Chennai Customs Department Job: ரூ. 69,100 ரூபாய் சம்பளத்தில் சுங்க துறையில் வேலைவாய்ப்பு
சென்னையில் சுங்க துறையில் காலியாக உள்ள இடங்களைநிரப்புவதற்கான அறிவிப்பு வெளியாகியுள்ளது. சென்னை ராஜாஜி சாலையில் உள்ள கஸ்டம்ஸ் செயல்பட்டு வருகிறது. இங்கு காலியாக உள்ள பணியிடங்களை நிரப்புவதற்கான அறிவிப்பை வெளியிட்டுள்ளது. தகுதியும் விருப்பமும் உள்ள விண்ணப்பதாரர்கள் இணையத்தின் மூலம் விண்ணப்பிக்கலாம்.
Chennai Customs Department Job பணியிட விவரம்
மொத்த கலிப்பாணியிடம்: 10
* Clerk – 1
* Halwai-Cum-Cook – 1
* Canteen Attendar – 8
கல்வித்தகுதி:
* Halwai-Cum பணிக்கு 10 ஆம் வகுப்பு முடித்திருக்க வேண்டும் மற்றும் டிப்ளமோ கேட்டரிங் படிப்பிற்கான சான்றிதழ்களை பெற்றிருக்க வேண்டும்.
* Clerk பணிக்கு 12 ஆம் வகுப்பு அல்லது அதற்கு நிகரான வணிகவியல் பாடத்தை முடித்திருக்க வேண்டும். மேலும் டைப்பிங் தெரிந்திருக்க வேண்டும்.
* Canteen Attendar பணிக்கு 10 ஆம் வகுப்பு தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்.
வயது வரம்பு:
பணியில் விண்ணப்பிக்க விரும்புவோர் 18 வயதில் இருந்து 28 வயது இருக்க வேண்டும்.
சம்பளம்:
மாத சம்பளமாக ரூ. 19,000 முதல் 96,000 வரை வழங்கப்படும்.
விண்ணப்பிக்கும் முறை:
பணிக்கு விண்ணப்பிக்க விரும்புவோர் https://chennaicustoms.gov.in/ என்ற இணையதளத்தின் மூலம் விண்ணப்பிக்க வேண்டும்.
விண்ணப்பிக்க கடைசி நாள்: 30/06/2023 மாலை 6 மணிக்குள் விண்ணப்பிக்க வேண்டும்.








