Gistak Media – Cinema News | Trending News | Latest News

Biopic Of Sourav Ganguly : படமாகிறது கங்குலியின் வாழ்க்கை வரலாறு

Biopic Of Sourav Ganguly :

இந்திய கிரிக்கெட் அணியின் முன்னாள் கேப்டன் சவுரவ் கங்குலியின் வாழ்க்கை படமாக (Biopic Of Sourav Ganguly) உள்ளதாக கூறப்படுகிறது. இந்த படத்தை ஐஸ்வர்யா ரஜினிகாந்த் இயக்க உள்ளார்.

விளையாட்டு வீரர்கள், சினிமா நடிகர்கள், நடிகைகள், அரசியல் தலைவர்கள் மற்றும் பிரபலங்களின் வாழ்க்கை கதைகள் அதிகளவில் திரைப்படங்களாக உருவாகின்றன. பிரபல கிரிக்கெட் வீரர்களான தோனி, சச்சின் டெண்டுல்கர், முகமது அசாருதீன் ஆகியோரின் வாழ்க்கை வரலாறு அடங்கிய படங்கள் வெளியாகி ரசிகர்களிடையே நல்ல வரவேற்பை பெற்றுள்ளது.

1983ல் இந்திய அணி உலக கோப்பையை வென்றதை மையமாக வைத்து சமீபத்தில் வெளியான ’83’ திரைப்படம் நல்ல வரவேற்பை பெற்றது. இந்திய மகளிர் கிரிக்கெட் அணியின் கேப்டன் மிதாலி ராஜின் வாழ்க்கை கதை, ‘சபாஷ் மித்து’ என்ற பெயரில் கடந்த ஆண்டு வெளியானது. இதில் கதாநாயகியாக டாப்ஸி நடித்திருந்தார். இந்த படமும் நல்ல வரவேற்பை பெற்றது. அந்த வகையில் இந்திய கிரிக்கெட் அணியின் முன்னாள் கேப்டன் கங்குலியின் வாழ்க்கை வரலாறு படமாக (Biopic Of Sourav Ganguly) உருவாக உள்ளது.

இதுவரை உலக கிரிக்கெட் வரலாற்றில் பல வீரர்கள் வந்து பல்வேறு சாதனைகளை படைத்துள்ளனர். அதில் ஒரு சில வீரர்கள் மட்டுமே கிரிக்கெட்டில் செய்த சாதனைகளுக்கு அப்பால் மனிதனாகவும், விளையாட்டு வீரராகவும் மனதில் நிற்கிறார்கள். அப்படிப்பட்டவர்களில் ஒருவர்தான் சவுரவ் கங்குலி. சிலர் அவரை வங்காளப் புலி என்று அழைக்கிறார்கள். சிலர் தாதா என்று அழைக்கிறார்கள். இந்திய அணியின் முன்னாள் கேப்டன்களில் கங்குலியும் ஒருவர். இந்திய அணியில் மிகவும் ஆக்ரோஷமான வீரர் யார் என்று கேட்டால், அனைவரும் விராட் கோலியையே சுட்டிக்காட்டுகின்றனர். ஆனால் கோலிக்கு முன் சவுரவ் கங்குலி அந்த இடத்தை பிடித்தார்.

கங்குலி 1972 ஆம் ஆண்டு ஜூலை 8 ஆம் தேதி மேற்கு வங்கத்தில் பிறந்தார். கால்பந்தில் ஆர்வம் கொண்ட இவர், அதன் வழியே கிரிக்கெட் மீது காதல் கொண்டார். 2000 ஆம் ஆண்டு முதல் 2005 ஆம் ஆண்டு வரை இந்திய அணியை வெற்றிகரமாக வழிநடத்திய கேப்டன் இவர். ஆண்டுகள் பல கடந்தாலும், களத்தில் அவரது அசுரத்தனத்தை பார்க்கும் ரசிகர்கள், தோனி, விராட் கோலி என எத்தனை பேர் வந்தாலும் இவருக்கு ரசிகர் பட்டாளம் உள்ளது. இந்நிலையில் அவரது வாழ்க்கை வரலாறு (Biopic Of Sourav Ganguly) திரைப்படமாக தயாராக இருப்பதாக கூறப்படுகிறது.

கங்குலியின் வாழ்க்கை குறித்த திரைப்படம் தயாராக உள்ளது குறித்து சில ஆண்டுகளாகவே தகவல்கள் வெளிவந்தன. இதில் கங்குலியாக யார் நடிக்கிறார் என்ற பேச்சு வார்த்தைகள் நடந்து வந்தன. இறுதியில் நடிகர் ரன்பீர் கபூர் நடிக்கவுள்ளதாக கூறப்பட்டது. ஆனால், அவர் தற்போது பல படங்களில் கமிட்டாகியுள்ளதால் இப்படத்தில் நடிக்க முடியாமல் போயுள்ளது. இந்நிலையில் இந்தியா முழுவதும் பிரபலமாகியுள்ள பாலிவுட் நடிகர் ‘ஆயுஷ்மான் குரானா’ இப்படத்தில் கதாநாயகனாக நடிக்கிறார்.

ஆயுஷ்மான் குரானா, கங்குலியை போலவே இடது கையால் பேட்டிங் செய்யக்கூடியவராம் கங்குலியின் படத்தில் நடிக்க உள்ளதால் அவருடன் சில நாட்கள் இருந்து அவருடைய பாவனைகள் அனைத்தையும் கற்றுக்கொள்ள உள்ளதாக கூறப்படுகிறது. இதனால் இவருக்கு பயிற்சியாளர் ஒருவரை அமைக்க உள்ளதாக கூறப்படுகிறது. கங்குலியின் வாழ்க்கை படமானது (Biopic Of Sourav Ganguly) இந்த வருட இறுதியில் கொல்கத்தா பகுதியில் படப்பிடிப்பு தொடங்க உள்ளதாக கூறப்படுகிறது. இந்த படத்தின் மீதான எதிர்பார்ப்பு ரசிகர்களிடையே அதிகரித்துள்ளது.

Latest Slideshows

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *

Scroll to Top