Cabinet Approves Indias Bid CWG : 2030-ம் ஆண்டு காமன்வெல்த் போட்டி இந்தியாவில் நடத்த மத்திய அமைச்சரவை ஒப்புதல்
2030-ம் ஆண்டு காமன்வெல்த் விளையாட்டு போட்டியை இந்தியாவில் நடத்துவதற்கான மத்திய விளையாட்டு அமைச்சகத்தின் முன்மொழிவுக்கு பிரதமர் மோடி தலைமையில் நடைபெற்ற மத்திய அமைச்சரவை (Cabinet Approves Indias Bid CWG) குழு ஒப்புதல் அளித்துள்ளது.
மத்திய அமைச்சரவைக் கூட்டம்
புதுடெல்லியில் பிரதமர் திரு.நரேந்திர மோடி அவர்கள் தலைமையில் மத்திய அமைச்சரவைக் கூட்டம் நடைபெற்றது. இதில் எடுக்கப்பட்ட முடிவு குறித்து மத்திய அமைச்சரவை வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் வரும் 2030-ம் ஆண்டு நடைபெறவுள்ள காமன்வெல்த் விளையாட்டுப் போட்டிகளை குஜராத் மாநிலம் அகமதாபாத் நகரில் நடத்துதற்கான ஏல விண்ணப்பத்தை சமர்ப்பிப்பதற்கான விளையாட்டு அமைச்சகத்தின் முன்மொழிவுக்கு ஒப்புதல் அளிக்கப்பட்டது. மேலும் ஏல விண்ணப்பம் ஏற்றுக்கொள்ளப்பட்டால், சம்பந்தப்பட்ட துறைகள் மற்றும் அதிகாரிகள் போட்டிகளை நடத்த குஜராத் மாநில அரசுடன் ஒப்பந்தத்தில் கையெழுத்திடவும், குஜராத் மாநில அரசுக்கு மானிய உதவிகளை வழங்கவும் மத்திய அமைச்சரவை கூட்டத்தில் ஒப்புதல் அளிக்கப்பட்டுள்ளது.
72 நாடுகளை சேர்ந்த விளையாட்டு வீரர்கள் (Cabinet Approves Indias Bid CWG)
இந்த காமன்வெல்த் விளையாட்டு போட்டிகளில் மொத்தம் 72 நாடுகளை சேர்ந்த விளையாட்டு வீரர்கள் பங்கேற்கின்றனர். மேலும் இந்த விளையாட்டு போட்டிகளின் போது விளையாட்டு வீரர்களுடன் ஏராளமான பயிற்சியாளர்கள், ஊடகவியலாளர்கள், தொழில்நுட்ப அதிகாரிகள், சுற்றுலாப் பயணிகள் உள்ளிட்டோர் இந்தியாவிற்கு வருவார்கள், இதன் மூலம் உள்ளூர் வணிகங்கள் பயனடைந்து அதிக வருவாய் ஈட்டப்படும்.
சுற்றுலாவை மேம்படுத்தும்
அதிநவீன பயிற்சி வசதிகளுடன் உலகத்தரம் வாய்ந்த விளையாட்டு மைதானமாக அகமதாபாத் நகரம் உள்ளது. மேலும் நரேந்திர மோடி மைதானத்தில் ஐசிசி உலகக் கோப்பையின் இறுதிப் போட்டி வெற்றிகரமாக நடத்தியதன் மூலம் அதன் சிறப்பு நிரூபிக்கப்பட்டுள்ளது. மேலும் இந்தியாவில் இந்த காமன்வெல்த் விளையாட்டுப் போட்டிகளை நடத்துவதன் மூலம் சுற்றுலாவை மேம்படுத்தலாம். இதுத்தவிர தகவல் ஒலிபரப்பு, போக்குவரத்து, தொலைத் தொடர்பு போன்ற துறைகளிலும் செயல்பாடுகள் அதிகரித்து அதன் மூலம் பலர் வேலை வாய்ப்புகளைப் பெறுவார்கள். மேலும் உலக அளவில் மதிப்புமிக்க இந்த காமன்வெல்த் விளையாட்டு போட்டியை நடத்துவது தேச ஒற்றுமை தொடர்பாக வலுவான உணர்வை வளர்க்கும் எனவும், புதிய தலைமுறை விளையாட்டு வீரர்கள் விளையாட்டை தொழில்முறைத் தேர்வாகத் தேர்ந்தெடுக்கவும், விளையாட்டுகளில் அதிக பங்கேற்பை ஊக்குவிக்கவும் உதவும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
Latest Slideshows
-
May Day History : மே தினம் உருவானது எப்படி? தோற்றம், முக்கியத்துவம் மற்றும் கொண்டாட்டம்!
-
Best Foods for Liver Health : கல்லீரல் ஆரோக்கியத்தை மேம்படுத்தும் சிறந்த 10 உணவுகள்.!
-
SSC Jobs 2026 : எஸ்.எஸ்.சி குரூப் டி மற்றும் குரூப் சி பிரிவில் 731 பணியிடங்கள்.. உடனே விண்ணப்பிங்க!
-
DC vs PBKS Highlights : டி20 கிரிக்கெட் வரலாற்றில் 265 ரன்களை சேஸ் செய்து வரலாறு படைத்தது பஞ்சாப்!
-
Crude Oil Rates Today : இன்றைய கச்சா எண்ணெய் விலை நிலவரம்
-
Kirni Fruit Benefits in Tamil : 'கிர்ணி' பழத்தில் கொட்டி கிடக்கும் நன்மைகள்!
-
PGCIL Recruitment 2026 : மின்சாரத் துறையில் 660 காலியிடங்கள்.. உடனே விண்ணப்பிங்க!
-
RCB vs DC IPL 2026 Highlights : பெங்களூரு அணியை வீழ்த்தியது டெல்லி கேபிடல்ஸ்.!
-
Mr. X Movie Review : ஜி20 மாநாடு, அணு ஆயுதத் தாக்குதல் என சுவாரஸ்யமாக இருக்கிறதா மிஸ்டர் எக்ஸ்?
-
Fun Facts About Fireflies : மின்மினிப் பூச்சிகள் பற்றிய வேடிக்கையான உண்மைகள்!