Cms-03 Satellite : இஸ்ரோ வரும் நவம்பர் 2-ம் தேதி CMS-03 செயற்கைக்கோளை விண்ணில் செலுத்த உள்ளது..!
ISRO வரும் Nov.2-ம் தேதி LVM 3 ராக்கெட் மூலம், 4,400 kg எடையுள்ள CMS-03 என்ற மிகப்பெரிய தகவல் தொடர்பு செயற்கைக்கோளை விண்ணில் செலுத்த (Cms-03 Satellite) உள்ளது. ஆந்திர பிரதேச ஸ்ரீஹரிகோட்ட விண்வெளி ஆய்வு மையத்தில் இருந்து ஏவப்பட உள்ளது. இந்த CMS-03 இந்தியாவின் டிஜிட்டல் இணைப்பை மேம்படுத்தும். இது ஒரு சிறப்பான செயற்கைக்கோள் ஆகும்.
CMS-03 ஒரு குறிப்பு (Cms-03 Satellite)
இந்தியாவின் முக்கிய நிலப்பகுதிகள் மற்றும் அருகிலுள்ள கடல் பகுதிகளின் மல்டி-பேண்ட் தகவல் தொடர்பு வலுப்படுத்தப்படும். தொலைதூர டிஜிட்டல் அணுகள்களை விரிவுபடுத்தும். இந்தியாவின் தகவல் தொடர்பு உள்கட்டமைப்பை மேம்படுத்தப்படும்.
இந்த அதிநவீன CMS-03 செயற்கைக்கோளை ISRO ஆனது ரூ.1,600 கோடியில் வடிவமைத்துள்ளது. இது உயர் வேக தரவு தொடர்பு, வாய்ஸ், வீடியோ சேவைகளை சிறந்த முறையில் வழங்கும்.
இந்த ராக்கெட் முழுமையாக வடிவமைக்கப்பட்டு, மற்றும் செயற்கைக்கோளுடன் ஒருங்கிணைக்கப்பட்டு கடந்த 26-ந்தேதி ஏவுதளத்திற்கு நகர்த்தப்பட்டு உள்ளது. இதன் இறுதிகட்ட ‘கவுண்ட்டவுன்’ ஆனது நவம்பர் 1 அன்று தொடங்க திட்டமிடப்பட்டுள்ளது.
இந்த கவுண்டவுன் தொடங்குவதற்கு முன் இறுதி தயார்நிலை ஒத்திகைகளான ஏவுவதற்கு முந்தைய சோதனைகள், மற்றும் எரிபொருள் நிரப்புதல் ஆகியவை நடைபெறும்.
ISRO தலைவர் வி. நாராயணனின் உரை
ISRO தலைவர் வி. நாராயணன், “இந்த செயற்கைகோள் இந்திய தேசிய கடற்படைக்கானது ஆகும். இது கடல் பாதுகாப்பு, கண்காணிப்பு மற்றும் துணை வழிகாட்டுதல் போன்றவற்றை நன்றாக வலுப்படுத்தும்” என தெரிவித்துள்ளார். இந்த செயற்கைக்கோள் இந்தியாவின் தகவல்தொடர்புகளின் பலத்தை உறுதிப்படுத்தும் மற்றும் மனித விண்வெளிப் பயண திட்டங்களுக்கு உதவிகரமாக இருக்கும். இந்த LVM3 இன் ஐந்தாவது செயல்பாட்டு விண்கலமாகும். இந்த ஏவுதல் ஆனது உலக அளவில் இஸ்ரோவின் (Cms-03 Satellite) தொழில்நுட்பத் திறனை மீண்டும் உறுதிப்படுத்தும் ஒரு முக்கிய நிகழ்வாகும். மேலும் விண்வெளி ஆய்வில் இந்தியாவின் பெருமையை மேம்படுத்தும் என தெரிவித்துள்ளார்.
Latest Slideshows
-
May Day History : மே தினம் உருவானது எப்படி? தோற்றம், முக்கியத்துவம் மற்றும் கொண்டாட்டம்! -
Best Foods for Liver Health : கல்லீரல் ஆரோக்கியத்தை மேம்படுத்தும் சிறந்த 10 உணவுகள்.! -
SSC Jobs 2026 : எஸ்.எஸ்.சி குரூப் டி மற்றும் குரூப் சி பிரிவில் 731 பணியிடங்கள்.. உடனே விண்ணப்பிங்க! -
DC vs PBKS Highlights : டி20 கிரிக்கெட் வரலாற்றில் 265 ரன்களை சேஸ் செய்து வரலாறு படைத்தது பஞ்சாப்! -
Crude Oil Rates Today : இன்றைய கச்சா எண்ணெய் விலை நிலவரம் -
Kirni Fruit Benefits in Tamil : 'கிர்ணி' பழத்தில் கொட்டி கிடக்கும் நன்மைகள்! -
PGCIL Recruitment 2026 : மின்சாரத் துறையில் 660 காலியிடங்கள்.. உடனே விண்ணப்பிங்க! -
RCB vs DC IPL 2026 Highlights : பெங்களூரு அணியை வீழ்த்தியது டெல்லி கேபிடல்ஸ்.! -
Mr. X Movie Review : ஜி20 மாநாடு, அணு ஆயுதத் தாக்குதல் என சுவாரஸ்யமாக இருக்கிறதா மிஸ்டர் எக்ஸ்? -
Fun Facts About Fireflies : மின்மினிப் பூச்சிகள் பற்றிய வேடிக்கையான உண்மைகள்!