Cancer Cases Rise In India : இந்தியாவில் அதிகரிக்கும் புற்றுநோய் பாதிப்பு.. வெளியான அதிர்ச்சி தகவல்.!
இந்தியாவில் சமீப காலமாக புற்றுநோய் பாதிப்பு அதிகரித்து வரும் நிலையில், நமது அண்டை நாடான சீனாவில் புற்றுநோய் பாதிப்பு கணிசமாக குறைந்து (Cancer Cases Rise In India) வருவது ஆய்வில் தெரிய வந்துள்ளது. முன்னொரு ஒரு காலத்தில் இந்தியாவில் புற்றுநோய் குறித்து அங்கொன்றும் இங்கொன்றுமாக கேள்விப்பட்டு வந்த நிலை மாறி, தற்போது ஈசல் போன்று புற்றுநோய் பாதிப்பு அதிகரிக்க தொடங்கிவிட்டதை நாம் கண்கூடாகப் பார்த்து வருகிறோம். இதனை உறுதிபடுத்தும் வகையில் வெளியாகியுள்ள ஆய்வறிக்கை இந்தியா உட்பட உலக நாடுகளை நடுங்க வைத்துள்ளது.
25 ஆண்டுகளில் புற்றுநோய் இறப்புகள் 75% அதிகரிக்கும்
உலகளவில் அடுத்த 25 ஆண்டுகளில் புற்றுநோய் இறப்புகள் 75 சதவீதம் அதிகரிக்கும் என சர்வதேச மருத்துவ இதழான தி லான்செட் எச்சரித்துள்ளது. மேலும் வரும் 2050-ம் ஆண்டுக்குள் சுமார் 3 கோடியே 5 லட்சம் பேருக்கு புற்றுநோய் பாதிப்பு ஏற்படும் என்றும், சுமார் 1 கோடியே 86 லட்சம் பேர் புற்றுநோயால் மட்டும் உயிரிழக்க நேரிடும் என்றும் ஆய்வு முடிவுகள் வெளியாகியுள்ளன. இந்த ஆய்வின்படி, உலகிலேயே புற்றுநோய் பாதிப்பு விகிதம் அதிகரித்துள்ள 10 நாடுகளில் நம் இந்தியாவும் ஒன்று. 1990 முதல் 2023 வரை இந்தியாவில் புற்றுநோய் பாதிப்பு சுமார் 26.4% அதிகரித்துள்ளது. இதே காலகட்டத்தில் சீனாவில் புற்றுநோய் பாதிப்பு 18.5% குறைந்திருப்பது குறிப்பிடத்தக்கது.
மேலும் இந்தியாவில் 1990-ல் 1 லட்சம் பேரில் 84 பேருக்கு இருந்த புற்றுநோய் பாதிப்பு, 2023-ல் 1 லட்சம் பேரில் 107 நபராக உயர்ந்துள்ளது. அதேபோல், இறப்பு விகிதமும் அதிகரித்து, 2023-ல் 12.1 லட்சம் இறப்புகளுக்கு வழிவகுத்துள்ளது. ஆரோக்கியமற்ற உணவுப் பழக்கம், புகையிலைப் பயன்பாடு போன்ற வாழ்க்கைமுறை காரணிகள், உலகளவில் 40 சதவீதத்திற்கும் அதிகமான புற்றுநோய் இறப்புகளுக்கு காரணமாக இருப்பதாக ஆய்வு முடிவுகள் தெரிவிக்கின்றன.
குறைவான முன்னுரிமை (Cancer Cases Rise In India)
மேலும், உலக சுகாதார மையம் புற்றுநோயை கட்டுப்படுத்துவதற்கான கொள்கைகளுக்கும், செயல்பாட்டிற்கும் குறைவான முன்னுரிமையே வழங்கப்படுவதாலும், பல நாடுகளில் புற்றுநோய் சவாலை எதிர்கொள்ளப் தேவையான நிதி இல்லாததும் ஒரு காரணம் என இந்த ஆய்வின் (Cancer Cases Rise In India) ஆசிரியர் டாக்டர் லிசா ஃபோர்ஸ் கவலை தெரிவித்துள்ளார். மேலும் குறைவான வளங்கள் உள்ள நாடுகளில் புற்றுநோய் அதிகரிப்பதை தடுக்க உடனடி நடவடிக்கைகள் எடுக்க வேண்டும் என டாக்டர் லிசா ஃபோர்ஸ் வலியுறுத்தியுள்ளார்.
Latest Slideshows
-
May Day History : மே தினம் உருவானது எப்படி? தோற்றம், முக்கியத்துவம் மற்றும் கொண்டாட்டம்!
-
Best Foods for Liver Health : கல்லீரல் ஆரோக்கியத்தை மேம்படுத்தும் சிறந்த 10 உணவுகள்.!
-
SSC Jobs 2026 : எஸ்.எஸ்.சி குரூப் டி மற்றும் குரூப் சி பிரிவில் 731 பணியிடங்கள்.. உடனே விண்ணப்பிங்க!
-
DC vs PBKS Highlights : டி20 கிரிக்கெட் வரலாற்றில் 265 ரன்களை சேஸ் செய்து வரலாறு படைத்தது பஞ்சாப்!
-
Crude Oil Rates Today : இன்றைய கச்சா எண்ணெய் விலை நிலவரம்
-
Kirni Fruit Benefits in Tamil : 'கிர்ணி' பழத்தில் கொட்டி கிடக்கும் நன்மைகள்!
-
PGCIL Recruitment 2026 : மின்சாரத் துறையில் 660 காலியிடங்கள்.. உடனே விண்ணப்பிங்க!
-
RCB vs DC IPL 2026 Highlights : பெங்களூரு அணியை வீழ்த்தியது டெல்லி கேபிடல்ஸ்.!
-
Mr. X Movie Review : ஜி20 மாநாடு, அணு ஆயுதத் தாக்குதல் என சுவாரஸ்யமாக இருக்கிறதா மிஸ்டர் எக்ஸ்?
-
Fun Facts About Fireflies : மின்மினிப் பூச்சிகள் பற்றிய வேடிக்கையான உண்மைகள்!