Gistak Media

Canara Bank Apprentice Recruitment 2025: கனரா வங்கியில் 3,500 பயிற்சி பணியிடங்கள்.. உடனே விண்ணப்பிங்க..!

இந்தியாவின் முன்னணி பொதுத்துறை வங்கிகளில் ஒன்றான கனரா வங்கி மும்பையை தலைமையிடமாக கொண்டு இயங்கி வருகிறது. இந்த வங்கிக்கு இந்தியா மட்டுமல்லாமல் உலகம் முழுவதும் கிளைகள் உள்ளன. இதில் ஆயிரக்கணக்கான பணியாளர்கள் பணியாற்றி வருகிறார்கள். இந்நிலையில் இந்த வங்கியில் காலியாக உள்ள பயிற்சி பணியிடங்களை நிரப்புவதற்கான (Canara Bank Apprentice Recruitment 2025) அறிவிப்பை கனரா வங்கி தற்போது அதன் அதிகாரப்பூர்வ இணையதளத்தில் அறிவித்துள்ளது.

Canara Bank Apprentice Recruitment 2025

1.காலியிடங்களின் எண்ணிக்கை (Total Vacancy)

கனரா வங்கியில் காலியாக உள்ள இந்த பயிற்சி (Apprentice) பணியிடங்களை நிரப்புவதற்கு மொத்தம் 3500 பணியிடங்கள் அறிவிக்கப்பட்டுள்ளது. மேலும் இதில் தமிழக்தில் உள்ள கனரா வங்கி கிளைகளுக்கு மட்டும் 394 பணியிடங்களும், கர்நாடகாவிற்கு 591 பணியிடங்களும், கேரளாவிற்கு 243 பணியிடங்களும்  ஒதுக்கப்பட்டுள்ளது.

2.கல்வி தகுதி (Educational Qualification)

கனரா வங்கியில் இந்த பயிற்சி (Apprentice) பணியிடங்களுக்கு அரசாங்கத்தினால் அங்கீகரிக்கப்பட்ட கல்வி நிலையங்களில் ஏதேனும் ஒரு பாடப்பிரிவில் டிகிரி (Degree) முடித்தவர்கள் விண்ணப்பிக்கலாம். மேலும், விண்ணப்பதாரர்கள் 1.01.2022-ம் ஆண்டுக்கு முன்பாகவோ 1.09.2025-க்கு பிறகோ டிகிரி முடித்தவர்களாக இருக்க கூடாது என அறிவிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. அதேபோல் விண்ணப்பிக்கும் மாநிலத்தின் உள்ளூர் மொழி தெரிந்து இருப்பது அவசியம் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

3.வயது தகுதி (Age)

கனரா வங்கியில் இந்த பயிற்சி (Apprentice) பணியிடங்களுக்கு 20 வயது முதல் 28 வயதிற்குள் இருப்பவர்கள் விண்ணப்பிக்கலாம். மேலும், விண்ணப்பதாரர்கள் 1.09.1997-க்கு முன்போ 1.09.2005-க்கு பிறகோ (Canara Bank Apprentice Recruitment 2025) பிறந்தவராக இருத்தல் கூடாது எனவும், அனைத்து பிரிவினர்களுக்கும் அரசு விதிமுறைகளை பின்பற்றி வயது வரம்பில் தளர்வு அளிக்கப்படும் என கனரா வங்கி தெரிவித்துள்ளது.

4.சம்பளம் (Salary)

கனரா வங்கியில் இந்த பயிற்சி (Apprentice) பணியிடங்களுக்கு தேர்வு செய்யப்படும் விண்ணப்பதாரர்களுக்கு மாதம் ரூ.15 ஆயிரம் ஊக்கத்தொகையாக 2 வருட காலம் வழங்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

Canara Bank Apprentice Recruitment 2025 - Gistakmedia

5.தேர்வு செய்யப்படும் முறை (Selection Process)

கனரா வங்கியில் இந்த பயிற்சி (Apprentice) பணியிடங்களுக்கு தேர்வு முறையை பொறுத்தவரையில், உள்ளூர் மொழித்திறன் தேர்வு, சான்றிதழ் சரிபார்ப்பு (Canara Bank Apprentice Recruitment 2025) ஆகியவற்றின் அடிப்படையில் தகுதியான நபர்கள் தேர்வு செய்யப்படுவார்கள் என கனரா வங்கி தெரிவித்துள்ளது.

6.விண்ணப்ப கட்டணம் (Application Fees)

கனரா வங்கியில் இந்த பயிற்சி (Apprentice) பணியிடங்களுக்கு தேர்வுக்கட்டணமாக பொதுப்பிரிவினர் ரூ.500 செலுத்த வேண்டும். மேலும் எஸ்டி/எஸ்சி பிரிவினருக்கு தேர்வுக்கட்டணம் கிடையாது.

7.விண்ணப்பிக்க கடைசி தேதி (Last Date)

கனரா வங்கியில் இந்த பயிற்சி (Apprentice) பணியிடங்களுக்கு விண்ணப்பிக்க கடைசி நாள் 12.10.2025 ஆகும். மேலும் தேர்வுக்கு விண்ணப்பிக்கும் தேர்வர்கள் https://canarabank.bank.in/ என்ற இணையதளத்தில் உள்ள தேர்வு அறிவிப்பினை கவனமாக படித்து உறுதி செய்து கொள்வது அவசியம்.

Latest Slideshows

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *

Scroll to Top