Captain Prabhakaran Part 2 : கேப்டன் பிரபாகரன் பார்ட் 2 படத்தை சண்முக பாண்டியனை வைத்து இயக்குவேன் ஆர்.கே.செல்வமணி
இயக்குநர் ஆர்.கே.செல்வமணி இயக்கத்தில், இசைஞானி இளையாராஜா இசையில் புரட்சி கலைஞர் விஜயகாந்த் நடிப்பில் 1991-ம் ஆண்டு வெளியான திரைப்படமான ‘கேப்டன் பிரபாகரன்’ திரைப்படம் 34 ஆண்டுகள் நிறைவு செய்திருக்கும் நிலையில் (Captain Prabhakaran Part 2) மீண்டும் படத்தை 4கே தரத்தில் ரீ-ரிலீஸ் செய்யப்பட்டுள்ளது. விஜயகாந்த்தின் சினிமா வாழ்க்கையில் 100-வது திரைப்படமாக கேப்டன் பிரபாகரன் அமைந்திருந்தது. இப்படத்தில் விஜயகாந்த் உடன் லிவிங்ஸ்டன், சரத்குமார், மன்சூர் அலிகான், ரம்யா கிருஷ்ணன், ரூபினி போன்ற முன்னணி திரை நட்சத்திரங்கள் தங்களின் சிறப்பான நடிப்பை கொடுத்திருந்தனர்.
கேப்டன் அடைமொழியின் வரலாறு
தமிழ் திரையுலகம் அதுவரை கேப்டன் பிரபாகரன் போன்ற ஒரு ஆக்சன் த்ரில்லர் படத்தை காணாமல் இருந்தது. கேப்டன் பிரபாகரன் திரைப்படம் வெளியான போது ஹாலிவுட் திரைப்படங்களுடன் ஒப்பிடப்பட்டது. மேலும் இந்த படத்திலிருந்து தான் மக்களால் விஜயகாந்திற்கு ’கேப்டன்’ என்ற அடைமொழி கிடைத்தது.
கேப்டன் பிரபாகரன் ரீ-ரிலீஸ் (Captain Prabhakaran Part 2)
இயக்குநர் ஆர்.கே.செல்வமணி செய்தியாளர் சந்திப்பில் 34 ஆண்டுகளுக்கு பிறகு மீண்டும் கேப்டன் பிரபாகரன் படத்தை 4கே தரத்தில் ரீ-ரிலீஸ் செய்யப்பட்டிருப்பதை மக்கள் இப்போது வெளியான திரைப்படம் போல கொண்டாடி வருகிறார்கள். மேலும் கேப்டன் பிரபாகரன் படத்திற்கு மக்களிடம் நல்ல வரவேற்பு கிடைப்பதை பார்க்கும்போது (Captain Prabhakaran Part 2) மிகுந்த மகிழ்ச்சியாக இருப்பதாகவும், ராவுத்தரும், கேப்டனும் இருந்திருந்தால் இன்னும் மகிழ்ச்சியாக இருந்திருக்கும், பரவாயில்லை அவர்களின் ஆசிர்வாதம் எப்போதும் எங்களுக்கு இருக்கிறது. மேலும் பேசிய அவர் நான் 7 ஆண்டுகளுக்கு முன் செம்மரக்கடத்தல் கதையை மையப்படுத்தி கேப்டன் பிரபாகரன் பார்ட் 2 எடுக்கவேண்டும் என நினைத்தேன், ஆனால் அப்போது புஷ்பா திரைப்படம் செம்மரக்கடத்தலை மையமாக வைத்து எடுக்கப்பட்டதால் நான் என் முடிவை மாற்றிக்கொண்டேன்.
கேப்டன் பிரபாகரன் பார்ட் 2
அதே சமயம் கேப்டன் பிரபாகரன் பார்ட் 2 படம் எடுக்க எனக்கு அப்போது தமிழ் சினிமாவில் விஜயகாந்த் போல ஒரு நடிகர் கிடைக்கவில்லை. மேலும் நான் சமீபத்தில் சண்முக பாண்டியன் நடித்த ‘படைத்தலைவன்’ திரைப்படத்தை பார்த்தேன், அதில் கேப்டனிடம் இருந்த அதே நடிப்பும் திறமையும் (Captain Prabhakaran Part 2) அவரிடமும் இருக்கிறது. எல்லாருடைய ஆதரவு நிச்சயம் இருந்தால் நான் சண்முக பாண்டியனை வைத்து கேப்டன் பிரபாகரன் பார்ட் 2 படத்தை இயக்குவேன் என ஆர்.கே.செல்வமணி தெரிவித்துள்ளார்.
Latest Slideshows
-
May Day History : மே தினம் உருவானது எப்படி? தோற்றம், முக்கியத்துவம் மற்றும் கொண்டாட்டம்!
-
Best Foods for Liver Health : கல்லீரல் ஆரோக்கியத்தை மேம்படுத்தும் சிறந்த 10 உணவுகள்.!
-
SSC Jobs 2026 : எஸ்.எஸ்.சி குரூப் டி மற்றும் குரூப் சி பிரிவில் 731 பணியிடங்கள்.. உடனே விண்ணப்பிங்க!
-
DC vs PBKS Highlights : டி20 கிரிக்கெட் வரலாற்றில் 265 ரன்களை சேஸ் செய்து வரலாறு படைத்தது பஞ்சாப்!
-
Crude Oil Rates Today : இன்றைய கச்சா எண்ணெய் விலை நிலவரம்
-
Kirni Fruit Benefits in Tamil : 'கிர்ணி' பழத்தில் கொட்டி கிடக்கும் நன்மைகள்!
-
PGCIL Recruitment 2026 : மின்சாரத் துறையில் 660 காலியிடங்கள்.. உடனே விண்ணப்பிங்க!
-
RCB vs DC IPL 2026 Highlights : பெங்களூரு அணியை வீழ்த்தியது டெல்லி கேபிடல்ஸ்.!
-
Mr. X Movie Review : ஜி20 மாநாடு, அணு ஆயுதத் தாக்குதல் என சுவாரஸ்யமாக இருக்கிறதா மிஸ்டர் எக்ஸ்?
-
Fun Facts About Fireflies : மின்மினிப் பூச்சிகள் பற்றிய வேடிக்கையான உண்மைகள்!