Chandramukhi 2 Official Trailer : சந்திரமுகி 2 படத்தின் டிரைலர் வெளியீடு
Chandramukhi 2 Official Trailer :
நடிகர் ராகவா லாரன்ஸ் மற்றும் கங்கனா ரனாவத் நடித்துள்ள சந்திரமுகி 2 திரைப்படம் இந்த மாதம் 28ஆம் தேதி சர்வதேச அளவில் திரையரங்குகளில் வெளியாக உள்ளது. முன்னதாக, படத்தின் வெளியீடு கடந்த வாரம் திட்டமிடப்பட்டிருந்த நிலையில், தவிர்க்க முடியாத காரணங்களால் படத்தின் வெளியீடு தள்ளிப்போனது. கடந்த 2005ம் ஆண்டு ரஜினிகாந்த் நடித்த சந்திரமுகி படம் வெளியாகி சூப்பர் ஹிட்டானது. இப்படத்தை பி.வாசு இயக்கியிருந்தார்.
இப்படத்தில் ரஜினிகாந்த், ஜோதிகா, நயன்தாரா, வடிவேலு, பிரபு ஆகியோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்த சந்திரமுகி 2005 ஆம் ஆண்டு வெளியானது. பி.வாசு இயக்கிய இந்தப் படம் மலையாளத்தில் இருந்து ரீமேக் செய்யப்பட்டது. முன்னதாக தெலுங்கில் வெளியான இப்படம் ரசிகர்களிடையே பெரும் வரவேற்பை பெற்றது. இந்த படத்தில் ரஜினிக்காக தமிழில் சில மாஸான விஷயங்களை பி.வாசு இயக்கியிருந்தார். படத்தில் ஆக்ஷன், சென்டிமென்ட், த்ரில்லர், காமெடி என பல்வேறு விஷயங்கள் படத்தில் சேர்க்கப்பட்டது. குறிப்பாக படத்தில் ரஜினியின் ஆக்ஷன், ஜோதிகாவின் மிரட்டலான நடிப்பு, ரஜினி-வடிவேலு காமெடி என அனைத்தும் மிக சிறப்பாக சேர்த்திருந்த படம் ரஜினிக்கு மட்டுமின்றி இந்த படத்தின் அனைத்து நடிகர்களுக்கும் பெரும் வரவேற்பை கொடுத்தது. இந்தப் படத்தில் பல முன்னணி நடிகர்களுடன் நடிக்கும் வாய்ப்பு நயன்தாராவுக்கு கிடைத்தது.
இந்நிலையில், 18 ஆண்டுகளுக்கு பிறகு இந்த படத்தின் இரண்டாம் பாகத்தை தற்போது பி.வாசுவே இயக்கியுள்ளார். இப்படம் கடந்த வாரம் வெளியாகும் என அறிவிக்கப்பட்ட நிலையில், சில வேலைகள் காரணமாக ரிலீஸ் செப்டம்பர் 28க்கு தள்ளி வைக்கப்பட்டுள்ளது. படம் வெளியாக இன்னும் சில நாட்களே உள்ள நிலையில் படத்தின் புரமோஷன் பணிகளில் ராகவா லாரன்ஸ், மகிமா உள்ளிட்டோர் ஈடுபட்டுள்ளனர். தமிழ், ஹிந்தி, தெலுங்கு ஆகிய மொழிகளில் பான் இந்தியா படமாக வெளியாக இருக்கும் இந்தப் படத்தின் டிரைலர் முன்னதாகவே வெளியானது. இசை வெளியீட்டு விழாவும் பிரம்மாண்டமாக நடைபெற்றது. இதில் ராகவா லாரன்ஸ், கங்கனா ரனாவத், இயக்குநர் பி.வாசு, வடிவேலு உள்ளிட்டோர் கலந்து கொண்டு ரசிகர்களை கவரும் வகையில் பேசினர்.
Chandramukhi 2 Official Trailer : இந்நிலையில் படத்தின் புதிய டிரைலரை படக்குழு (Chandramukhi 2 Official Trailer) வெளியிட்டுள்ளது. ஆஸ்கர் நாயகன் கீரவாணியின் இசையில் படத்தின் மீதான இசையமைத்துள்ள இப்படத்தின் பயங்கரமான பாடல்களும் முன்னதாக வெளியாகியுள்ளன. இந்நிலையில் தற்போது வெளியாகியுள்ள இப்படத்தின் புதிய டிரைலரில் (Chandramukhi 2 Official Trailer) சந்திரமுகியில் கங்காவாக நடித்திருந்த ஜோதிகா குறித்த பேசும் உரையாடல்களும் இடம்பெற்றுள்ளன. இப்படத்தில் அசல் சந்திரமுகியே நடித்துள்ளதாக கூறப்படுகிறது. சந்திரமுகி படத்தில் ரஜினியும் வடிவேலுவும் இணைந்து பேய் பற்றி பேசும் காட்சிகள் ரசிகர்களை கவர்ந்தது. இதனிடையே ராகவா லாரன்ஸுடன் சேர்ந்து சந்திரமுகி 2 படத்தில் பேய் குறித்த சந்தேகத்தை வடிவேலு எழுப்பியுள்ளார். பேய்க்கு வயசாகுமா ஆகாதா, மண்டையில முடி கொட்டும்மா கொட்டதா என்று வடிவேலு லாரன்ஸிடம் கேட்க, அதை ஏன் முருகேசா என்னிடம் கேக்குற என்று லாரன்ஸ் கேட்கும் ரகளையான காட்சிகள் டிரைலரில் இடம்பெற்றுள்ளதால், படத்தின் மீதான எதிர்பார்ப்பு அதிகரித்துள்ளது.
Latest Slideshows
-
May Day History : மே தினம் உருவானது எப்படி? தோற்றம், முக்கியத்துவம் மற்றும் கொண்டாட்டம்!
-
Best Foods for Liver Health : கல்லீரல் ஆரோக்கியத்தை மேம்படுத்தும் சிறந்த 10 உணவுகள்.!
-
SSC Jobs 2026 : எஸ்.எஸ்.சி குரூப் டி மற்றும் குரூப் சி பிரிவில் 731 பணியிடங்கள்.. உடனே விண்ணப்பிங்க!
-
DC vs PBKS Highlights : டி20 கிரிக்கெட் வரலாற்றில் 265 ரன்களை சேஸ் செய்து வரலாறு படைத்தது பஞ்சாப்!
-
Crude Oil Rates Today : இன்றைய கச்சா எண்ணெய் விலை நிலவரம்
-
Kirni Fruit Benefits in Tamil : 'கிர்ணி' பழத்தில் கொட்டி கிடக்கும் நன்மைகள்!
-
PGCIL Recruitment 2026 : மின்சாரத் துறையில் 660 காலியிடங்கள்.. உடனே விண்ணப்பிங்க!
-
RCB vs DC IPL 2026 Highlights : பெங்களூரு அணியை வீழ்த்தியது டெல்லி கேபிடல்ஸ்.!
-
Mr. X Movie Review : ஜி20 மாநாடு, அணு ஆயுதத் தாக்குதல் என சுவாரஸ்யமாக இருக்கிறதா மிஸ்டர் எக்ஸ்?
-
Fun Facts About Fireflies : மின்மினிப் பூச்சிகள் பற்றிய வேடிக்கையான உண்மைகள்!