Gistak Media

Chennai Real Estate Market 2026 : 2026-ல் சென்னை ரியல் எஸ்டேட் சந்தை 5%–7% வரை வளர்ச்சி காணும் என கணிப்பு.!

இந்தியாவின் முக்கிய மெட்ரோ நகரங்களில் ஒன்றான சென்னை இந்தியாவின் மிகவும் நிலையான ரியல் எஸ்டேட் சந்தைகளில் (Chennai Real Estate Market 2026) ஒன்றாக திகழ்கிறது. மும்பை, பெங்களூரு, ஹைதராபாத் போன்ற நகரங்களுடன் ஒப்பிடும்போது சென்னை கடந்த சில ஆண்டுகளாக நிலையான மற்றும் சமநிலையான ரியல் எஸ்டேட் வளர்ச்சியை அனுபவித்து வருகிறது.

சென்னை ரியல் எஸ்டேட் சந்தை சுமார் 5% - 7% வளர்ச்சி அடையும்

சென்னை ரியல் எஸ்டேட் சந்தை ஆனது 2026-ஆம் ஆண்டில் சுமார் 5% முதல் 7% வரை வளர்ச்சி அடையும் என பல தொழில்துறை ஆய்வுகள் மற்றும் மதிப்பீடுகள் கணித்துள்ளன. சமீபத்திய சந்தை ஆய்வுகள் இதை உறுதி செய்கின்றன. சென்னை வீட்டு சந்தையில் 2026-ன் முதல் அரை ஆண்டில் 16 மில்லியன் சதுர அடி வீட்டு பரப்பு ஆனது விற்கப்பட்டு, 17% வளர்ச்சி பெற்றுள்ளது.​ இந்தியாவின் முன்னணி நகரமாக Housing Sentiment Index-இல் சென்னை (Chennai Real Estate Market 2026) திகழ்கிறது. வீட்டு விற்பனை ஆனது 2025-ம் ஆண்டில் 15% வரை அதிகரித்து உள்ளது. முதலீட்டாளர்கள் சென்னை ரியல் எஸ்டேட் சந்தையை “Safe Investment Market” என கருதுகின்றனர்.

வியத்தகு வளர்ச்சிக்கு சாதகமாக உள்ள காரணிகளின் பட்டியல் (Chennai Real Estate Market 2026)

சென்னை ரியல் எஸ்டேட் சந்தையின் வியத்தகு வளர்ச்சிக்கு சாதகமாக உள்ள காரணிகள் இங்கே பட்டியலிடப்பட்டுள்ளன.

  • சென்னையின் தொழில்துறை மற்றும் வணிகம் அடைந்து வரும் வியத்தகு வளர்ச்சி ஆனது சென்னை ரியல் எஸ்டேட் சந்தையில் ஏற்றத்தை ஏற்படுத்தி உள்ளது.
  • IT, GCC துறைகள் தேவையை அதிகரித்து முதலீட்டு வாய்ப்புகளை பெறுக்கி உள்ளன.
  • சென்னை மக்களின் ஆடம்பர வீடுகளுக்கான தேவை அதிகரித்து உள்ளது.
  • புதிய பகுதிகளில் ரியல் எஸ்டேட்டின் அபாரமான வளர்ச்சி ஆனது ஏற்பட்டுள்ளது. குறிப்பாக திருநின்றவூர், மற்றும் பூந்தமல்லி போன்ற (Chennai Real Estate Market 2026) பகுதிகளில் ரியல் எஸ்டேட் வளர்ச்சி மிகவும் அதிகரித்து வருகிறது.
  • குடியிருப்பு திட்டங்களில் முதலீடு செய்வதில் வெளிநாடு வாழ் தமிழர்கள் மற்றும் தொழிலதிபர்களின் ஆர்வம் அதிகரித்து வருகிறது.
  • மெட்ரோ Phase-2 சாலை திட்டங்கள் போன்ற  உள்கட்டமைப்பு மேம்பாட்டு திட்டங்கள்  ரியல் எஸ்டேட் வளர்ச்சிக்கு உதவுகின்றன.
  • மெட்ரோ வழித்தடங்களில் மொத்தம்4 லட்சம் சதுர அடிகளில் வணிக வளாகங்களை உருவாக்கும் திட்டம் உள்ளது.
  • குறிப்பாக IT Parks மற்றும் உள்கட்டமைப்பு வளர்ச்சிகள் மிகவும் கவர்ச்சிகரமாக உள்ளன. மெட்ரோ ரயில் விரிவாக்கம் மிகவும் முக்கியத்துவம் பெற்றுள்ளது. மேலும் மிகப்பெரிய தாக்கத்தை ஏற்படுத்தி உள்ளது.
  • IT மற்றும் தொழில்துறை வேலைவாய்ப்புகள் பெருகியுள்ளன.
  • வீட்டு கடன் வட்டி நிலைத்தன்மை மற்றும் பெருகி வரும் நடுத்தர வருமான மக்களின் அதிகமான வீட்டு வாங்கும் ஆர்வம் பெருகியுள்ளன.
  • சென்னையில் உள்கட்டமைப்பு வளர்ச்சி, சாலை விரிவாக்கம், மற்றும் போக்குவரத்து வசதிகள் ஆகியவை பிரமிக்க தக்க வகையில் வளர்ச்சி அடைந்துள்ளன.
  • குடியிருப்பு தேவைகளின் அதிகரிப்பால் அதன் மூலம் வரும் வாடகை வருமானம் அதிகரிக்க அதிக வாய்ப்புகள் உள்ளதால் அது ரியல் எஸ்டேட் வளர்ச்சிக்கு உதவுகின்றது.
  • Apartment projects அதிகரித்து வருகின்றன.
  • சென்னை நகர வளர்ச்சியை வேகப்படுத்த தமிழ்நாடு அரசு ஆனது Smart City திட்டம், Metro Phase-2 திட்டம், Outer Ring Road திட்டம் மற்றும் Airport expansion திட்டம் என பல பெரிய திட்டங்களை வேகமாக செயல்படுத்துகிறது.
Chennai Real Estate Market 2026 - Gistakmedia

2026-ல் சென்னை ரியல் எஸ்டேட் சந்தையில் அதிக வளர்ச்சி பெறும் பகுதிகள்

  • IT நிறுவனங்கள், மெட்ரோ திட்டங்கள் காரணமாக அதிக வளர்ச்சி பெறும் பகுதிகளான ஓஎம்ஆர், சோழிங்கநல்லூர், பெருங்குடி, மேடவாக்கம் போன்றவை 8–12% விலை உயர்வு காணும்.
  • மெட்ரோ, சாலை விரிவாக்கங்கள் மற்றும் தென் சென்னை சந்தை திணிப்பு காரணமாக ​மேடவாக்கம் 7–10% விலை உயர்வு காணும்.
  • GCC துறை மற்றும் உள்கட்டமைப்பு மேம்பாடுகள் (Chennai Real Estate Market 2026) போன்றவை காரணமாக சோழிங்கநல்லூர் 6–9% விலை உயர்வு காணும்.
  • விமான நிலையம் அருகில் இருக்கும் பெறும் பகுதிகளான பெருங்குடி மற்றும் பல்லாவரம் போன்றவை 5–8% விலை உயர்வு காணும்.

சென்னை ரியல் எஸ்டேட் சந்தையின் முக்கிய முதலீட்டு பகுதிகளான இந்தப் பகுதிகளில் எல்லாம் 2 முதல் 5 ஆண்டுகளில் ROI (Return on investment) ஆனது 10–20% வரை உயர்வு காணும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

சமீப ஆண்டுகளில் ECR, Adyar, Boat Club மற்றும் Besant Nagar போன்ற பகுதிகளில் luxury housing market வளர்ச்சி அடைந்து 5 கோடி முதல் 15 கோடி வரை வீடுகள் விற்கப்படுகின்றன.

Latest Slideshows

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *

Scroll to Top