Bitchat App : இணையதளம் இல்லாதபோதும் மெசேஜ் அனுப்ப பிட்சாட் செயலி அறிமுகம்
இணையதள சேவை இல்லாத பகுதிகளிலும், இணைய சேவை துண்டிக்கப்பட்ட சூழ்நிலைகளிலும் எந்த தடையும் இல்லாமல் தகவல்களைப் பரிமாறிக் கொள்ள ‘பிட்சாட் செயலி’ அறிமுகம் (Bitchat App) செய்யப்பட்டுள்ளது. மேலும் இந்த செயலி தொலைதூரப் பகுதிகள், பேரிடர் காலங்கள் (அ) இணையக் கட்டுப்பாடுகள் நிலவும் பகுதிகளில் பயனுள்ளதாக அமையும்.
பிட்சாட் செயலி (Bitchat App)
சமூக வலைத்தளத்தில் பெரிய தாக்கத்தை ஏற்படுத்திய எக்ஸ் (X) நிறுவனத்தின் இணை நிறுவனரான ஜாக் டோர்சி தான் இந்த ‘பிட்சாட்’ செயலியை அறிமுகப்படுத்தியுள்ளார். மேலும் வாட்ஸ்அப் (WhatsApp), டெலிகிராம் (Telegram) போன்ற செயலிகளுக்கு இணைய இணைப்பு கட்டாயம் என்ற நிலையில், பிட்சாட் செயலி இதிலிருந்து முற்றிலும் மாறுபட்டு, இணைய வசதி இல்லாமலேயே செயல்படும் வகையில் உருவாக்கப்பட்டுள்ளது.
Bluetooth தொழில்நுட்பம்
செய்திகளை அனுப்பவும், பெறவும் பிட்சாட் செயலி ப்ளூடூத் (Bluetooth) தொழில்நுட்பத்தைப் பயன்படுத்துகிறது. இதன் மூலம், பயனர்கள் இணைய அணுகல் இல்லாத பகுதிகளிலும் அல்லது இணைய இணைப்பு துண்டிக்கப்பட்ட சூழ்நிலைகளிலும் மற்றும் பேரிடர் காலங்களில் தங்களுக்குள் (Bitchat App) எளிதாக தகவல்களைப் பரிமாறிக்கொள்ள முடியும். மேலும் ஜாக் டோர்சியின் மற்றொரு செயலியான ப்ளூஸ்கை போலவே, இந்த பிட்சாட் செயலியும் Decentralised தளமாகச் செயல்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
பிட்சாட் குறித்து ஜாக் டோர்சி எக்ஸ் (X) தளத்தில் பதிவு
ஜாக் டோர்சி தனது எக்ஸ் (X) தளத்தில் பிட்சாட்டை ‘ப்ளூடூத் மெஷ் நெட்வொர்க்குகள் மற்றும் ஸ்டோர் அன்ட் ஃபார்வர்ட் மாடல்கள்’ என விவரித்துள்ளார். மேலும் இந்த புதிய செயலி, தகவல்தொடர்பு உலகில் புதிய அத்தியாயத்தைத் திறக்கும் என்று அவர் குறிப்பிட்டுள்ளார். மேலும் இதுகுறித்து ஜாக் டோர்சி கூறுகையில், தற்போது ‘பிட்சாட் செயலி’ மறுபரிசீலனையில் (Bitchat App) உள்ளதாகவும், விரைவில் ஆப்பிள் ஆப் ஸ்டோரில் (Apple App Store) வெளியாகும் என்றும், பின்னர் ஆண்ட்ராய்டு பயனர்களுக்கும் பிட்சாட் செயலி கிடைக்கும் என தெரிவித்துள்ளார். இணையச் சார்பற்ற மற்றும் தனியுரிமையை மையமாகக் கொண்ட இந்த செயலி, எதிர்காலத்தில் தகவல்தொடர்பு உலகில் எவ்வாறு தாக்கத்தை ஏற்படுத்துகிறது என்பதைப் பொறுத்திருந்துதான் பார்க்க வேண்டும்.
Latest Slideshows
-
May Day History : மே தினம் உருவானது எப்படி? தோற்றம், முக்கியத்துவம் மற்றும் கொண்டாட்டம்! -
Best Foods for Liver Health : கல்லீரல் ஆரோக்கியத்தை மேம்படுத்தும் சிறந்த 10 உணவுகள்.! -
SSC Jobs 2026 : எஸ்.எஸ்.சி குரூப் டி மற்றும் குரூப் சி பிரிவில் 731 பணியிடங்கள்.. உடனே விண்ணப்பிங்க! -
DC vs PBKS Highlights : டி20 கிரிக்கெட் வரலாற்றில் 265 ரன்களை சேஸ் செய்து வரலாறு படைத்தது பஞ்சாப்! -
Crude Oil Rates Today : இன்றைய கச்சா எண்ணெய் விலை நிலவரம் -
Kirni Fruit Benefits in Tamil : 'கிர்ணி' பழத்தில் கொட்டி கிடக்கும் நன்மைகள்! -
PGCIL Recruitment 2026 : மின்சாரத் துறையில் 660 காலியிடங்கள்.. உடனே விண்ணப்பிங்க! -
RCB vs DC IPL 2026 Highlights : பெங்களூரு அணியை வீழ்த்தியது டெல்லி கேபிடல்ஸ்.! -
Mr. X Movie Review : ஜி20 மாநாடு, அணு ஆயுதத் தாக்குதல் என சுவாரஸ்யமாக இருக்கிறதா மிஸ்டர் எக்ஸ்? -
Fun Facts About Fireflies : மின்மினிப் பூச்சிகள் பற்றிய வேடிக்கையான உண்மைகள்!