Blood Moon 2025 : இந்தியாவில் முழு சந்திர கிரகணம் வரும் செப்டம்பர் 7-ம் தேதி நிகழ்கிறது
வரும் செப்டம்பர் 7-ம் தேதி இந்தியாவில் முழு சந்திர கிரகணம் நிகழ்கிறது என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. அன்றைய தினம் சந்திரன் இரத்த சிவப்பு நிறமாக மாறுவதை நேரடியாக (Blood Moon 2025) காணலாம். இந்த அதிசய நிகழ்வு பற்றி இந்த பதிவில் தெரிந்து கொள்ளலாம். இந்த சந்திர கிரகணத்தின் போது சந்திரன் இரத்த சிவப்பு நிறமாக மாறுவதற்கு மீள்தன்மை வாய்ந்த ‘ரேலீ சிதறல்’ காரணமாகும். மேலும் சூரியன் உதிக்கும் போதும், மறையும் போதும் சிவப்பு நிறத்தில் தோன்றும் என ஆராச்சியாளர்கள் தெரிவித்துள்ளனர்.
முழு சந்திர கிரகணம்
சூரியனுக்கும் சந்திரனுக்கும் இடையே பூமி நேரடியாக வரும்போது, பூமியின் நிழலில் சந்திரன் மறைந்து ‘சந்திர கிரகணம்’ ஏற்படுகிறது. இது ‘இரத்த நிலவு’ என்றும் அழைக்கப்படுகிறது. இந்தியாவின் பெருநகரங்களிளும், ஆப்பிரிக்கா, ஆசியா, ஆஸ்திரேலியா பகுதியை (Blood Moon 2025) சேர்ந்த மக்கள் இந்த நிகழ்வை வெறும் கண்ணால் தெளிவாகக் பார்க்க முடியும் என வானியல் அறிவியலாளார்கள் தெரிவித்துள்ளனர். மேலும் 82 நிமிடங்கள் வரை நிகழும் இந்த சந்திர கிரகணத்தை உலக மக்கள் தொகையில் 87 சதவீதம் பேர் இதன் ஒரு பகுதியையாவது பார்க்க முடியும் என்றும், சூரிய கிரகணங்களைப் போலன்றி சந்திர கிரகணத்தை வெறும் கண்களால் பார்க்கலாம் என விஞ்ஞானிகள் தெரிவித்துள்ளனர். மேலும் சந்திர கிரகணத்தின் போது, சூரிய ஒளி நேரடியாக சந்திரனை அடைவதை பூமி தடுக்கிறது. மேலும் இதில் சில ஒளி பூமியின் வளிமண்டலத்தின் வழியாக செல்வதால் சிவப்பு மற்றும் ஆரஞ்சு அலைநீளங்கள் ஏற்படுகிறது.
இரத்த நிலவு குறித்து நாசா விளக்கம் (Blood Moon 2025)
பூமியின் வளிமண்டலத்தில் உள்ள தூசி, மேகங்கள் மற்றும் எரிமலை சாம்பல் ஆகியவற்றை பொறுத்து சந்திரனின் நிறம் இரத்த சிவப்பாக மாறுபடலாம் எனவும் இந்த சிவப்பு தோற்றம் ‘இரத்த நிலவு’ (Blood Moon) என அழைக்கப்படுகிறது என்று நாசா தெரிவித்துள்ளது. மேலும் இந்த 2025-ம் ஆண்டின் இரண்டாவது மற்றும் கடைசி சந்திர கிரகணம் இதுவாகும். மேலும் முதல் சந்திர கிரகணம் மார்ச் 13-ம் தேதி இரவில் நிகழ்ந்தது, அதனைத் தொடர்ந்து வரும் செப்டம்பர் 7-8-ம் ஆகிய தேதிகளில் 2 வது முழு சந்திர கிரகணம் நிகழும் என்று நாசா தெரிவித்துள்ளது. மேலும் இது போன்ற சந்திர கிரகணம் வருகிற ஜூலை 6, 2028-ம் ஆண்டு தெரியும் என்று விஞ்ஞானிகள் கணித்துள்ளனர்.
Latest Slideshows
-
May Day History : மே தினம் உருவானது எப்படி? தோற்றம், முக்கியத்துவம் மற்றும் கொண்டாட்டம்!
-
Best Foods for Liver Health : கல்லீரல் ஆரோக்கியத்தை மேம்படுத்தும் சிறந்த 10 உணவுகள்.!
-
SSC Jobs 2026 : எஸ்.எஸ்.சி குரூப் டி மற்றும் குரூப் சி பிரிவில் 731 பணியிடங்கள்.. உடனே விண்ணப்பிங்க!
-
DC vs PBKS Highlights : டி20 கிரிக்கெட் வரலாற்றில் 265 ரன்களை சேஸ் செய்து வரலாறு படைத்தது பஞ்சாப்!
-
Crude Oil Rates Today : இன்றைய கச்சா எண்ணெய் விலை நிலவரம்
-
Kirni Fruit Benefits in Tamil : 'கிர்ணி' பழத்தில் கொட்டி கிடக்கும் நன்மைகள்!
-
PGCIL Recruitment 2026 : மின்சாரத் துறையில் 660 காலியிடங்கள்.. உடனே விண்ணப்பிங்க!
-
RCB vs DC IPL 2026 Highlights : பெங்களூரு அணியை வீழ்த்தியது டெல்லி கேபிடல்ஸ்.!
-
Mr. X Movie Review : ஜி20 மாநாடு, அணு ஆயுதத் தாக்குதல் என சுவாரஸ்யமாக இருக்கிறதா மிஸ்டர் எக்ஸ்?
-
Fun Facts About Fireflies : மின்மினிப் பூச்சிகள் பற்றிய வேடிக்கையான உண்மைகள்!