Carrom World Cup 2025 : கேரம் உலகக் கோப்பை.. 3 தங்கம் வென்ற சென்னை காசிமேடு கீர்த்தனா.!
சென்னை காசிமேட்டைச் சேர்ந்த கீர்த்தனா லோகநாதன் மாலத்தீவில் நடந்த 7வது கேரம் உலகக் கோப்பையின் 3 பிரிவிலும் தங்கப் பதக்கம் வென்று (Carrom World Cup 2025) இந்திய நாட்டுக்கும் மற்றும் தமிழகத்துக்கும் பெருமை சேர்த்துள்ளார். கீர்த்தனா மிகப்பெரிய வெற்றியை பதிவு செய்து சாதனை படைத்துள்ளார். இவரது இந்த சாதனை ஆனது உலகை இவர் பக்கம் திரும்பிப் பார்க்க வைத்துள்ளது. நேற்று மாலை தமிழகம் திரும்பிய மகளிர் அணி மற்றும் ஆடவர் அணிகளுக்கு சென்னை விமான நிலையத்தில் உற்சாகமான வரவேற்பு ஆனது அளிக்கப்பட்டது.
மாலத்தீவில் நடைபெற்ற 7வது கேரம் உலகக் கோப்பை
மாலத்தீவில் டிசம்பர் 2 முதல் டிசம்பர் 6 வரை நடைபெற்ற 7வது கேரம் உலகக் கோப்பையில் இலங்கை, இந்தியா, மாலத்தீவு, அமெரிக்கா, ஜெர்மனி மற்றும் பிரான்ஸ் என மொத்தம் 17 நாடுகளிலிருந்து 150-க்கும் மேற்பட்ட வீரர், வீராங்கனைகள் பங்கேற்றனர். கடந்த ஆண்டை போலவே இந்த ஆண்டும் இந்திய அணியினர் அசத்தியுள்ளனர். இந்தத் தொடரின் ஆடவர் பிரிவு மற்றும் மகளிர் பிரிவு ஆகிய இரு பிரிவுகளிலும் இரட்டையர், ஒற்றையர், குழு என அனைத்திலும் இந்தியா தங்கப் பதக்கம் வென்றுள்ளது. சென்னையின் காசிமேட்டைச் சேர்ந்த கீர்த்தனா இரட்டையர், ஒற்றையர் மற்றும் குழு என மூன்று பிரிவிலும் தங்கப் பதக்கம் வென்று அசத்தி உள்ளார்.
இந்திய அணியினர் சாம்பியன் பட்டத்தை வென்று அசத்தி உள்ளனர்
இந்த உலக கோப்பை போட்டி ஒட்டுமொத்தமாக ஏழு பிரிவுகளின் கீழ் நடை பெற்றது. இந்த உலக கோப்பை தொடரில், இந்திய ஆண்கள் மற்றும் பெண்கள் அணியினர் சேர்ந்து 7 தங்கம், 4 வெள்ளி, 3 வெண்கலம் என (Carrom World Cup 2025) மொத்தம் 14 பதக்கங்களை வென்று சாம்பியன் பட்டத்தை வென்றுள்ளனர். வெற்றிப்பெற்ற இந்திய வீரர் மற்றும் வீராங்கனைகளுக்கு வாழ்த்துக்கள் ஆனது குவிந்து வருகிறது.
இந்திய மகளிர் அணி வென்ற பதக்கங்களின் முழு விவரங்கள் (Carrom World Cup 2025)
- கீர்த்தனா மகளிர் ஒற்றையர் பிரிவில் தங்கப் பதக்கம் வென்றார்.
- இந்தியாவின் கீர்த்தனா – காஜல் குமாரி ஆகிய இருவரும் மகளிர் இரட்டையர் பிரிவில் தங்கப் பதக்கத்தை வென்றுள்ளனர்.
- இந்தியாவின் காசிமா – மித்ரா ஆகிய இருவரும் மகளிர் இரட்டையர் பிரிவில் வெள்ளிப் பதக்கத்தை வென்றுள்ளனர்.
- இந்தியாவின் கீர்த்தனா, காஜல் குமாரி, காசிமா, மற்றும் மித்ரா ஆகிய 4 பேர் அடங்கிய அணி மகளிர் குழு பிரிவில் தங்கப் பதக்கத்தை வென்றுள்ளது.
இந்த தொடரில், மொத்தத்தில் தமிழககத்தைச் சேர்ந்த வீராங்கனைகளான
- கீர்த்தனா 3 தங்கப் பதக்கமும்,
- காசிமா ஒரு தங்கப் பதக்கம், ஒரு வெள்ளிப் பதக்கம், மற்றும் ஒரு வெண்கலப் பதக்கமும்,
- மித்ரா ஒரு தங்கப் பதக்கம், மற்றும் ஒரு வெண்கலப் பதக்கமும் வென்றுள்ளனர்.
இந்திய ஆடவர் அணி வென்ற பதக்கங்களின் முழு விவரங்கள்
இந்திய வீரர் பிரசாந்த் ஆடவர் ஒற்றையர் பிரிவில் தங்கப் பதக்கம் வென்றுள்ளார். இந்தியாவின் ஸ்ரீனிவாஸ் – அபிஜித் ஆகிய இருவரும் ஆடவர் இரட்டையர் பிரிவில் இணை தங்கப் பதக்கத்தை வென்றுள்ளனர். இந்திய ஆடவர் அணி (Carrom World Cup 2025) ஆனது குழு போட்டியிலும் தங்கப் பதக்கத்தை வென்றுள்ளது. இந்த தொடரில், தமிழக வீரர் அப்துல்லா ஆசிஃப் ஸ்விஸ் லீக் பிரிவில் தங்கப் பதக்கம் வென்றுள்ளார்.
கீர்த்தனா தமிழக அரசு உதவ வேண்டும் என கோரிக்கை விடுத்துள்ளார்
சிறுவயதிலேயே தந்தையை இழந்த கீர்த்தனாவின் குடும்பம் ஆனது அவரது 2 தம்பிகளின் சொற்ப வருமானத்தில் வாழ்ந்து வருன்கிறது. தனது வீட்டில் படுக்கக்கூட இடம் இல்லை என்றும் தான் வாங்கி வரும் கப்புகள் எல்லாம் கேரம் கிளப்பில் தான் இருக்கும். தனது குடும்பம் மிகவும் ஏழ்மையான நிலையில் இருப்பதால் கீர்த்தனா தனக்கு அரசு வேலை வழங்கி, வீடு கட்டவும் இயன்ற உதவிகளை தமிழக அரசு செய்ய வேண்டும் என கோரிக்கை விடுத்துள்ளார்.
Latest Slideshows
-
May Day History : மே தினம் உருவானது எப்படி? தோற்றம், முக்கியத்துவம் மற்றும் கொண்டாட்டம்!
-
Best Foods for Liver Health : கல்லீரல் ஆரோக்கியத்தை மேம்படுத்தும் சிறந்த 10 உணவுகள்.!
-
SSC Jobs 2026 : எஸ்.எஸ்.சி குரூப் டி மற்றும் குரூப் சி பிரிவில் 731 பணியிடங்கள்.. உடனே விண்ணப்பிங்க!
-
DC vs PBKS Highlights : டி20 கிரிக்கெட் வரலாற்றில் 265 ரன்களை சேஸ் செய்து வரலாறு படைத்தது பஞ்சாப்!
-
Crude Oil Rates Today : இன்றைய கச்சா எண்ணெய் விலை நிலவரம்
-
Kirni Fruit Benefits in Tamil : 'கிர்ணி' பழத்தில் கொட்டி கிடக்கும் நன்மைகள்!
-
PGCIL Recruitment 2026 : மின்சாரத் துறையில் 660 காலியிடங்கள்.. உடனே விண்ணப்பிங்க!
-
RCB vs DC IPL 2026 Highlights : பெங்களூரு அணியை வீழ்த்தியது டெல்லி கேபிடல்ஸ்.!
-
Mr. X Movie Review : ஜி20 மாநாடு, அணு ஆயுதத் தாக்குதல் என சுவாரஸ்யமாக இருக்கிறதா மிஸ்டர் எக்ஸ்?
-
Fun Facts About Fireflies : மின்மினிப் பூச்சிகள் பற்றிய வேடிக்கையான உண்மைகள்!