Cancer Cases Rise In Tamilnadu : தமிழகத்தில் புற்றுநோயாளிகளின் பாதிப்பு அதிகரிப்பு.. அதிர்ச்சியளிக்கும் ஆய்வு முடிவுகள்.!
தமிழ்நாட்டில் புற்றுநோயாளிகள் எண்ணிக்கை கடந்த ஐந்து ஆண்டுகளில் இல்லாத அளவிற்கு சுமார் 30 சதவீதம் (Cancer Cases Rise In Tamilnadu) அதிகரித்திருப்பதாக தமிழ்நாடு புற்றுநோய் பதிவுத் திட்டம் (Tamil Nadu Cancer Registry Project) தெரிவித்துள்ளது. தமிழகத்தில் கடந்த 5 ஆண்டுகளுக்கு முன் 78,687 ஆக இருந்த புற்றுநோயாளிகளின் எண்ணிக்கை தற்போது 1 லட்சத்துக்கும் மேல் அதிகரித்திருப்பதாக அரசிடம் உள்ள தரவுகள் கூறுகின்றன. 1954-ம் ஆண்டு நிறுவப்பட்ட அடையாறு புற்றுநோய் சிகிச்சை மையம் மற்றும் தமிழக சுகாதாரத் துறை இணைந்து நடத்திய ”தமிழக புற்றுநோய் பதிவேடு திட்டம்” மூலம் இந்த தரவுகள் சேகரிக்கப்பட்டுள்ளன.
புற்றுநோயாளிகள் அதிகரிப்புக்கு தமிழக சுகாதாரத் துறை பலகாரணங்கள் தெரிவித்துள்ளது. நோயறிதல் முறைகள் மேம்பட்டிருப்பதும், நோய்குறித்த விழிப்புணர்வு அதிகரித்திருப்பதும் ஒரு காரணம். இதற்கு, மரபணு மற்றும் சுற்றுச்சூழல் காரணிகளும் பங்களித்திருப்பதாக சுகாதாரத் துறை தெரிவித்துள்ளது.
அதிர்ச்சியளிக்கும் ஆய்வு முடிவுகள்
0 முதல் 74 வயதுக்கு உட்பட்டவர்களில், சராசரியாக ஒவ்வொரு 11 பெண்களில் 1 பெண்ணும், ஒவ்வொரு 12 ஆண்களில் 1 ஆணும் தங்களின் வாழ்நாளில் புற்றுநோயால் பாதிக்கப்படுவதற்கான ஆபத்து இருப்பதாக இந்த ஆய்வு முடிவுகள் கூறுகிறது. மேலும் புற்றுநோய் பாதிப்புக்கு ஆளாகும் பெண்களில் 50 சதவீதம் பிறப்புறுப்பு சார்ந்த புற்றுநோயால் பாதிக்கப்படுகின்றனர். அதேசமயம் பெரும்பாலான ஆண்கள் வாய்ப் புற்றுநோய், வயிற்றுப் புற்றுநோய் மற்றும் பெருங்குடல் புற்றுநோயால் பாதிக்கப்படுவதாக ஆய்வு முடிவுகள் கூறுகின்றன.
அதிகரிக்கும் மார்பக புற்றுநோய் (Cancer Cases Rise In Tamilnadu)
பெண்களின் தாமதமான திருமணம் மற்றும் குறைவான குழந்தை பிறப்பு, அதீத உடல் பருமன் போன்ற காரணிகள் நகர்ப்புறப் பெண்களிடையே மார்பக புற்றுநோயை அதிகரிக்கின்றன. மேலும் நகர்ப்புறங்களில் மேம்பட்ட பரிசோதனை வசதிகள் இருப்பதன் காரணமாக (Cancer Cases Rise In Tamilnadu) இந்த நோய் அதிகளவில் கண்டறியப்படுகிறது. அதேபோல் கிராமப்புறங்களில் வசிக்கும் பெண்களுக்கு கருப்பை வாய்ப் புற்றுநோய் முக்கியப் பிரச்சனையாக மாறி வருகிறது. மேலும் தமிழகத்தில் புற்றுநோய் இறப்பு குறித்த முழுமையான தரவுகள் பதிவு செய்யப்படுவதில்லை. சுமார் 40 சதவீத புற்றுநோய் உயிரிழப்புகள் மட்டுமே முறையான மருத்துவ சான்றிதழ் பெறுவதாகவும், அதிலும் குறிப்பாக கிராமப்புறங்களில் நிகழும் புற்று நோய் மரணங்கள் வீட்டிலேயே நிகழ்வதால், அவற்றை முறையாக பதிவுசெய்ய முடியவில்லை என மருத்துர்கள் கூறுகின்றனர்.
உயிர்பிழைக்கும் விகிதம் குறைவு
அரசு மருத்துவமனைகளில் புற்றுநோய் சிகிச்சைக்கு தேவையான வசதிகள் செய்யப்பட்டிருந்தாலும், தாமதமான நோயறிதல் காரணமாக நோயாளிகள் உயிர்பிழைக்கும் விகிதம் குறைந்து வருகிறது. உதாரணமாக, சில புற்றுநோய்களுக்கான பிழைப்பு விகிதம் 30 சதவீதத்திற்கும் கீழ் குறைந்துள்ளதாக சுகாதார துறை தெரிவித்துள்ளது. மேலும் கிராமப்புறங்களில் இருந்து வரும் பெரும்பாலான (Cancer Cases Rise In Tamilnadu) நோயாளிகள், நோய் முற்றிய நிலையில் சிகிச்சைக்கு வருவதே, உயிர் பிழைப்பு விகிதம் குறைவாக இருப்பதற்கு காரணமாகும். ஆரம்ப நிலையிலேயே புற்றுநோயை கண்டறிந்தால், நோய் பாதிப்பிலிருந்து மீள்வதற்கான வாய்ப்புகள் அதிகம் என மருத்துவர்கள் கூறுகின்றனர்.
Latest Slideshows
-
May Day History : மே தினம் உருவானது எப்படி? தோற்றம், முக்கியத்துவம் மற்றும் கொண்டாட்டம்! -
Best Foods for Liver Health : கல்லீரல் ஆரோக்கியத்தை மேம்படுத்தும் சிறந்த 10 உணவுகள்.! -
SSC Jobs 2026 : எஸ்.எஸ்.சி குரூப் டி மற்றும் குரூப் சி பிரிவில் 731 பணியிடங்கள்.. உடனே விண்ணப்பிங்க! -
DC vs PBKS Highlights : டி20 கிரிக்கெட் வரலாற்றில் 265 ரன்களை சேஸ் செய்து வரலாறு படைத்தது பஞ்சாப்! -
Crude Oil Rates Today : இன்றைய கச்சா எண்ணெய் விலை நிலவரம் -
Kirni Fruit Benefits in Tamil : 'கிர்ணி' பழத்தில் கொட்டி கிடக்கும் நன்மைகள்! -
PGCIL Recruitment 2026 : மின்சாரத் துறையில் 660 காலியிடங்கள்.. உடனே விண்ணப்பிங்க! -
RCB vs DC IPL 2026 Highlights : பெங்களூரு அணியை வீழ்த்தியது டெல்லி கேபிடல்ஸ்.! -
Mr. X Movie Review : ஜி20 மாநாடு, அணு ஆயுதத் தாக்குதல் என சுவாரஸ்யமாக இருக்கிறதா மிஸ்டர் எக்ஸ்? -
Fun Facts About Fireflies : மின்மினிப் பூச்சிகள் பற்றிய வேடிக்கையான உண்மைகள்!