இந்தியாவின் பொருளாதார தலைநகரமான மும்பையை தலைமையிடமாக கொண்டு செயல்பட்டு வரும் சென்ட்ரல் பேங்க் ஆஃப் இந்தியா வங்கிக்கு நாடு முழுவதும் நூற்றுக்கணக்கான (Central Bank Of India Recruitment 2025) கிளைகள் உள்ளன. இந்த சென்ட்ரல் வங்கியில் ஏற்படும் காலிப்பணியிடங்களுக்கு அவ்வப்போது உரிய அறிவிப்புகள் வெளியிடப்பட்டு நிரப்பப்படுகின்றன. அந்த வகையில் தற்போது காலியாக உள்ள ‘அப்ரண்டிஸ்’ பணியிடங்களை நிரப்ப அறிவிப்பு வெளியாகியுள்ளது.
Central Bank Of India Recruitment 2025
1.காலியிடங்களின் எண்ணிக்கை (Total Vacancy)
சென்ட்ரல் வங்கியில் காலியாக உள்ள அப்ரண்டிஸ் (Apprentice) பணியிடங்களை நிரப்புவதற்கு மொத்தம் 4500 காலிப்பணியிடங்கள் அறிவிக்கப்பட்டுள்ளது. மேலும் தமிழகத்தில் உள்ள கிளைகளுக்கு மட்டும் 202 பணியிடங்கள் ஒதுக்கப்பட்டுள்ளது.
2.கல்வி தகுதி (Educational Qualification)
சென்ட்ரல் வங்கியில் இந்த அப்ரண்டிஸ் பணியிடங்களுக்கு அரசாங்கத்தால் அங்கீகரிக்கப்பட்ட கல்லூரிகளில் ஏதேனும் ஒரு பாடப்பிரிவில் டிகிரி முடித்தவர்கள் விண்ணப்பிக்கலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
3.வயது தகுதி (Age)
சென்ட்ரல் பேங்க் ஆஃப் இந்தியா வங்கியில் இந்த அப்ரண்டிஸ் பதவிக்கு 20 வயது முதல் 28 வயதிற்குள் இருப்பவர்கள் விண்ணப்பிக்கலாம் எனவும், மாற்றுத்திறனாளிகளுக்கு பத்து ஆண்டுகளும், SC/ST பிரிவினர்களுக்கு ஐந்து ஆண்டுகளும், OBC பிரிவினர்களுக்கு மூன்று ஆண்டுகளும் அரசு விதிகளின்படி வயது வரம்பில் தளர்வு அளிக்கப்படும் என அறிவிப்பில் கூறப்பட்டுள்ளது.
4.சம்பளம் (Salary)
சென்ட்ரல் வங்கியில் இந்த அப்ரண்டிஸ் பணியிடங்களுக்கு தேர்வுசெய்யப்படும் விண்ணப்பதாரர்களுக்கு 2 வருடம் ஒப்பந்தம் அடிப்படையில் மாதம் ரூ.15000 சம்பளம் வழங்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
5.தேர்வு செய்யப்படும் முறை (Selection Process)
இந்த அப்ரண்டிஸ் பணியிடங்களுக்கு முதலில் ஆன்லைன் தேர்வில் தேர்ச்சி பெற்ற நபர்கள் சான்றிதழ் சரிபார்ப்புக்கு அழைக்கப்பட்டு அதன் மூலம் தகுதியான நபர்கள் தேர்வுசெய்யப்படுவார்கள் எனவும், ஜூலை முதல் வாரத்தில் ஆன்லைன் தேர்வு நடைபெறும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
6.விண்ணப்ப கட்டணம் (Application Fees)
சென்ட்ரல் பேங்க் ஆஃப் இந்தியா வங்கியில் இந்த அப்ரண்டிஸ் பணியிடங்களுக்கு தேர்வு கட்டணமாக பொதுப்பிரிவினர்க்கு ரூ.800 ஆகவும், மற்ற பிரிவினர்களுக்கு ரூ.400 ஆகவும் நிர்ணயிக்கப்பட்டுள்ளது.
7.விண்ணப்பிக்க கடைசி நாள் (Last Date)
சென்ட்ரல் பேங்க் ஆஃப் இந்தியா வங்கியில் இந்த அப்ரண்டிஸ் பணியிடங்களுக்கு விண்ணப்பிக்க கடைசி நாள் வரும் 23.06.2025 ஆகும்.