Bone Glue For Fractures : முறிந்த எலும்புகளை 3 நிமிடத்தில் ஒட்ட வைக்கும் பசையை சீன விஞ்ஞானிகள் கண்டுபிடித்துள்ளனர்
உடைந்த எலும்புகளை மூன்றே நிமிடத்தில் ஒட்ட வைக்கும் பசையை உருவாக்கியுள்ளதாக சீனாவை சேர்ந்த (Bone Glue For Fractures) விஞ்ஞானிகள் தெரிவித்துள்ளனர். இன்றைய நவீன மருத்துவ உலகில் யாராவது ஒருவருக்கு எலும்பு முறிவு ஏற்பட்டால் அதன் பாதிப்பை பொறுத்து மருத்துவர்கள் சிகிச்சை அளிக்கிறார்கள். அதேபோல் சில சமயங்களில் அறுவை சிகிச்சையின் மூலம் முறிந்த எலும்புகளை கூட்ட/சேர்க்க உலோகம் பயன்படுத்துவதும் உண்டு. முழுவதும் உடைந்த எலும்பு கூடிய பிறகு பொருத்தப்பட்ட உலோகத்தை மருத்துவர்கள் மீண்டும் அறுவை சிகிச்சை மூலம் அகற்றிவிடுவார்கள்.
3 நிமிடத்தில் ஒட்ட வைக்கும் பசை (Bone Glue For Fractures)
இந்த சூழலில் இந்த உலோகத்திற்கு மாற்றாக எலும்புகளை ஒட்ட வைக்கும் பசையை சீனாவை சேர்ந்த விஞ்ஞானிகள் உருவாக்கியுள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது. கிழக்கு சீனாவின் ஜெஜியாங் மாகாணத்தை சேர்ந்த மருத்துவ குழுவினர் இதை உருவாக்கி உள்ளனர். கடலில் சிப்பிகள் நீருக்கடியில் சில இடங்களில் உறுதியாக ஒட்டிக்கொண்டிருக்கும் புகைப்படத்தை கவனித்த பிறகு இந்த எலும்பு பசையை உருவாக்கும் யோசனை தோன்றியதாக எலும்பியல் அறுவை சிகிச்சை மருத்துவ நிபுணர் லின் சியான்ஃபெங் அவர்கள் தெரிவித்துள்ளார்.
இந்த பசையை கொண்டு உடைந்த எலும்புகளை 3 நிமிடங்களில் ஒட்ட முடியும் எனவும், மேலும் எலும்புகள் முழுவதும் கூடிய பிறகு இந்த பசை தானாகவே கரைந்து விடும் எனவும் லின் சியான்ஃபெங் அவர் கூறியுள்ளார். மேலும் ‘போன் 02’ (Bone 02) என அறியப்படும் இந்த பசையின் செயல்பாடு மற்றும் பாதுகாப்பு தன்மை ஆய்வு கூடத்தில் சோதனை நடத்தியதன் மூலம் உறுதி செய்யப்பட்டுள்ளது. சுமார் 150 பேருக்கு இந்த பசையை கொண்டு மருத்துவர்கள் பரிசோதனை மேற்கொண்டுள்ளனர்.
முறிந்த எலும்புகளை ஓட்டுவதற்கு தற்போது சந்தையில் எலும்பு சிமெண்ட்கள், Void ஃபில்லர்ஸ் மற்றும் டெட்ரானைட் போன்றவை கிடைக்கின்றன. ஆனால், தற்போது உடைந்த எலும்புகளை (Bone Glue For Fractures) ஒட்ட வைக்கும் பசை என ‘போன்-02’ அறிவிக்கப்பட்டுள்ளது. இது உலகம் முழுவதும் அறிமுகமாகும் போது எலும்பு முறிவு சிகிச்சையில் பெரிய மாற்றத்தை ஏற்படுத்தும் என எதிர்பார்க்கப்படுகிறது.
Latest Slideshows
-
Candidates Chess 2026 : கேண்டிடேட்ஸ் செஸ் தொடர்.. மகளிர் பிரிவில் பட்டம் வென்றார் வைஷாலி.!
-
Sambadi Aattam Book Review : மாரி செல்வராஜ் எழுதிய 'சம்படி ஆட்டம்' புத்தக விமர்சனம்.!
-
IPL 2026 CSK vs KKR : சென்னை அணியின் வெற்றி தொடருமா? கொல்கத்தாவுடன் இன்று மோதல்!
-
Vivo T5 Pro 5G : பட்ஜெட் விலையில் 'விவோ டி5 ப்ரோ 5ஜி' நாளை அறிமுகம்....
-
Indian Bank SO Recruitment 2026 : இந்தியன் வங்கியில் 350 பணியிடங்கள்.. யாரெல்லாம் விண்ணப்பிக்கலாம் ?
-
Tamil New Year 2026 : புதிய நம்பிக்கையுடன் மலரும் 'தமிழ்ப் புத்தாண்டு' சிறப்புகள் & வழிபாட்டு முறைகள்!
-
Sabja Seeds Benefits in Tamil : கோடைக்காலத்தில் குளிர்ச்சி தரும் 'சப்ஜா விதைகள்'.. இவ்வளவு நன்மைகள் இருக்கா.?
-
CSK vs DC IPL 2026 Highlights : சஞ்சு சாம்சன் மிரட்டல் சதம்.. டெல்லியை வீழ்த்தி சென்னை அணி முதல் வெற்றி
-
Jananayagan Movie Leaked Online : இணையத்தில் கசிந்த ‘ஜனநாயகன்’.. விஜய், படக்குழுவினர் அதிர்ச்சி?
-
LIK Movie Review : எப்படி இருக்கிறது LIK.. நான்காவது முறையாக ஹிட் அடித்தாரா பிரதீப்?