என்றால் நாம் மற்ற சமயங்களை விட கூடுதல் கட்டணம் செலுத்த வேண்டி இருக்கிறது.
பாரத் டாக்ஸி அறிமுகம்
இந்த டாக்ஸி சேவையில் தனியார் நிறுவனங்களின் ஆதிக்கத்தை முடிவுக்கு கொண்டு வரவும், நாடு முழுவதும் ஒரே மாதிரியான கட்டணம் நடைமுறைக்கு கொண்டு வர வேண்டும் என மக்கள் எதிர்பார்ப்பில் இருந்தனர். இந்த நிலையில் தான் நவம்பர் 1-ம் தேதியில் இருந்து மத்திய அரசு சார்பாக நாடு முழுவதும் ‘பாரத் டாக்ஸி’ என்ற சேவை அறிமுகம் (Bharat Taxi) செய்யப்பட இருக்கிறது. இதற்கான அதிகாரப்பூர்வ செயலி கூகுள் பிளே ஸ்டோர் மற்றும் ஆப்பிள் ஆப் ஸ்டோரில் கிடைக்கிறது. மேலும், இந்த செயலி சோதனை முயற்சியாக வரும் நவம்பர் மாதத்தில் டெல்லியில் இருந்து அதிகாரப்பூர்வமாக பயன்பாட்டிற்கு வர இருக்கிறது. அதேபோல் முதல் கட்டமாக சுமார் 500 ஓட்டுநர்களும் பிறகு டிசம்பர் மாதத்திற்குள் நாடு முழுவதும் 5 ஆயிரம் டாக்ஸி ஓட்டுநர்களும் இந்த செயலியில் இணைவார்கள் என தகவல்கள் தெரிவிக்கின்றன.
முதல் கூட்டுறவு டாக்ஸி சேவை (Bharat Taxi)
மத்திய அரசு பாரத் டாக்ஸி சேவையை இந்தியாவின் ‘முதல் கூட்டுறவு டாக்ஸி சேவை’ என அழைக்கிறது. மத்திய அரசின் மின் ஆளுகை பிரிவு மற்றும் கூட்டுறவுத்துறையால் இந்த பாரத் டாக்ஸி சேவை நிர்வகிக்கப்படும் எனவும், ஓலா, ஊபர், ரேபிடோ போன்ற தனியார் செயலிகளுக்கு போட்டியாக இதில் குறைந்த டாக்ஸி கட்டணங்கள் நிர்ணயிக்கப்படும் என்றும் (Bharat Taxi) தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும் தனியார் நிறுவன செயலிகளை போல ஓட்டுநர்கள் இதில் ஒவ்வொரு ரைடுக்கும் கமிஷன் செலுத்த வேண்டிய தேவையில்லை. அவர்கள் மாதந்தோறும் ஒரு சந்தா தொகையை இதில் செலுத்திவிட்டு பாரத் டாக்ஸி செயலியில் இணைந்து கொள்ளலாம். இந்த செயலியில் வரக்கூடிய ரைடுகளில் வாடிக்கையாளர் செலுத்தும் முழு தொகையும் ஓட்டுநர்களுக்கே செல்லும். இதனால் ஓட்டுநர்களுக்கு பெரிய அளவில் லாபம் கிடைக்கும். மேலும் இந்த சேவை முதலில் டெல்லியில் தொடங்கி பின்னர் மும்பை, புனே, லக்னோ, பெங்களூரு, சென்னை என பல்வேறு நகரங்களுக்கு இது விரிவாக்கம் செய்யப்பட உள்ளது. வரும் 2026 ஆம் ஆண்டு மார்ச் மாதத்திற்குள் இந்தியாவின் அனைத்து மெட்ரோ நகரங்களிலும் பாரத் டாக்ஸி மக்களின் சேவை பயன்பாட்டில் இருக்கும் என அதிகாரிகள் கூறுகின்றனர். மேலும், இந்த பாரத் டாக்ஸி சேவையில் ரெண்டல், லோக்கல் ட்ரான்ஸ்ஃபர், அவுட் ஸ்டேஷன் என மூன்று சேவைகளை பெறலாம்.
Latest Slideshows
-
May Day History : மே தினம் உருவானது எப்படி? தோற்றம், முக்கியத்துவம் மற்றும் கொண்டாட்டம்! -
Best Foods for Liver Health : கல்லீரல் ஆரோக்கியத்தை மேம்படுத்தும் சிறந்த 10 உணவுகள்.! -
SSC Jobs 2026 : எஸ்.எஸ்.சி குரூப் டி மற்றும் குரூப் சி பிரிவில் 731 பணியிடங்கள்.. உடனே விண்ணப்பிங்க! -
DC vs PBKS Highlights : டி20 கிரிக்கெட் வரலாற்றில் 265 ரன்களை சேஸ் செய்து வரலாறு படைத்தது பஞ்சாப்! -
Crude Oil Rates Today : இன்றைய கச்சா எண்ணெய் விலை நிலவரம் -
Kirni Fruit Benefits in Tamil : 'கிர்ணி' பழத்தில் கொட்டி கிடக்கும் நன்மைகள்! -
PGCIL Recruitment 2026 : மின்சாரத் துறையில் 660 காலியிடங்கள்.. உடனே விண்ணப்பிங்க! -
RCB vs DC IPL 2026 Highlights : பெங்களூரு அணியை வீழ்த்தியது டெல்லி கேபிடல்ஸ்.! -
Mr. X Movie Review : ஜி20 மாநாடு, அணு ஆயுதத் தாக்குதல் என சுவாரஸ்யமாக இருக்கிறதா மிஸ்டர் எக்ஸ்? -
Fun Facts About Fireflies : மின்மினிப் பூச்சிகள் பற்றிய வேடிக்கையான உண்மைகள்!