Gistak Media

Comet AI Browser : கூகுளுக்கு போட்டியாக கமெட் ஏஐ பிரவுசர் அறிமுகம் செய்யப்பட்டுள்ளது

கூகுள், யாஹூ உள்ளிட்ட தேடு பொறிகளுக்கு பெரிய போட்டியாக ஏஐ நிறுவனங்கள் புதிய தேடு பொறிகளை (Comet AI Browser) அறிமுகம் செய்த வண்ணம் இருக்கின்றன. முன்பு பொதுமக்கள் தங்களுக்கு தேவையான தகவல்களை கூகுள் சர்ச் என்ஜினை பயன்படுத்தி தேடினார்கள், ஆனால் தற்போது சாட் ஜிபிடி, மெட்டா ஏஐ, கிராக் ஏஐ, ஜெமினி ஏஐ ஆகிய செயலிகளை கொண்டு தங்களுக்கு தேவையான தகவல்களை துல்லியமாக பெறுகின்றனர். இதனால் கூகுள் உள்ளிட்ட தேடு பொறிகளை மக்கள் பயன்படுத்துவது படிப்படியாக குறைந்து வருகிறது. இதனை சரிசெய்ய கூகுள் AI Mode என்ற ஒரு புதிய மோடை அறிமுகம் செய்தது. ஆனால் மக்களிடையே இந்த AI Mode-ற்கு பெரிய அளவில் வரவேற்பு கிடைக்கவில்லை.

கமெட் ஏஐ பிரவுசர்

இந்நிலையில் கூகுளுக்கு போட்டியாக பெர்பிளெக்சிட்டி என்ற ஏஐ நிறுவனம் முழுக்க முழுக்க ஏஐ அடிப்படையில் இயங்கும் கமெட் ஏஐ என்ற புதிய தேடு பொறியை அறிமுகம் செய்துள்ளது. மேலும் இதனை அறிமுகம் செய்துள்ள பெர்பிளெக்சிட்டி நிறுவனம், ஆர்வம் தான் மக்களை தேடு பொறிகளை நோக்கி வர வைக்கிறது, அதனை மேலும் ஊக்கப்படுத்தவே AI அடிப்படையிலான தேடு பொறியை அறிமுகம் செய்கிறோம் என தெரிவித்துள்ளது. மேலும் தற்போது மக்கள் பாரம்பரியமான தேடு பொறிகளான கூகுள் உள்ளிட்ட தேடு பொறிகளில் இருந்து படிப்படியாக AI தொழில் நுட்பம் அடிப்படையிலான தேடு பொறிக்கு மாறி வருகின்றனர். 

இதனை புரிந்து கொண்ட பெர்பிளெக்சிட்டி நிறுவனம் செயற்கை நுண்ணறிவு (AI) அடிப்படையிலான கமெட் ஏஐ பிரவுசரை அறிமுகம் (Comet AI Browser) செய்திருக்கிறது. மேலும் வேலை , ஆய்வு உள்ளிட்ட பணிகளுக்காக தேடு பொறிகளை நாடும் மக்களுக்கு கமெட் ஏஐ பிரவுசர் உதவியாக இருக்கும் என்றும், இது மக்களுக்கு ஒரு புதிய அனுபவத்தை தரும் என்றும் கூறியுள்ளது.

Comet AI Browser - Gistakmedia

கமெட் ஏஐ பிரவுசரில் உள்ள வசதிகள் (Comet AI Browser)

இந்த Comet பிரவுசரை பயன்படுத்தி மின்னஞ்சல் அனுப்ப செய்யலாம், ஆலோசனை கூட்டங்கள் திட்டமிடலாம் என பெர்பிளெக்சிட்டி நிறுவனம் தெரிவித்திருக்கிறது. மேலும் ஏஐ ஏஜென்ட் போல செயல்பட Comet Assistant என்ற ஒரு புதிய வசதியையும் கொண்டு வந்துள்ளதாகவும், இது நாம் அன்றாடம் செய்யக்கூடிய வழக்கமான பணிகளை (Comet AI Browser) நினைவு படுத்துவது, மின்னஞ்சல்களை படித்து காட்டுவது, முக்கிய நிகழ்வுகளை முன்கூட்டியே தெரிவிப்பது ஆகிய வேலைகளை செய்யும் என பெர்பிளெக்சிட்டி நிறுவனம் தெரிவித்திருக்கிறது. மேலும் Comet-ல் நாம் ஒரு டேப்பை (Tab) சில நிமிடம் பயன்படுத்தாமல் வைத்திருந்தால் அதுவே தானாக அந்த டேபினை மூடிவிடும். மேலும் நாம் ஒரு தகவலை தேடினால் அதனை வாய்ஸ் மற்றும் வீடியோ முறையில் சுருக்கமாக நமக்கு தெரிவிக்கும்.

Latest Slideshows

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *

Scroll to Top