இந்தியர்களால் நிறுவப்பட்ட முதல் முக்கிய வங்கிகளில் ஒன்றான சென்ட்ரல் பேங்க் ஆப் இந்தியா (Central Bank of India Recruitment) ஆனது 275 அதிகாரி பணியிடங்களை நிரப்புவதற்காக பெரிய வேலைவாய்ப்பு அறிவிப்பை ஒன்றை வெளியிட்டுள்ளது. பாதுகாப்பான வேலை, நல்ல சம்பளம், மற்றும் சமூக மரியாதை போன்ற காரணங்களால் இந்த அறிவிப்பு ஆனது இந்தியா முழுவதும் உள்ள பட்டதாரி இளைஞர்களுக்கு ஒரு மிகப்பெரிய வாய்ப்பாக பார்க்கப்படுகிறது.
பணியிடங்களின் விவரங்கள்
- Network Administrator / Network Security – 5
- Enterprise / Integration / Public Cloud Architect – 6
- Data Engineer / Data Quality / ETL / PLSQL / BI – 15
- Production Support / ROC / Digital Support – 26
- Information Security, Cyber Security & IT Governance, Risk – 38
- Web Server / Web Logic Administrator – 3
- DevSecOps – 4
- Gen AI – 2
- Data Architect – 2
- IT Officer – 82
- Data Scientist – 6
சென்ட்ரல் பேங்க் ஆப் இந்தியாவில் வெவ்வேறு Scale-களுக்கான சம்பள விவரங்கள்
- Chief Manager (Scale IV) – Rs.1,02,300 முதல் Rs.1,20,940/- வரை
- Senior Manager (Scale III) – Rs.85,920 முதல் Rs.1,05,280/- வரை
- Manager (Scale II) – Rs.64,820 முதல் Rs.93,960/- வரை
- Assistant Manager (Scale I) – Rs.48,480 முதல் Rs.85,920/- வரை
விண்ணப்பிக்க தகுதிகள்
- அங்கீகரிக்கப்பட்ட பல்கலைக்கழகத்தில் இருந்து B.E / B.Tech / MCA பட்டம்
பெற்ற பட்டதாரிகள் இப்பணியிடங்களுக்கு விண்ணப்பிக்கலாம். - வயது வரம்பு ஆனது பதவிக்கு ஏற்ப மாறுபடும்.
1.Scale I: 22-30 வயது
2.Scale II: 25-35 வயது
3.Scale III: 25-35 வயது
4.Scale IV: 30-45 வயது
- அதாவது 22 முதல் 45 வயதிற்கு உற்பட்டவர்கள் விண்ணப்பிக்கலாம்.
SC/ST-பிரிவினருக்கு 5 ஆண்டுகள், மற்றும் OBC-பிரிவினருக்கு 3 ஆண்டுகள் தளர்வு உண்டு.
தேர்வுசெய்யும் முறை விவரங்கள் (Central Bank of India Recruitment)
சென்ட்ரல் பேங்க் ஆப் இந்தியா பணியிடங்களுக்கான தேர்வுசெய்யும் முறை ஆனது இரண்டு நிலைகளைக் கொண்டுள்ளது
- Online தேர்வு
- நேர்காணல்
Online தேர்வில் தகுதி பெறுபவர்கள் நேர்காணலுக்கு அழைக்கப்படுவார்கள். தேர்வு பெற்றவர்கள் பட்டியல் பின்னர் வெளியிடப்படும்
விண்ணப்பக் கட்டண விவரங்கள்
- பொது/OBC பிரிவு விண்ணப்பதாரர்கள் ரூ.850/- விண்ணப்பக் கட்டணம் செலுத்த வேண்டும்.
- SC/ST/ PwBD/ மகளிர் விண்ணப்பதாரர்கள் ரூ.150/- விண்ணப்பக் கட்டணம் செலுத்த வேண்டும். மேலும் விண்ணப்பதாரர்கள் (Central Bank of India Recruitment) தங்கள் விண்ணப்பக் கட்டணத்தை ஆன்லைன் மூலம் செலுத்த வேண்டும்.
விண்ணப்பிக்க முக்கிய தேதிகள்
- விண்ணப்பதாரர்கள் விண்ணப்பிக்க ஆரம்ப தேதி – 02.02.2026
- விண்ணப்பதாரர்கள் விண்ணப்பிக்க கடைசி தேதி – 23.03.2026
இந்த வேலைக்கு விண்ணப்பிக்க விரும்பும் விண்ணப்பதாரர்கள் சென்ட்ரல் பேங்க் ஆப் இந்தியா வங்கியின் அதிகாரப்பூர்வ இணையதளத்தில் ஆன்லைன் மூலம் விண்ணப்பிக்க வேண்டும். மேலும் விவரங்களுக்கு சென்ட்ரல் பேங்க் ஆப் இந்தியா வங்கியின் அதிகாரப்பூர்வ அறிவிப்பை விண்ணப்பதாரர்கள் சரிபார்க்கவும்.