-
Chennai Real Estate Market 2026 : 2026-ல் சென்னை ரியல் எஸ்டேட் சந்தை 5%–7% வரை வளர்ச்சி காணும் என கணிப்பு.!
-
IDBI Bank Jobs : ஐடிஐபி வங்கியில் 1,300 அசிஸ்டண்ட் மேனேஜர் பணியிடங்கள்.. உடனே விண்ணப்பிங்க.!
-
T20 World Cup India Champion : டி20 உலகக் கோப்பை.. நியூசிலாந்தை வீழ்த்தி 3வது முறையாக இந்தியா சாம்பியன்.!
Cheques Clearing Time: காசோலைகளை ஒரே நாளில் கிளியர் செய்வதற்கான நடைமுறை.. ரிசர்வ் வங்கி அறிவிப்பு..!
ஒரே நாளில் காசோலைகளை கிளியர் செய்யும் நடைமுறையை அனைத்து வங்கிகளும் நாளை முதல் (அக்டோபர் 4) அறிமுகம் (Cheques Clearing Time) செய்யப்படவுள்ளது. எனவே இனிமேல் உங்கள் கணக்கிற்கு செக் டெபாசிட் செய்தால், அதே நாளில் பணம் வங்கி கணக்கிற்கு வந்துவிடும். இனிமேல் இரண்டு/மூன்று நாட்கள் காத்திருக்க வேண்டிய அவசியமில்லை. ரிசர்வ் வங்கி இந்த சீர்திருத்தத்தை அறிமுகம் செய்துள்ளதை பற்றி விரிவாக பார்க்கலாம்.
வங்கிகளில் பணப்பரிமாற்றம் செய்வது தொடர்பாக ரிசர்வ் வங்கி பல்வேறு மாற்றங்களை அடுத்தடுத்து மேற்கொண்டு வரும் நிலையில், மறுபுறம் யுபிஐ, டிஜிட்டல் புரட்சிகள் என வங்கிகளில் பல்வேறு விஷயங்கள் மிக வேகமாக டிஜிட்டல் மயமாகி வருகிறது. இதனால் பொதுமக்கள் அனைத்து தேவைக்கும் வங்கிக்கு செல்வது குறைந்தது. அதேபோல் வங்கிகளில் செக் டெபாசிட் போன்ற செயல்பாடுகளை மேற்கொள்ள சில நாட்கள் காத்திருக்க வேண்டும் என்ற நிலை இன்றும் நடைமுறையில் உள்ளது.
ஒரே நாளில் கிளியர் ஆகும் காசோலை
அந்த வகையில் ரிசர்வ் வங்கி தற்போது வங்கி காசோலைகள் கிளியர் ஆவதற்கான நேரம் குறித்து புதிய மாற்றத்தை அறிவித்துள்ளது. வங்களில் ஒரு காசோலை கிளியர் ஆக இப்போது வரை 1 அல்லது 2 வேலை நாட்கள் காத்திருக்க வேண்டும். ஆனால், இந்த நடைமுறையை ரிசர்வ் வங்கி வேகப்படுத்தி உள்ளது. இனி வங்கிகளில் செக் டெபாசிட் செய்யப்பட்ட பணம் வர இரண்டு நாட்கள் வரை காத்திருக்க தேவையில்லை. அதே நாளில் கிளியர் ஆகப்போகிறது. இந்த புதிய நடைமுறை 2 கட்டங்களாக செயல்படுத்தப்படும் என்று ரிசர்வ் வங்கி தெரிவித்துள்ளது. அதாவது அக்டோபர் 4-ம் தேதி முதல் 2026 ஜனவரி 3-ம் தேதி வரை முதல் கட்டமும், ஜனவரி 3-ம் தேதிக்கு பிறகு இரண்டாம் கட்டமும் செயல்படுத்தப்படும் எனக் குறிப்பிட்டுள்ளது.
நாளை முதல் அடுத்தாண்டு ஜனவரி 2-ம் தேதி வரையிலான முதல்கட்டத்தில், காசோலைக்கான பணத்தை வழங்குபவரின் வங்கிகள், தங்களுக்கு சமா்ப்பிக்கப்பட்ட காசோலைகளை மாலை 7 மணிக்குள் சரிபாா்த்து, பணம் கொடுக்கப்படுமா அல்லது மறுக்கப்படுமா (Cheques Clearing Time) என்பதை உறுதிப்படுத்த வேண்டும். அப்படி 7 மணிக்குள் உறுதிப்படுத்தப்பட்ட காசோலைகள், அங்கீகரிக்கப்பட்டதாகக் கருதப்பட்டு, வாடிக்கையாளரின் கணக்கில் ஒரு மணி நேரத்திற்குள் வரவு வைக்கப்படும்.
3 மணி நேரத்தில் பணம் கிடைக்கும் (Cheques Clearing Time)
2026 ஜனவரி 3-ம் தேதியில் தொடங்கும் இரண்டாம் கட்டத்தில், காசோலைகளை உறுதிப்படுத்தும் கால அவகாசம் 3 மணி நேரமாகக் குறைக்கப்படவுள்ளது. அதாவது, காலை 10 மணி முதல் 11 மணி வரை காசோலை பெறப்பட்டால், அதை பிற்பகல் 2 மணிக்குள் உறுதிப்படுத்தப்பட (Cheques Clearing Time) வேண்டும். இந்த காலக்கெடுவிற்குள் எந்த உறுதிப்படுத்தலும் வழங்கப்படாவிட்டால், காசோலை அங்கீகரிக்கப்பட்டதாக கருதப்படும். ரிசர்வ் வங்கியின் இந்த புதிய நடைமுறையால் காசோலை பரிவா்த்தனை வேகமாகவும், எளிதாகவும் நடக்கும் என்று எதிா்பாா்க்கப்படுகிறது. காசோலை மூலம் ஒரே நாளில் பணம் கிடைக்கப் பெற்றால் இனி பொதுமக்கள் வங்கிகளில் காத்திருக்க வேண்டிய தேவையிருக்காது.
Latest Slideshows
-
Chennai Real Estate Market 2026 : 2026-ல் சென்னை ரியல் எஸ்டேட் சந்தை 5%–7% வரை வளர்ச்சி காணும் என கணிப்பு.!
-
IDBI Bank Jobs : ஐடிஐபி வங்கியில் 1,300 அசிஸ்டண்ட் மேனேஜர் பணியிடங்கள்.. உடனே விண்ணப்பிங்க.!
-
T20 World Cup India Champion : டி20 உலகக் கோப்பை.. நியூசிலாந்தை வீழ்த்தி 3வது முறையாக இந்தியா சாம்பியன்.!
-
Avataar Drone : வானில் கழுகு, நீரில் மீன்.. இந்தியாவின் முதல் நீர்-நில ட்ரோன் 'அவதார்' பற்றித் தெரியுமா?
-
Lemon Honey Water Benefits : காலையில் எலுமிச்சை, தேன் கலந்த நீர் குடிப்பதால் கிடைக்கும் நன்மைகள்.!
-
Vadam Movie Review : ஈகோ, காதல், துரோகம்.. என விறுவிறுப்பாக இருக்கிறதா வடம்?
-
India vs New Zealand T20 : டி20 உலகக் கோப்பை.. இந்தியா- நியூசிலாந்து பலப்பரீட்சை! சாதனை படைக்குமா இந்திய அணி?
-
Signs of Diabetes : நீரிழிவு நோயின் 10 ஆரம்ப கால அறிகுறிகள் என்ன?
-
Toxic Movie Release Date : போர் பதற்றம் காரணமாக ‘டாக்ஸிக்’ படத்தின் ரிலீஸ் தேதி மாற்றம்?
-
Women's Day 2026 : சர்வதேச மகளிர் தினம்.. வரலாறு, முக்கியத்துவம் & கொண்டாட்டம்.!