Cannes 2024 - 77வது பதிப்பு மே 14 முதல் தொடங்கி மே 25, 2024 வரை
Cannes 2024 :
பிரான்ஸ் நாட்டில் மே 14 முதல் தொடங்கி மே 25, 2024 வரை 77 வது Cannes திரைப்பட விழா (Cannes 2024) மொத்தம் 10 நாட்கள் நடைபெற உள்ளது. Cannes திரைப்பட விழா, சினிமாவும் மற்றும் ஃபேஷனும் கலக்கும் ஒரு தளமாகும். உலகின் பல்வேறு பகுதிகளில் வெளியான திரைப்படங்கள் மற்றும் ஆவணப்படங்கள் இந்த Cannes திரைப்பட விழாவில் திரையிடப்பட உள்ளன. இந்த திரைப்பட விழாவில் இந்தியா சார்பில் புகழ்பெற்ற 7 திரைப்படங்கள் ஆனது திரையிடப்பட உள்ளன. 40 நாடுகளிலிருந்து திரைப்பட ஆளுமைகள் பங்கெடுக்கும் இந்த மாபெரும் Cannes திரைப்பட விழாவில் ‘லெட்ஸ் ஸ்பூக் கேன்ஸ் (Let’s Spook Cannes) என்கிற தலைப்பின் கீழ் ஒரு தமிழ் படைப்பானது திரையிட தேர்வாகி இருக்கிறது.
உலகெங்கிலும் உள்ள பிரபலங்களை இந்த மாபெரும் Cannes திரைப்பட விழாவில் (Cannes 2024) பார்ப்பது ஒரு விருந்தாகும். இந்த 2024 ஆம் ஆண்டு Cannes திரைப்பட நிகழ்வில் மெரில் ஸ்ட்ரீப், டெமி மூர் மற்றும் ஜார்ஜ் லூகாஸ் போன்ற பிரபலங்கள் கலந்து கொள்வார்கள். மேலும், சோபிதா துலிபாலா இந்த 2024 ஆம் ஆண்டு Cannes திரைப்பட நிகழ்வில் கலந்துகொள்ள தயாராக உள்ளார். இந்த விழாவில் ஆண்டுதோறும் இந்திய நடிகை ஐஸ்வர்யா ராய் கலந்துகொண்டு சிவப்புக் கம்பள அணிவகுப்பை அலங்கரித்து வருகிறார். இந்த வருடமும் நடிகை ஐஸ்வர்யா ராய் பார்வையாளர்களை கவர்வதற்காக தயாராகிவிட்டார்.
Cannes திரைப்பட நிகழ்வில் கலந்து கொள்வதற்காக கையில் கட்டுடன் மும்பை விமான நிலையத்துக்கு தனது மகள் ஆராத்யாவுடன் வந்தார் நடிகை ஐஸ்வர்யா ராய். வீடியோ சமூக வலைதளங்களில் மும்பை விமான நிலையம் வந்த நடிகை ஐஸ்வர்யா ராயின் புகைப்படங்கள் வைரலாகி வருகின்றன. இந்த 2024 ஆம் ஆண்டு திரைப்பட விழாவில் தீபிகா படுகோன், ஐஸ்வர்யா ராய், அதிதி ராவ் ஹைதாரி, ஷோபிதா துலிபாலா, கியாரா அத்வானி மற்றும் ஊர்வசி ரவுடேலா ஆகியோர் சிவப்பு கம்பள அணிவகுப்பில் பங்கேற்கிறார்கள். இது தொடர்பான வீடியோ காட்சிகள் சமூக வலைதளங்களில் பரவி வருகின்றன.
Latest Slideshows
-
May Day History : மே தினம் உருவானது எப்படி? தோற்றம், முக்கியத்துவம் மற்றும் கொண்டாட்டம்! -
Best Foods for Liver Health : கல்லீரல் ஆரோக்கியத்தை மேம்படுத்தும் சிறந்த 10 உணவுகள்.! -
SSC Jobs 2026 : எஸ்.எஸ்.சி குரூப் டி மற்றும் குரூப் சி பிரிவில் 731 பணியிடங்கள்.. உடனே விண்ணப்பிங்க! -
DC vs PBKS Highlights : டி20 கிரிக்கெட் வரலாற்றில் 265 ரன்களை சேஸ் செய்து வரலாறு படைத்தது பஞ்சாப்! -
Crude Oil Rates Today : இன்றைய கச்சா எண்ணெய் விலை நிலவரம் -
Kirni Fruit Benefits in Tamil : 'கிர்ணி' பழத்தில் கொட்டி கிடக்கும் நன்மைகள்! -
PGCIL Recruitment 2026 : மின்சாரத் துறையில் 660 காலியிடங்கள்.. உடனே விண்ணப்பிங்க! -
RCB vs DC IPL 2026 Highlights : பெங்களூரு அணியை வீழ்த்தியது டெல்லி கேபிடல்ஸ்.! -
Mr. X Movie Review : ஜி20 மாநாடு, அணு ஆயுதத் தாக்குதல் என சுவாரஸ்யமாக இருக்கிறதா மிஸ்டர் எக்ஸ்? -
Fun Facts About Fireflies : மின்மினிப் பூச்சிகள் பற்றிய வேடிக்கையான உண்மைகள்!