-
Hatsun Founder Success Story : ஹட்சன் அக்ரோ புராடக்ட் லிமிடெட்டின் நிறுவனர் ஆர்.ஜி.சந்திரமோகனின் வெற்றிக் கதை.!
-
IPL 2026 Starts 28th March : மார்ச் 28 முதல் ஐபிஎல் கிரிக்கெட் திருவிழா ஆரம்பம்.. கொண்டாட்டத்தில் ரசிகர்கள்.!
-
LPG Shortage News : நாடு முழுவதும் சிலிண்டர் தட்டுப்பாடு.. கொரோனா ஊரடங்கு போன்று மாறும்சூழல்?
Blind Women's T20 World Cup : உலகின் முதல் சாம்பியனாக வரலாறு படைத்தது இந்தியா!
உலகில் முதல் முறையாக பார்வையற்றோருக்கான டி20 உலகக்கோப்பை கிரிக்கெட் (Blind Women’s T20 World Cup) தொடர் நடைபெற்றது. டெல்லி மற்றும் கொழும்புவில் நடைபெற்ற இந்த உலகக் கோப்பை கிரிக்கெட் தொடரை இந்தியா மற்றும் இலங்கை இணைந்து நடத்தி உள்ளன.
இந்திய அணி தோல்வியையே சந்திக்காத அணியாக மகுடம் சூடி உள்ளது
முதல் முறையாக நடத்தப்பட்ட பார்வையற்றோருக்கான டி20 உலகக்கோப்பையை இந்திய அணி வென்றிருப்பது கூடுதல் சிறப்பாகும். இந்திய அணி இந்தத் தொடரில் ஆஸ்திரேலியா, பாகிஸ்தான், இலங்கை மற்றும் அமெரிக்க அணிகளை வீழ்த்தி தோல்வியையே சந்திக்காத அணியாக மகுடம் சூடி உள்ளது. இந்தத் தொடரில் மாற்றுத்திறனாளிகள் தன்னம்பிக்கையோடு விளையாடினார்கள். இந்தத் தொடர் முழுவதும் தோல்வியே அடையாத அணியாக இந்திய மகளிர் அணி ஆனது ஆதிக்கம் செலுத்தி உள்ளது.
உலகின் முதல் சாம்பியனாக இந்திய மகளிர் அணி உருவெடுத்துள்ளது (Blind Women's T20 World Cup)
இந்தத் தொடரின் இறுதிப்போட்டியில் இந்திய மகளிர் அணி ஆனது நேபாள மகளிர் அணியோடு மோதியது. இந்திய மகளிர் அணி 7 விக்கெட்கள் வித்தியாசத்தில் நேபாள மகளிர் அணியை வென்றது. இறுதிப் போட்டி கொழும்பு பி சாரா ஓவல் மைதானத்தில் நடைபெற்றது. கொழும்புவில் நவ 23, 2025 அன்று நடந்த பைனலில் இந்திய மகளிர் அணி டாஸை வென்று பந்துவீச்சை (Blind Women’s T20 World Cup) தேர்வு செய்தது. முதலில் ஆடிய நேபாள அணி 20 ஓவர்களுக்கு 5 விக்கெட் இழப்பிற்கு 114 ரன்கள் எடுத்தது. அதைத் தொடர்ந்து களமிறங்கிய இந்திய அணி ஆனது 12 ஓவர்களில் 3 விக்கெட் இழப்பிற்கு 117 ரன்களை எடுத்து வெற்றி பெற்றது. இந்த வெற்றி ஆனது இந்திய மகளிர் அணியின் திறமையை உலகிற்கு வெளிச்சம் போட்டு காட்டி உள்ளது.
பார்வையற்றோருக்கான டி20 உலகக்கோப்பை தொடர் - ஒரு குறிப்பு
இந்த பார்வையற்றோருக்கான டி20 உலகக்கோப்பை தொடர் ஆனது கடந்த நவம்பர் 11 ஆம் தேதி டெல்லியில் தொடங்கியது. இந்தியா, இலங்கை, நேபாளம், பாகிஸ்தான், ஆஸ்திரேலியா மற்றும் அமெரிக்கா ஆகிய ஆறு அணிகள் இந்த உலகக்கோப்பை தொடரில் பங்கேற்றன. சில போட்டிகள் பெங்களூருவில் நடைபெற்றன. அந்த சில போட்டிகளுக்குப் பிறகு, இலங்கை தலைநகர் கொழும்புக்கு மாற்றப்பட்டு நாக் அவுட்களுக்கான போட்டிகள் நடைபெற்றன.
இந்திய மகளிர் அணி அரையிறுதிக்கு தகுதிபெற்றது
இந்திய மகளிர் அணி ஆஸ்திரேலியாவை 209 ரன்கள் வித்தியாசத்திலும், இலங்கை மற்றும் அமெரிக்காவை 10 விக்கெட்கள் வித்தியாசத்திலும், நேபாளத்தை 85 ரன்கள் வித்தியாசத்திலும் மற்றும் பாகிஸ்தானை 8 விக்கெட்கள் வித்தியாசத்திலும் வீழ்த்தி அரையிறுதிக்கு தகுதிபெற்றது.
புலா சரேன் ஆட்ட நாயகி விருதை பெற்றார்
புலா சரேன் 27 பந்துகளில் 4 பவுண்டரிகளுடன் 44 ரன்கள் எடுத்து, 162.96 ஸ்ட்ரைக் ரேட்டுடன் (Blind Women’s T20 World Cup) அசாத்திய ஆட்டம் ஆடினார். புலா சரேன் பேட்டிங்கில் மட்டுமல்லாமல், பந்துவீச்சிலும் சிறந்து விளங்கினார். புலா சரேன் பந்துவீச்சில் 3 ஓவர்கள் வீசி 20 ரன்கள் மட்டுமே கொடுத்தார். அது வெற்றிக்குக் சாதகமாக அமைந்தது.
Latest Slideshows
-
Hatsun Founder Success Story : ஹட்சன் அக்ரோ புராடக்ட் லிமிடெட்டின் நிறுவனர் ஆர்.ஜி.சந்திரமோகனின் வெற்றிக் கதை.!
-
IPL 2026 Starts 28th March : மார்ச் 28 முதல் ஐபிஎல் கிரிக்கெட் திருவிழா ஆரம்பம்.. கொண்டாட்டத்தில் ரசிகர்கள்.!
-
LPG Shortage News : நாடு முழுவதும் சிலிண்டர் தட்டுப்பாடு.. கொரோனா ஊரடங்கு போன்று மாறும்சூழல்?
-
Chennai Real Estate Market 2026 : 2026-ல் சென்னை ரியல் எஸ்டேட் சந்தை 5%–7% வரை வளர்ச்சி காணும் என கணிப்பு.!
-
IDBI Bank Jobs : ஐடிஐபி வங்கியில் 1,300 அசிஸ்டண்ட் மேனேஜர் பணியிடங்கள்.. உடனே விண்ணப்பிங்க.!
-
T20 World Cup India Champion : டி20 உலகக் கோப்பை.. நியூசிலாந்தை வீழ்த்தி 3வது முறையாக இந்தியா சாம்பியன்.!
-
Avataar Drone : வானில் கழுகு, நீரில் மீன்.. இந்தியாவின் முதல் நீர்-நில ட்ரோன் 'அவதார்' பற்றித் தெரியுமா?
-
Lemon Honey Water Benefits : காலையில் எலுமிச்சை, தேன் கலந்த நீர் குடிப்பதால் கிடைக்கும் நன்மைகள்.!
-
Vadam Movie Review : ஈகோ, காதல், துரோகம்.. என விறுவிறுப்பாக இருக்கிறதா வடம்?
-
India vs New Zealand T20 : டி20 உலகக் கோப்பை.. இந்தியா- நியூசிலாந்து பலப்பரீட்சை! சாதனை படைக்குமா இந்திய அணி?