Bus Bay என்ற திட்டத்தை சென்னை மாநகராட்சி நடைமுறைப்படுத்த காரணம் :
சென்னை மாநகராட்சி ஆனது பொதுமக்களின் வசதிக்காகவும் மற்றும் நன்மைக்காகவும் தமிழக போக்குவரத்து துறை மூலம் பல்வேறு நல்ல திட்டங்களை செய்து வருகிறது. ஒருபுறம் சாலைகளை புனரமைப்பதும் மறுபுறம் சாலைகளை அகலமாக்குவதும் போன்ற பணிகளை செய்து வருகின்றது. குறிப்பாக சாலைகள், பாலங்கள் மற்றும் பூங்காங்கள் போன்ற விஷயங்களில் அதிக அக்கறையை செலுத்தி வருகின்றது. அந்த வகையில், இப்போது Bus Bay என்ற முக்கியமான புதிய திட்ட திட்டத்தை செயல்படுத்த எடுத்துள்ளது.
சென்னையில் உள்ள 629 வழித்தடங்களில் 31 பணிமனைகளிலிருந்து மொத்தமாக 3,436 பஸ்கள் தினமும் இயக்கப்பட்டு வருகின்றன. இந்த 3,436 பஸ்களில், பெரும்பாலான பஸ்கள் ஆனது நடுரோட்டில் நிறுத்தப்பட்டு பயணிகளை ஏற்றுவதும் மற்றும் இறக்குவதும் போன்ற செயல்களில் ஈடுபட்டு வருவதாக குற்றச்சாட்டுகள் எழுந்துள்ளன. இப்படிப்பட்ட செயல் முறையானது பிற வாகன ஓட்டிகளுக்கு மற்றும் பொதுமக்களுக்கு மிகவும் இடையூறாக உள்ளது.
பெரும்பான்மையான நேரங்களில் இப்படிப்பட்ட செயல் முறையானது போக்குவரத்து நெரிசலுக்கு காரணமாக அமைவதுடன், சில நேரங்களில் இதன் காரணமாக விபத்துகளும் ஏற்பட்டுவிடுகின்றன. அதனால்தான், இப்படிப்பட்ட பிரச்சனைக்களுக்கு எல்லாம் முற்றுப்புள்ளி வைக்கும் விதமாக Bus Bay என்ற திட்டத்தை சென்னை மாநகராட்சி நடைமுறைப்படுத்த தயாராகி வருகிறது. பொதுமக்கள் மற்றும் வாகன ஓட்டிகளின் வசதிக்காக, புதிய மாற்றங்கள் செய்து சென்னை மாநகராட்சி சென்னைவாசிகளின் கவனத்தையும் திரும்பி பார்க்க வைத்து வருகிறது
Bus Bay திட்டம் :
இந்த Bus Bay என்ற புதிய திட்டம் ஆனது வெறும் பஸ்கள் மட்டுமே பயணிப்பதற்கான தனி பாதை அமைக்கும் திட்டம் ஆகும். அதாவது பேருந்து நிறுத்தம் வருவதற்கு சில மீட்டர் தூரத்திற்கு முன்பும் அதே போல பேருந்து நிறுத்தத்தை தாண்டி சில மீட்டர் தூரம் வரை இந்த Bus Bay பாதை ஆனது நீண்டிருக்கும். பஸ்கள் எளிதாக பஸ் ஸ்டாப்புக்கு வரவும் மற்றும் தடையில்லாமல் வெளியேறி செல்லவும் வசதியாக இருக்கும் விதத்தில் இந்த Bus Bay பாதை ஆனது வடிவமைக்கப்பட்டிருக்கும். அதாவது இந்த Bus Bay பாதை ஆனது பஸ்கள் தடையில்லாமல் பயணிப்பதை உறுதிப்படுத்தும். இந்த Bus Bay பாதைக்குள் பஸ்கள் தவிர பிற வாகனங்கள் செல்ல அனுமதி கிடையாது.
இதனால் பஸ் ஸ்டாப்பில் காத்திருக்கும் பயணிகள் எளிதாக பஸ்களில் ஏறி, இறங்க முடியும். மேலும் பஸ் ஸ்டாண்டை தாண்டி பஸ்கள் நிறுத்தப்படும் செயல் முறையானது நிறுத்தப்படும். இந்த Bus Bay பாதையை பயன்படுத்துவதை ஒவ்வொரு பஸ் டிரைவரும் உறுதி செய்ய வேண்டும்.
முதற்கட்ட Bus Bay திட்டம் - சென்னையில் கிண்டி முதல் கோயம்பேடு :
இதன் முதற்கட்டமாக சென்னையில் கிண்டி முதல் கோயம்பேடு மற்றும் தாம்பரம் வரையுள்ள பேருந்து நிறுத்தங்களில் இந்த Bus Bay பாதை திட்டம் செயல்படுத்தப்பட உள்ளதாக சொல்கிறார்கள். சென்னையின் முக்கிய சாலைகளில் Traffic Jam ஏற்படுவதை கருத்தில் கொண்டு பல்வேறு மாற்றங்கள் ஆனது செய்யப்பட்டு வருகின்றன. அதனால் நிறைய பாலங்களும் இனி திறப்பதற்கான வாய்ப்புகள் சென்னையில் உள்ளதாக சொல்லப்படுகிறது.