Bison First Look : பைசன் படத்தின் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டர் ரிலீஸ்
மாரி செல்வராஜ் இயக்கத்தில் துருவ் விக்ரம் ஹீரோவாக நடிக்கும் படத்தின் டைட்டில் மற்றும் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டரை (Bison First Look) படக்குழு வெளியிட்டுள்ளது. இயக்குனர் ராமிடம் உதவி இயக்குனராக பணியாற்றியவர் மாரி செல்வராஜ். தொடர்ந்து, 2018ல் வெளியான பரியேறும் பெருமாள் படத்தின் மூலம் தமிழ் திரையுலகில் இயக்குனராக அறிமுகமானார். அப்படத்தின் வெற்றியை தொடர்ந்து நடிகர் தனுஷுடன் இணைந்த மாரி செல்வராஜ், கர்ணன் திரைப்படத்தை இயக்கினார். 2021ல் திரைக்கு வந்த இப்படம் பிளாக்பஸ்டர் ஹிட் ஆனது. கர்ணன் திரைப்படத்தின் வெற்றிக்குப் பிறகு மாரி செல்வராஜ் இயக்கிய படம் மாமன்னன். இந்தப் படத்தில் உதயநிதி ஸ்டாலின் ஹீரோவாக நடித்திருந்தார். நகைச்சுவை நடிகர் வடிவேலு முக்கிய வேடத்தில் நடித்த இப்படத்தில் அவருக்கு ஜோடியாக கீர்த்தி சுரேஷ் நடித்தார். வில்லனாக மலையாள நடிகர் பகத் பாசில் மிரட்டி இருந்தார். கடந்த ஆண்டு வெளியான இப்படம் பாக்ஸ் ஆபிஸில் ரூ.80 கோடிக்கு மேல் வசூல் செய்தது.
Bison First Look :
தொடர்ந்து ஹாட்ரிக் ஹிட் கொடுத்த மாரி செல்வராஜ் தற்போது இரண்டு படங்களை இயக்கி வருகிறார். அதில் ஒன்று வாழை திரைப்படம். இப்படத்தில் திவ்யா துரைசாமி நாயகியாக நடிக்கிறார். இப்படத்தின் படப்பிடிப்பு முடிந்து ரிலீசுக்கு தயாராகி வருகிறது. இதையடுத்து மாரி செல்வராஜ் இயக்கும் புதிய படத்தில் நடிகர் விக்ரமின் மகன் துருவ் கதாநாயகனாக நடிக்கிறார்.
கபடி வீரரின் வாழ்க்கையை மையமாக வைத்து உருவாகும் இப்படத்தின் படப்பிடிப்பு தற்போது விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. இந்நிலையில் படத்தின் டைட்டில் மற்றும் ஃபர்ஸ்ட் லுக் (Bison First Look) வெளியாகியுள்ளது. அதன்படி படத்திற்கு “பைசன் காளமாடன்” என டைட்டில் வைக்கப்பட்டுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. இந்த படத்தை இயக்குனர் பா.ரஞ்சித் தனது நீலம் புரொடக்ஷன்ஸ் மூலம் தயாரிக்கிறார். இப்படத்திற்கு நிவாஸ் கே.பிரசன்னா இசையமைக்கிறார். பைசன் என்றால் காட்டெருமை. இது தொடர்பாக போஸ்டரை (Bison First Look) வெளியிட்டுள்ள மாரி செல்வராஜ், அதில் “கால்நடையாய் நடந்து வாரான் காளமாடன்” என பதிவிட்டுள்ளார். இந்தப் படத்தில் அனுபமா பரமேஸ்வரன், ரஜிஷா விஜயன், கலையரசன் என பலரும் நடிக்கின்றனர்.
Latest Slideshows
-
May Day History : மே தினம் உருவானது எப்படி? தோற்றம், முக்கியத்துவம் மற்றும் கொண்டாட்டம்! -
Best Foods for Liver Health : கல்லீரல் ஆரோக்கியத்தை மேம்படுத்தும் சிறந்த 10 உணவுகள்.! -
SSC Jobs 2026 : எஸ்.எஸ்.சி குரூப் டி மற்றும் குரூப் சி பிரிவில் 731 பணியிடங்கள்.. உடனே விண்ணப்பிங்க! -
DC vs PBKS Highlights : டி20 கிரிக்கெட் வரலாற்றில் 265 ரன்களை சேஸ் செய்து வரலாறு படைத்தது பஞ்சாப்! -
Crude Oil Rates Today : இன்றைய கச்சா எண்ணெய் விலை நிலவரம் -
Kirni Fruit Benefits in Tamil : 'கிர்ணி' பழத்தில் கொட்டி கிடக்கும் நன்மைகள்! -
PGCIL Recruitment 2026 : மின்சாரத் துறையில் 660 காலியிடங்கள்.. உடனே விண்ணப்பிங்க! -
RCB vs DC IPL 2026 Highlights : பெங்களூரு அணியை வீழ்த்தியது டெல்லி கேபிடல்ஸ்.! -
Mr. X Movie Review : ஜி20 மாநாடு, அணு ஆயுதத் தாக்குதல் என சுவாரஸ்யமாக இருக்கிறதா மிஸ்டர் எக்ஸ்? -
Fun Facts About Fireflies : மின்மினிப் பூச்சிகள் பற்றிய வேடிக்கையான உண்மைகள்!