Chithha Movie Trailer : சித்தா படத்தின் ட்ரைலர் வெளியீடு...
நடிகர் சித்தார்த் நடிக்கும் சித்தா படத்தின் ட்ரைலர் (Chithha Movie Trailer) தற்போது வெளியாகியுள்ளது. தமிழ், தெலுங்கு, ஹிந்தி என தரமான கதாபாத்திரங்களில் நடித்து ரசிகர்களுக்கு பல படங்களை கொடுத்து வரும் சித்தார்த், தமிழில் கடந்த சில மாதங்களுக்கு முன் வெளியான டக்கர் படத்தில் நடித்தார். இந்த படம் நல்ல வரவேற்பை பெற்றது. இதையடுத்து சித்தார்த் நடிப்பில் அடுத்தடுத்து வெளியாகும் ஒவ்வொரு படமும் ரசிகர்களிடையே பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது.
தமிழ் சினிமாவின் முன்னணி தயாரிப்பாளர்களில் ஒருவரான சசிகாந்த் முதன்முறையாக இயக்குனராக களமிறங்க, மாதவன், நயன்தாரா, மீரா ஜாஸ்மின் உள்ளிட்டோர் நடிக்கும் டெஸ்ட் படத்தில் சித்தார்த் நாயகனாக நடிக்கிறார். இயக்குனர் ஷங்கர் இயக்கத்தில் உலக நாயகன் கமல்ஹாசன் முக்கிய வேடத்தில் நடிக்கும் நிலையில், தற்போது தயாராகி வரும் இந்தியன் 2 படத்தில் நடிகர் சித்தார்த் மிக முக்கியமான கதாபாத்திரத்தில் நடிக்கிறார். ஜில் ஜங் ஜக் மற்றும் அவள் உள்ளிட்ட படங்களை தயாரித்த சித்தார்த், நடிகராக மட்டுமின்றி தயாரிப்பாளராகவும் ETAKI என்டர்டைன்மென்ட் நிறுவனத்தின் சார்பில் தயாரித்து நடித்திருக்கும் திரைப்படம் தான் சித்தா. இந்த படத்தை பண்ணையாரும் பத்மினியும், சேதுபதி மற்றும் சிந்துபாத் உள்ளிட்ட படங்களை இயக்கிய இயக்குனர் S.U.அருண்குமார் சித்தா படத்தை எழுதி இயக்கியுள்ளார். சுரேஷ் பிரசாந்த் படத்தொகுப்பு செய்திருக்கும் இப்படத்திற்கு விஷால் சந்திரசேகர் பின்னணி இசை அமைத்துள்ளார். இசைமைப்பாளர் திபு நினன் தாமஸ் பாடல்களுக்கு இசைமைத்துள்ளார்.
Chithha Movie Trailer :
Chithha Movie Trailer : மிகவும் விறுவிறுப்பான கதைக்களத்துடன் மக்களின் இதயங்களைத் தொடும் உணர்வுப்பூர்வமான திரைப்படமான சித்தா செப்டம்பர் 28 ஆம் தேதி உலகம் முழுவதும் திரையரங்குகளில் வெளியாகிறது. இந்நிலையில் சித்தார்த் சித்தா படத்தின் டிரைலர் (Chithha Movie Trailer) வெளியாகியுள்ளது. சித்தார்த் தான் இதுவரை நடித்தவற்றில் மிக அழுத்தமான எதார்த்தமான வேடங்களில் தனது சிறந்ததைச் செய்திருக்கிறார் என்பது ட்ரெய்லரில் தெளிவாகத் தெரிகிறது. ஒரு இளைஞன் தனது மருமகள் காணாமல் போனதைக் கண்டுபிடிக்கத் தொடங்கும் போது படத்தின் கதை தொடங்குகிறது. பின்னர், அவர் ஒரு அதிர்ச்சியூட்டும் வெளிப்பாட்டைக் காண்கிறார், அது அவரது வாழ்க்கையை தலைகீழாக மாற்றுகிறது. ஒரு சில குற்றவாளிகளை பழிவாங்க முடிவு செய்த பிறகு அவருக்கு என்ன நடக்கிறது என்பதே கதையாகும். அதேபோல் இப்படம் பெரும் வரவேற்பையும், பாராட்டுகளையும் பெறும் என எதிர்பார்க்கப்படுகிறது.
Latest Slideshows
-
May Day History : மே தினம் உருவானது எப்படி? தோற்றம், முக்கியத்துவம் மற்றும் கொண்டாட்டம்!
-
Best Foods for Liver Health : கல்லீரல் ஆரோக்கியத்தை மேம்படுத்தும் சிறந்த 10 உணவுகள்.!
-
SSC Jobs 2026 : எஸ்.எஸ்.சி குரூப் டி மற்றும் குரூப் சி பிரிவில் 731 பணியிடங்கள்.. உடனே விண்ணப்பிங்க!
-
DC vs PBKS Highlights : டி20 கிரிக்கெட் வரலாற்றில் 265 ரன்களை சேஸ் செய்து வரலாறு படைத்தது பஞ்சாப்!
-
Crude Oil Rates Today : இன்றைய கச்சா எண்ணெய் விலை நிலவரம்
-
Kirni Fruit Benefits in Tamil : 'கிர்ணி' பழத்தில் கொட்டி கிடக்கும் நன்மைகள்!
-
PGCIL Recruitment 2026 : மின்சாரத் துறையில் 660 காலியிடங்கள்.. உடனே விண்ணப்பிங்க!
-
RCB vs DC IPL 2026 Highlights : பெங்களூரு அணியை வீழ்த்தியது டெல்லி கேபிடல்ஸ்.!
-
Mr. X Movie Review : ஜி20 மாநாடு, அணு ஆயுதத் தாக்குதல் என சுவாரஸ்யமாக இருக்கிறதா மிஸ்டர் எக்ஸ்?
-
Fun Facts About Fireflies : மின்மினிப் பூச்சிகள் பற்றிய வேடிக்கையான உண்மைகள்!