Gistak Media

Chandramukhi 2 Second Single : சந்திரமுகி 2 படத்தின் 2வது பாடல் வெளியீடு...

Chandramukhi 2 Second Single : நடிகர் ராகவா லாரன்ஸ் நடித்துள்ள சந்திரமுகி 2 படத்தின் 2வது பாடல் வெளியாகி இணையத்தில் வைரலாகி வருகிறது.

சந்திரமுகி :

சந்திரமுகி திரைப்படம் 2005-ல் வெளியானது. இந்த படத்தில் ரஜினி கதாநாயகனாக நடித்துள்ளார். இந்த படத்தை இயக்குனர் பி.வாசு இயக்கியுள்ளார். இப்படத்தில் பிரபு, நயன்தாரா, சோனுசூத், வினீத், மாளவிகா, ஜோதிகா, வடிவேலு, நாசர், செம்மீன் ஷீலா ஆகியோர் நடித்திருந்தனர். சிவாஜி புரொடக்ஷன்ஸ் சார்பில் நடிகர் பிரபு தயாரித்திருந்தார். தமிழ் சினிமா வரலாற்றில் அதிக நாட்கள் ஓடிய திரைப்படம் என்ற பெருமையை சந்திரமுகி பெற்றது. மாபெரும் வெற்றி பெற்ற இப்படத்தை தொலைக்காட்சியில் ஒளிபரப்பினால் டிஆர்பி உயர்த்தும் அளவிற்கு பார்வையாளர்கள் உள்ளனர். இந்நிலையில் கடந்த சில வருடங்களாக சந்திரமுகி படத்தின் இரண்டாம் பாகத்தை எடுக்கும் முயற்சியில் பி.வாசு ஈடுபட்டு வந்தார்.

சந்திரமுகி 2 :

இதனிடையே சந்திரமுகி 2 படத்தை லைக்கா புரொடக்ஷன்ஸ் நிறுவனம் தயாரிக்கப் போவதாக அறிவித்த நிலையில் ரசிகர்கள் மகிழ்ச்சி அடைந்தனர். இப்படத்தில் இயக்குனரும், நடிகருமான ராகவா லாரன்ஸ் ஹீரோவாகவும், நடிகை கங்கனா ரனாவத் ஹீரோயினாகவும் நடிக்கின்றனர். அதேசமயம் வடிவேலு, ராவ் ரமேஷ், விக்னேஷ், ரவி மரியா, சுரேஷ் மேனன், மகிமா நம்பியார், லட்சுமி மேனன், சிருஷ்டி டாங்கே, சுபிக்ஷா கிருஷ்ணன் மற்றும் ராதிகா என மிகப்பெரிய நட்சத்திர பட்டாளமே இப்படத்தில் நடித்துள்ளனர். இப்படத்திற்கு மரகதமணி இசையமைத்துள்ளார். சந்திரமுகி 2 திரைப்படம் செப்டம்பர் 19ஆம் தேதி விநாயகர் சதுர்த்தி அன்று திரைக்கு வரும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

தமிழ், ஹிந்தி, தெலுங்கு, கன்னடம், மலையாளம் என 5 மொழிகளில் உருவாகியுள்ள சந்திரமுகி 2 படத்தின் படப்பிடிப்பு விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. படத்தின் அப்டேட்களும் அடுத்தடுத்து வெளியாகி வருகின்றன. அந்த வகையில் வேட்டை மன்னன் சந்திரமுகி கதாபாத்திரத்தின் தோற்றம் வெளிப்பட்டது. பின்னர் ஆகஸ்ட் 11 அன்று முதல் பாடலாக “ஸ்வகதாஞ்சலி” பாடல் வெளியிடப்பட்டது. ஸ்ரீநிதி திருமலா பாடிய இந்தப் பாடலை சைதன்ய பிரசாத் எழுதியுள்ளார்.

Chandramukhi 2 Second Single :

Chandramukhi 2 Second Single : இந்நிலையில் சந்திரமுகி 2 படத்தின் ‘மொருனியே’ என்னும் பாடல் வெளியாகியுள்ளது. இதற்கான ப்ரோமோ வீடியோ நேற்று வெளியானதாக பாடலைப் பார்த்தவர்கள் மிக வித்தியாசமாக வெளியாகி உள்ளதாக தங்களது கருத்துக்களை தெரிவித்துள்ளனர். இந்த ‘மொருனியே’ பாடலை கேட்கும் போது ‘RRR’ பாடல் தான் நினைவுக்கு வருவதாக பலர் தெரிவித்து வருகின்றனர். இந்த பாடல் தான் உத்வேகத்திற்கு ஆதாரம் என நெட்டிசன்கள் தெரிவித்துள்ளனர். எஸ்.பி.பி. சரண் மற்றும் ஹரிகா நாராயண் பாடியுள்ள இந்த பாடலை விவேக் எழுதியுள்ளார். தற்போது இந்த பாடல் இணையத்தில் (Chandramukhi 2 Second Single) வைரலாகி வருகிறது.

Latest Slideshows

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *

Scroll to Top