Cancer-Curing Nanoparticles: கோவை பேராசிரியர்கள் சாதனை|புற்றுநோயை குணப்படுத்தும் நானோ துகள்...
Cancer-Curing Nanoparticles :
தமிழ்நாட்டின் மாநில மலரான செங்காந்தள் செடியின் கிழங்கின் சாற்றில் இருந்து புற்றுநோயை குணப்படுத்தும் வெள்ளி நானோ துகள்களை (Cancer-Curing Nanoparticles) கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.
கோவை பாரதியார் பல்கலைக்கழகத்தின் உயிர்வேதியியல் துறை உதவி பேராசிரியைராக உள்ள கே.எம்.சாரதா தேவி மற்றும் பாரதியார் பல்கலைக்கழகத்தில் தாவரவியல் துறை உதவி பேராசிரியராக உள்ள க.குருசரவணன் இருவரும் இணைந்து பணியாற்றி புற்றுநோயை குணப்படுத்தும் வெள்ளி நானோ துகள்களை கண்டுபிடித்துள்ளார்கள்.
இவர்கள் இருவரும் தமிழ்நாட்டின் மாநில மலரான செங்காந்தள் செடியின் கிழங்கின் சாற்றில் இருந்து வெள்ளி நானோ துகள்களை கண்டுபிடித்துள்ளார்கள். இந்த சாற்றில் உள்ள நானோ துகள்கள் புற்றுநோய் பாதித்த செல்களை ரத்தத்தில் உள்ள வெள்ளை அணுக்களை எளிதில் கண்டறிந்து அழிக்கும்.
வெள்ளி நானோ துகள்கள் புற்றுநோய் செல்களை மட்டும் தேடி தேடி அழிக்கும் தனித்துவம் கொண்டது :
இதுகுறித்து பேராசிரியர்கள் குருசரவணன் மற்றும் சாரதாதேவி ஆகிய இருவரும் செய்தியாளர்களிடம் பேசும் போது, தற்போது புற்றுநோயை குணப்படுத்த பயன்படுத்தப்பட்டு வரும் மருந்துகள் யாவும் புற்றுநோய் பாதித்த செல்களை மட்டுமின்றி புற்றுநோய் பாதிக்காத செல்களையும் சேர்த்து அழிக்கின்றன. ஆனால் பேராசிரியர்கள் குருசரவணன் மற்றும் சாரதாதேவி கண்டுபிடித்த நானோ துகள்கள் புற்றுநோய் செல்களை மட்டும் தேடி தேடி அழிக்கும் தன்மை கொண்டது.
சோதனையின் முதற்கட்டமாக இந்த நானோ துகள்களை எலிக்கு செலுத்தி வெற்றி பெற்றுள்ளார்கள். இந்த நானோ துகள்களை மனிதர்களின் பயன்பாட்டிற்கு கொண்டு வர சில ஆண்டுகள் பிடிக்கும் என்று பேராசிரியர்கள் கூறுகின்றனர்.
இது ஒரு அரிய கண்டுபிடிப்பு ஆகும். இந்த அரிய வெள்ளி நானோ துகள் கண்டுபிடிப்பை பாராட்டி மத்திய அரசு காப்புரிமை வழங்கி உள்ளது.
இதைத்தொடர்ந்து பலரும் பேராசிரியர்கள் குருசரவணன் மற்றும் சாரதாதேவி ஆகிய இருவரையும் பாராட்டி வருகிறார்கள்.
Latest Slideshows
-
May Day History : மே தினம் உருவானது எப்படி? தோற்றம், முக்கியத்துவம் மற்றும் கொண்டாட்டம்!
-
Best Foods for Liver Health : கல்லீரல் ஆரோக்கியத்தை மேம்படுத்தும் சிறந்த 10 உணவுகள்.!
-
SSC Jobs 2026 : எஸ்.எஸ்.சி குரூப் டி மற்றும் குரூப் சி பிரிவில் 731 பணியிடங்கள்.. உடனே விண்ணப்பிங்க!
-
DC vs PBKS Highlights : டி20 கிரிக்கெட் வரலாற்றில் 265 ரன்களை சேஸ் செய்து வரலாறு படைத்தது பஞ்சாப்!
-
Crude Oil Rates Today : இன்றைய கச்சா எண்ணெய் விலை நிலவரம்
-
Kirni Fruit Benefits in Tamil : 'கிர்ணி' பழத்தில் கொட்டி கிடக்கும் நன்மைகள்!
-
PGCIL Recruitment 2026 : மின்சாரத் துறையில் 660 காலியிடங்கள்.. உடனே விண்ணப்பிங்க!
-
RCB vs DC IPL 2026 Highlights : பெங்களூரு அணியை வீழ்த்தியது டெல்லி கேபிடல்ஸ்.!
-
Mr. X Movie Review : ஜி20 மாநாடு, அணு ஆயுதத் தாக்குதல் என சுவாரஸ்யமாக இருக்கிறதா மிஸ்டர் எக்ஸ்?
-
Fun Facts About Fireflies : மின்மினிப் பூச்சிகள் பற்றிய வேடிக்கையான உண்மைகள்!