Chandipura Virus : இந்தியாவில் சண்டிபுரா என்ற புதிய வகை வைரஸ் வேகமாக பரவி வருகிறது
கடந்த 5 நாட்களில் குஜராத்தின் ஆரவல்லி மாவட்டத்தில் 6 குழந்தைகள் சண்டிபுரா என்ற புதிய வகை வைரஸால் (Chandipura Virus) உயிரிழந்துள்ளனர். மேலும் இந்த சண்டிபுரா வைரஸால் 12 பேருக்கு பாதிப்பு ஏற்பட்டிருப்பதாக கூறப்படுகிறது.
சண்டிபுரா வைரஸ் பற்றிய குறிப்புகள் :
மகாராஷ்டிராவில் உள்ள சண்டிபுரா என்ற கிராமத்தில் இந்த வைரஸ் (Chandipura Virus) ஆனது முதன்முதலில் 1965ல் கண்டுபிடிக்கப்பட்டது. அதன் காரணமாக இந்த வைரஸ் ஆனது சண்டிபுரா வைரஸ் என்று அழைக்கப்படுகிறது. இந்த சண்டிபுரா வைரஸ் ஆனது அதிகம் குழந்தைகளிடையே தான் பரவுகிறது. இந்த சண்டிபுரா வைரஸ் ஆனது சண்டிபுரா வெசிகுலோவைரஸ் (CHPV), ராப்டோவிரிடே குடும்பத்தைச் சேர்ந்த ஒரு RNA வைரஸ் ஆகும். நாய்க் கடியால் ஏற்படும் ரேபிஸ் வைரஸும் இந்த RNA வைரஸில் அடங்கும். வெக்டார்- பாதிக்கப்பட்ட ஒரு வகையான Sandflies எனப்படும் மணல் ஈக்கள் (மணல் பூச்சிகள்) கடிப்பதால் இந்த சண்டிபுரா நோய் ஏற்படுவதாகக் கூறப்படுகிறது. இந்த சண்டிபுரா நோய் குறிப்பாக 9 மாதங்கள் முதல் 14 வயதிற்கு உட்பட்ட குழந்தைகளையே அதிகம் பாதிக்கிறது. மேலும் குறிப்பாக கிராமப் புறங்களில் இந்த சண்டிபுரா நோய் அதிகம் காணப்படுகிறது.
Chandipura Virus-ன் அறிகுறிகள் :
இந்த சண்டிபுரா நோயின் அறிகுறிகள் வாந்தி, தலைவலி மற்றும் காய்ச்சல் ஆகும். இந்த காய்ச்சல் ஆனது திடீரென அதிகரிக்கும். கடுமையான தலைவலி தோன்றும் மற்றும் அடிக்கடி வாந்தி வரும். உடலில் நீர்ச்சத்து குறைபாடு ஏற்படும். வலிப்பு ஆனது இந்த சண்டிபுரா நோயின் ஒரு முக்கிய அறிகுறி ஆகும். சில சமயங்களில் இந்த சண்டிபுரா நோயின் காரணமாக குழப்பம், எரிச்சல் ஏற்படும் மற்றும் நினைவுகள் கூட தப்பும். இந்த சண்டிபுரா நோயின் மிக மோசமான பாதிப்பின் காரணமாக கோமா கூட ஏற்படும். கொரோனா போல இந்த சண்டிபுரா நோய் ஆனது ஒருவரிடம் இருந்து மற்றொருவருக்குப் பரவாது.
சண்டிபுரா வைரஸ் நோயின் தடுப்பு சிகிச்சைகள் :
இந்த சண்டிபுரா நோய்க்கு என்று தனிப்பட்ட தடுப்பு சிகிச்சைகள் எதுவும் இல்லை. கொரோனா போல இது ஒருவரிடம் இருந்து மற்றொருவருக்குப் பரவாது என்றாலும் இது ஒரு தீவிர நோய்க்கிருமி ஆகும். அதனால் எவ்வளவுக்கு எவ்வளவு சீக்கிரம் இந்த சண்டிபுரா நோய்க்கு சிகிச்சை பெறுகிறோமோ, அவ்வளவுக்கு அவ்வளவு மிகவும் நல்லது ஆகும். குறிப்பாக வாந்தி எடுப்பதால் உடலில் நீர்ச்சத்து குறைபாடு ஏற்படும். எனவே தொடர்ந்து நீர் எடுத்துக் கொள்ள வேண்டும். மருத்துவர் ஆலோசனையுடன் காய்ச்சலைக் குறைக்கவும் மற்றும் வலிப்பு ஏற்படுவதை நிறுத்தவும் மருந்துகள் எடுத்துக் கொள்ள வேண்டும். கடுமையான நரம்பியல் அறிகுறிகள் ஏற்பட்டால் அதற்கான சிகிச்சை எடுத்துக் கொள்ள வேண்டும்.
குஜராத் சுகாதார அமைச்சர் ருஷிகேஷ் படேல் உரை :
இந்த சண்டிபுரா நோய் குறித்து குஜராத் சுகாதார அமைச்சர் ருஷிகேஷ் படேல், “சபர்கந்தா மாவட்டத்தில் உள்ள ஹிமத்நகரில் உள்ள சிவில் மருத்துவமனையில் இந்த சண்டிபுரா நோய் காரணமாக 5 பேர் உயிரிழந்துள்ளனர். ஹிமத்நகர் அருகே உள்ள வேறு மருத்துவமனையில் மற்றொரு உயிரிழப்பு ஆனது பதிவாகியுள்ளது. இந்த உயிரிழப்புகளுக்கு Chandipura Virus தான் காரணம் என்பதை உறுதி செய்ய மாதிரிகளை புனேவின் தேசிய வைராலஜி நிறுவனத்திற்கு நாங்கள் அனுப்பியுள்ளோம்” என்றார். இந்த சண்டிபுரா வைரஸ் நோய் தொற்று குறித்து இன்னும் ஆய்வுகள் தொடர்ந்து நடந்து வருகிறது.
Latest Slideshows
-
May Day History : மே தினம் உருவானது எப்படி? தோற்றம், முக்கியத்துவம் மற்றும் கொண்டாட்டம்!
-
Best Foods for Liver Health : கல்லீரல் ஆரோக்கியத்தை மேம்படுத்தும் சிறந்த 10 உணவுகள்.!
-
SSC Jobs 2026 : எஸ்.எஸ்.சி குரூப் டி மற்றும் குரூப் சி பிரிவில் 731 பணியிடங்கள்.. உடனே விண்ணப்பிங்க!
-
DC vs PBKS Highlights : டி20 கிரிக்கெட் வரலாற்றில் 265 ரன்களை சேஸ் செய்து வரலாறு படைத்தது பஞ்சாப்!
-
Crude Oil Rates Today : இன்றைய கச்சா எண்ணெய் விலை நிலவரம்
-
Kirni Fruit Benefits in Tamil : 'கிர்ணி' பழத்தில் கொட்டி கிடக்கும் நன்மைகள்!
-
PGCIL Recruitment 2026 : மின்சாரத் துறையில் 660 காலியிடங்கள்.. உடனே விண்ணப்பிங்க!
-
RCB vs DC IPL 2026 Highlights : பெங்களூரு அணியை வீழ்த்தியது டெல்லி கேபிடல்ஸ்.!
-
Mr. X Movie Review : ஜி20 மாநாடு, அணு ஆயுதத் தாக்குதல் என சுவாரஸ்யமாக இருக்கிறதா மிஸ்டர் எக்ஸ்?
-
Fun Facts About Fireflies : மின்மினிப் பூச்சிகள் பற்றிய வேடிக்கையான உண்மைகள்!