நம் கலாச்சாரத்தில் ஆன்மிக செயல்முறையில் பயன்படுத்தப்படும் ஒரு முக்கிய பொருள் தான் தேங்காய். இந்த தேங்காயை கடவுளுக்கு அர்ப்பணிக்கும் வகையில் கோவில் தரையில் உடைப்பதால் அகங்காரத்தை அழித்துக்கொள்வதாக இந்து கலாச்சாரத்தில் நம்பப்படுகிறது. மேலும் இதுமட்டுமல்லாமல் தேங்காயில் வைட்டமின்கள், தாதுக்கள், துத்தநாகம் போன்ற சத்துக்கள் உள்ளதால் சமையல் போன்ற பல்வேறு வடிவங்களில் பயன்படுத்தப்பட்டு (Coconut Benefits In Tamil) வருகிறது. இவ்வாறு பல்வேறு பயன்கள் தரும் தேங்காய் சாப்பிடுவதால் கிடைக்கும் ஆரோக்கிய நன்மைகள் குறித்து இந்த பதிவில் விரிவாக பார்க்கலாம்.
தேங்காயின் நன்மைகள் (Coconut Benefits In Tamil)
நோய் எதிர்ப்பு சக்தி அதிகரிக்கும்
ஒரு கப் தேங்காயில் பாக்டீரியா எதிர்ப்பு பண்புகள் நிறைந்துள்ளன. எனவே நீங்கள் தினமும் தேங்காயை சாப்பிட்டு வந்தால் உடலில் பாக்டீரியா மற்றும் பூஞ்சை தொற்றுகளை தடுத்து உடலை வலுவாக வைக்க உதவுகிறது. நீங்கள் நோய் எதிர்ப்பு சக்தியை எளிய முறையில் அதிகரிக்க விரும்பினால், தினமும் சிறிய தேங்காய் துண்டுகள் சாப்பிட்டு வந்தால் நல்ல பலன் கிடைக்கும்.
இதய நோய் தடுக்க
தேங்காயில் நிறைவுற்ற கொழுப்பு அதிகளவு உள்ளது. இந்த கொழுப்பு உடலில் இரத்த கொலஸ்ட்ரால் அளவை மேம்படுத்த உதவுகிறது. நம் உடலில் நல்ல கொழுப்பு சரியான அளவில் இருந்தால், இதய நோய் (Coconut Benefits In Tamil) அபாயம் குறையும். எனவே தேங்காய் துண்டுகளை தினமும் சாப்பிடுவது இதய நோய் அபாயத்தை குறைக்கும்.
எலும்பு மற்றும் பற்கள் வலுவாக
தேங்காயில் அதிகளவில் கால்சியம் மற்றும் மெக்னீசியம் உள்ளது. நம் உடலில் கால்சியம் மற்றும் மெக்னீசியம் சரியான அளவில் இருந்தால், எலும்புகள் மற்றும் பற்கள் வலுவாகவும், ஆரோக்கியமாகவும் இருக்கும். எனவே எலும்புகள் மற்றும் பற்கள் சம்மந்தமான எந்த பிரச்சனையும் வராமல் இருக்க, தினமும் ஒரு கப் தேங்காய் துண்டுகள் சாப்பிடுங்கள்.
புற்றுநோயை தடுக்கும்
அன்றாடம் புற்றுநோய் எதிர்ப்பு பண்புகள் நிறைந்த உணவுகளை நம் உணவில் சேர்த்து வந்தால், பல்வேறு வகையான புற்றுநோய்களின் அபாயத்தை தடுக்கலாம். மேலும் தேங்காயில் புற்றுநோய் எதிர்ப்பு பண்புகளான பைட்டோநியூட்ரியன்ட்கள் (Coconut Benefits In Tamil) மற்றும் ஆண்டி-ஆக்ஸிடன்ட்கள் அதிகளவு உள்ளன. எனவே, நீங்கள் புற்றுநோயை தவிர்க்க விரும்பினால், தினமும் தேங்காய் சாப்பிடுவதை வழக்கமாக்கி கொள்ளுங்கள்.
செரிமான ஆரோக்கியம் மேம்படும்
மலச்சிக்கல் பிரச்சனை ஏற்படுவதற்கான முக்கிய காரணம் நார்ச்சத்து நிறைந்த உணவுகள் இல்லாததுதான். மேலும் தேங்காயில் நார்ச்சத்து அதிகம் உள்ளது. எனவே, இதை தினசரி உணவில் சேர்த்து வந்தால் மலச்சிக்கல் அபாயத்தை குறைத்து, செரிமான பிரச்சனைகளை நிச்சயமாக தடுக்கலாம்.