Gistak Media

Candidates Chess 2026 : கேண்டிடேட்ஸ் செஸ் தொடர்.. மகளிர் பிரிவில் பட்டம் வென்றார் வைஷாலி.!

சைப்ரஸ் நாட்டில் நடைபெற்ற கேண்டிடேட்ஸ் செஸ் தொடர் என்பது உலக செஸ் சாம்பியனைத் தீர்மானிப்பதற்கான ஒரு மிக முக்கியமான தொடர் ஆகும் (Candidates Chess 2026). இந்த தொடரில் வெற்றி பெற்றவர், தற்போதைய உலக சாம்பியனுடன் மோதும் வாய்ப்பைப் பெறுவார்.

சைப்ரஸ் நாட்டில் பேஜியாவில் உள்ள Cap St Georges Hotel and Resort-ல் மார்ச் 28, 2026 முதல் ஏப்ரல் 16, 2026 நடைபெற்ற FIDE Women’s Candidates Tournament-ல் தமிழகத்தைச் சேர்ந்த இந்திய கிராண்ட் மாஸ்டர் ஆர். வைஷாலி ரஷ்யாவின் கேத்ரினா லாக்னோவை வீழ்த்தினார்.  தமிழகத்தைச் சேர்ந்த ஆர். வைஷாலி, இந்த உயரிய விருதை வென்ற முதல் இந்தியர் என்ற பெருமையை பெற்றுள்ளார்.

இந்திய சதுரங்க வரலாற்றில் நிகழ்ந்த ஒரு மிக முக்கியமான நிகழ்வு

தமிழகத்தைச் சேர்ந்த இந்திய கிராண்ட் மாஸ்டர் ஆர். வைஷாலி ரஷ்யாவின் கேத்ரினா லாக்னோவை வீழ்த்தி பெற்ற இந்த விருது ஒரு சரித்திர முக்கியத்துவம் வாய்ந்த விருதாகும்.  உலக வரலாற்றில் நிகழ்ந்த ஒரு மிக முக்கியமான நிகழ்ச்சியாக கருதப்படுகிறது. இந்திய சதுரங்க வரலாற்றில் ஒரு மைல்கல்லாக பதிவு செய்யப்பட்டுள்ளது.

மிகவும் விறுவிறுப்பாக நடைபெற்ற இறுதிச்சுற்று

வைஷாலி மற்றும் கஜகஸ்தான் வீராங்கனை பிபிசாரா ஆகிய இருவரும் இந்தத் தொடரின் இறுதிச்சுற்றுக்கு முன்னதாக தலா 7.5 புள்ளிகளுடன் சமநிலையை   பெற்றிருந்தனர். இந்தத் தலா 7.5 புள்ளி சமநிலை காரணமாக இறுதிச்சுற்றில் யார் வெற்றி பெறுகிறார்களோ அவர்களுக்கே பட்டம் என்ற நிலை உருவானது.

இறுதிச்சுற்று ஆட்டம் ஆனது மிகவும் விறுவிறுப்பாக நடைபெற்றது. இந்த இறுதிச்சுற்றில் ரஷியாவின் அனுபவம் வாய்ந்த வீராங்கனையான கேத்ரினா தமிழகத்தைச் சேர்ந்த ஆர். வைஷாலி எதிர்கொண்டார். வைஷாலி இந்தப் போட்டியில்  தனது அபாரமான ஆட்ட  திறனை வெளிப்படுத்தி கேத்ரினாவை வீழ்த்தினார். அதே நேரத்தில் வைஷாலியுடன் சமநிலையில் இருந்த பிபிசாரா, இறுதிச்சுற்றில் இந்திய வீராங்கனையான திவ்யாவுடன் விளையாடி தனது ஆட்டத்தை சமனில் (Draw) நிறைவு செய்தார்(Candidates Chess 2026).

Candidates Chess 2026 - GISTAK media

வைஷாலி பெற்ற திரில் வெற்றி

இறுதிச்சுற்றின் முடிவில் வைஷாலி 8.5/14 என்ற புள்ளி கணக்கில் தனித்து முதலிடத்தைப் பிடித்து சாம்பியன் பட்டத்தை வென்றார். கடந்த 2024-ம் ஆண்டின் கேண்டிடேட்ஸ் தொடரில் 7.5 புள்ளிகளுடன் இரண்டாம் இடத்தைப் பகிர்ந்து கொண்ட வைஷாலி இந்த 2026-ம் ஆண்டில் தனது ஆட்டத்திறனை மேம்படுத்தி, கூடுதலாக ஒரு புள்ளியைப் பெற்று 8.5 புள்ளிகளுடன் முதலிடத்தைப் பிடித்துள்ளார்.  இது ஒரு திரில் வெற்றி ஆகும்.

Candidates Chess 2026 : வைஷாலியின் அடுத்த உலக செஸ் சாம்பியன்ஷிப் போட்டி

நடப்பு சாம்பியனான சீனாவின் ஜு வென்ஜுனை எதிர்த்து தமிழகத்தைச் சேர்ந்த இந்திய கிராண்ட் மாஸ்டர் ஆர். வைஷாலி உலக செஸ் சாம்பியன்ஷிப் போட்டியில் விளையாட உள்ளார்.

Latest Slideshows

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *

Scroll to Top