Christmas 2025 : கிறிஸ்துமஸ் பண்டிகையின் வரலாறு, மரபுகள் மற்றும் அதன் முக்கியத்துவம்..!
ஒவ்வொரு ஆண்டும் உலகளவில் டிசம்பர் 25-ம் தேதி கிறிஸ்துமஸ் பண்டிகை கொண்டாடப்படுகிறது. இயேசு கிறிஸ்துவின் பிறப்பை நினைவுபடுத்தும் இந்த கிறிஸ்துமஸ் பண்டிகை ஆனது உலகளவில் அதிக மக்களால் (Christmas 2025) கொண்டாடப்படும் பண்டிகை ஆகும். இந்த உலகிற்கு இயேசு கிறிஸ்துவை வரவேற்பதாக இந்த கிறிஸ்துமஸ் பண்டிகை கொண்டாடப்படுவதாக கருதப்படுகிறது. உலகின் பெரும்பாலான நாடுகளில் கிறிஸ்து பிறப்பு பெருவிழா அவ்வப்பகுதிகளின் நாகரிகங்களுக்கு ஏற்றவாறு சற்று வேறுபடுகின்றன. அயல் நாடுகளில் குறைந்தது 15 நாட்கள் முதல் டிசம்பர் மாதம் முழுவதும் வரை கிறிஸ்துமஸ் பண்டிகைக்காக விடுமுறை அளிக்கப்படுகிறது.
கிறிஸ்துமஸ் கொண்டாட்டம் குறித்த வரலாறு குறிப்புகள்
உலகில் உள்ள மனிதகுலத்தின் பாவங்களைப் போக்க கடவுள் இயேசு கிறிஸ்து மனித வடிவில் கிமு 6-ம் நூற்றாண்டுக்கும், 4-ம் நூற்றாண்டுக்கும் இடைப்பட்ட காலத்தில் அவதரித்தார் என்று சொல்லப்படுகிறது. மேலும் டிசம்பர் 25-ம் தேதி இயேசு கிறிஸ்து அவதரித்தார் என்று நம்பப்படுகிறது. கிறிஸ்துவ ரோமானிய பேரரசர்கள் காலக்கட்டத்தில் கி.பி 336-ம் ஆண்டு முதல் கிறிஸ்துமஸ் பண்டிகை ஆனது கொண்டாடப்பட்டு வருவதாக வரலாறு குறிப்புகள் தெரிவிக்கின்றன. கிறிஸ்தவர்களுக்கு இயேசு கிறிஸ்துவின் பிறப்புப் பெருவிழாவான கிறிஸ்துமஸ் மிக முக்கியமான பெருவிழா மற்றும் திருவிழா ஆகும்.
யோசேப்பு, மரியாளுக்கு மகனாக இயேசு அவதரித்தார்
உரோமைப் பேரரசன் அகுஸ்துஸ் பாலஸ்தீனத்தை ஆட்சி செய்து வந்த போது மக்கள் தொகை கணக்கீடு ஒன்றை மேற்கொள்ளுமாறு ஆணையிட்டார். மக்கள் தொகை கணக்கீட்டில் தங்களது பெயர்களை பதிவு செய்ய இயேசுவின் பெற்றோர் யோசேப்பும், மரியாளும் பெத்லகேமுக்கு சென்றனர். பெத்லகேமில் தங்குவதற்கு அறைகள் ஏதும் கிடைக்காததால் மாட்டுத் தொழுவம் ஒன்றில் தங்கினார்கள். அந்த மாட்டுத் தொழுவத்தில்தான் இயேசுவை மரியாள் பெற்றெடுத்தார். அந்த நேரத்தில் இயேசு பிறந்ததற்கு அடையாளமாக வானத்தில் விண்மீன் ஒன்று தோன்றியதாக வரலாறு தெரிவிக்கிறது. இறைத்தூதர் அருகிலுள்ள புல்வெளியில் ஆடு மேய்த்துக்கொண்டிருக்கும் இடையருக்கு காட்சி அளித்து பெத்லகேமில் உள்ள மாட்டுத் தொழுவமொன்றில் மீட்பர் இயேசு பிறந்திருக்கிறார் என்ற நற்செய்தியை அறிவிக்கிறார்.
கிறிஸ்துமஸ் கொண்டாடப்படும் விதம் (Christmas 2025)
கிறிஸ்தவர்களுக்கு இயேசு கிறிஸ்துவின் பிறப்புப் பெருவிழாவான கிறிஸ்துமஸ் மிக முக்கியமான பெருவிழா மற்றும் திருவிழா ஆகும். கிறிஸ்தவர்கள் டிசம்பர் மாதத்தின் தொடக்கம் முதல் தங்கள் இல்லங்களின் வாசல்களில் நட்சத்திரத்தை தொங்க விடுவார்கள். மேலும் தங்கள் இல்லங்களில் குடில், இயேசு பிறப்பின் மாட்டுத்தொழுவக் காட்சிகள் மற்றும் பைனஸ் மரத்தின் மாதிரி வடிவத்தை வைத்து விளக்குகளால் அலங்கரிக்கப்பார்கள். நாணல் போன்ற புல்லினால் கட்டிய குடிலில் குழந்தை இயேசு, மரியாள், யோசேப்பு, இடையர்கள் மற்றும் ஞானிகள் செரூபங்களை வைப்பார்கள். பனி பிரதேசங்களில் அதிகம் வளரக்கூடிய பைனஸ் மரத்தை மிக முக்கியத்துவமாக (Christmas 2025) கருதி அந்த மரத்தின் மாதிரி வடிவத்தை வீட்டில் அமைத்து அதை விளக்குகளால் அலங்கரிக்கப்படுவது தொன்று தொட்டு வரும் வழக்கம் ஆகும். இதே போல பொது இடங்களிலும் காட்சிக்கு வைப்பது வழக்கமாகும்.
டிசம்பர் 24 அன்று கிறிஸ்தவர் எல்லாரும் புத்துடை அணிவர். தேவாலயத்திற்கு சென்று முழு இரவு தியானங்கள் மற்றும் செபக்கூட்டங்கள் என்பற்றில் ஈடுபடுவார்கள். தேவாலயத்தில் அன்றைய தினம் மெழுகுவர்த்தி ஏற்றி சிறப்பு பிரார்த்தனைகள் நடைபெறுவது வழக்கம். டிசம்பர் 25 காலை திருப்பலிகள் நடைபெறுவது வழக்கம் ஆகும்.
கிறிஸ்துமஸ் நாளான டிசம்பர் 25 அன்று காலையில் அயலவருடன் உணவுகளை பகிர்தலும் மற்றும் விருந்து கொடுத்தலும் மேற்கொள்வர். அன்றைய தினம் கேக் வெட்டி கொண்டாடும் பழக்கமும் உண்டு. இரவு நேரத்தில் வாண வேடிக்கைகளில் ஈடுபடுவார்கள். நண்பர்களையும் மற்றும் உறவினரையும் சந்திக்கச் இல்லங்களுக்கு செல்வர். வாழ்த்து அட்டைகளையும் மற்றும் பரிசுகளையும் பரிமாறிக்கொள்வார்கள். இன்று உலகில் உள்ள பெரும்பாலான நாடுகளில் கிறிஸ்தவ மதத்தின் பரவல் காரணமாக அக்கொண்டாட்டங்களில் ஒரு சில வேறுபாடுகள் தென்படுகின்றன.
கிறிஸ்துமஸ் சமய நல்லிணக்கம் உருவாக உறுதுணையாக உள்ளது
கிறிஸ்துமஸ் பண்டிகையை பிற மதத்தவரும் கிறித்தவர்களோடு இணைந்து சிறப்பாக கொண்டாடுகின்றனர். இது சமய நல்லிணக்கத்தை ஊக்குவிக்கிறது மற்றும் உறுதுணையாக உள்ளது என்பதில் ஐயமில்லை. கிறித்தவ வீடுகளின் விருந்துகளில் பிற மதத்தவரும் கலந்து கொள்வர். கிறிஸ்தவர்கள் பிற மத நண்பர்களையும் மற்றும் உறவினர்களையும் சந்திக்கச் செல்வர். உறவினர்கள் மற்றும் நண்பர்களுக்கு பரிசுப் பொருட்களை பரிமாறிக்கொண்டும், வாழ்த்துக்களைத் தெரிவித்துக்கொண்டும் இந்த நாளை நல்ல குதூகலமாக கிறிஸ்துவர்கள் கொண்டாடுகின்றனர்.
சாண்டா கிளாஸ் மற்றும் கிறித்தவ பாடல் குழுவினர் அணி
சாண்டா கிளாஸ் ஒரு கற்பனை பாத்திரம் ஆகும். இவர் கிறிஸ்துமஸ் தாத்தா என்றும் அழைக்கப்படுவார். ஒவ்வொரு ஆண்டும் சாண்டா கிளாஸ் குழந்தைகளுக்கு பரிசு வழங்கி மகிழ்விப்பார். கிறித்தவ பாடல் குழுவினர் அணி, அணியாகச் கிறித்தவ வீடுகளுக்குச் சென்று அங்குள்ளவர்களைச் சந்தித்து கிறிஸ்துமஸ் பாடல்களைப் (Carols) பாடி மகிழ்விப்பார்கள். வீடுகளில் சிறப்பு விருந்துகள் நடைபெறும். பல இடங்களில் கிறிஸ்துமஸ் பஜனைகளை இசைப்பார்கள்.
Latest Slideshows
-
May Day History : மே தினம் உருவானது எப்படி? தோற்றம், முக்கியத்துவம் மற்றும் கொண்டாட்டம்!
-
Best Foods for Liver Health : கல்லீரல் ஆரோக்கியத்தை மேம்படுத்தும் சிறந்த 10 உணவுகள்.!
-
SSC Jobs 2026 : எஸ்.எஸ்.சி குரூப் டி மற்றும் குரூப் சி பிரிவில் 731 பணியிடங்கள்.. உடனே விண்ணப்பிங்க!
-
DC vs PBKS Highlights : டி20 கிரிக்கெட் வரலாற்றில் 265 ரன்களை சேஸ் செய்து வரலாறு படைத்தது பஞ்சாப்!
-
Crude Oil Rates Today : இன்றைய கச்சா எண்ணெய் விலை நிலவரம்
-
Kirni Fruit Benefits in Tamil : 'கிர்ணி' பழத்தில் கொட்டி கிடக்கும் நன்மைகள்!
-
PGCIL Recruitment 2026 : மின்சாரத் துறையில் 660 காலியிடங்கள்.. உடனே விண்ணப்பிங்க!
-
RCB vs DC IPL 2026 Highlights : பெங்களூரு அணியை வீழ்த்தியது டெல்லி கேபிடல்ஸ்.!
-
Mr. X Movie Review : ஜி20 மாநாடு, அணு ஆயுதத் தாக்குதல் என சுவாரஸ்யமாக இருக்கிறதா மிஸ்டர் எக்ஸ்?
-
Fun Facts About Fireflies : மின்மினிப் பூச்சிகள் பற்றிய வேடிக்கையான உண்மைகள்!