Coolie Movie Review : ரஜினிகாந்த் நடித்துள்ள கூலி படத்தின் திரை விமர்சனம்
முதன் முறையாக லோகேஷ் கனகராஜ் உடன் ரஜினிகாந்த் இணைந்து முக்கிய வேடத்தில் நடித்துள்ள படத்திற்கு தொடர்ந்து பல்வேறு பாசிட்டிவ் ரிவ்யூக்கள் (Coolie Movie Review) வந்து கொண்டிருக்கின்றன. ரசிகர்களின் பெரும் எதிர்பார்ப்புகளுக்கிடையே உலகம் முழுவதும் 5 ஆயிரத்துக்கும் மேற்பட்ட திரை அரங்குகளில் கூலி திரைப்படம் வெளியாகியுள்ளது. தமிழகம் மற்றும் கேரளா மாநிலங்களின் பல்வேறு பகுதிகளிலும் உள்ள திரையரங்குகளின் முன்பு நூற்றுக்கணக்கான ரசிகர்கள் கூடி ஆரவாரக் கொண்டாட்டங்களில் ஈடுபட்டனர்.
இந்த கூலிப் படம் தற்போது கலவையான விமர்சனங்களை சந்தித்து வரும் நிலையில், பலரும் இயக்குநர் லோகேஷ் அவர்களின் திறமையான திரைக்கதை வடிவமைப்பையும், திடீர் திருப்பங்களையும், அதிரடி காட்சிகளையும், சரியான நேரத்தில் இடம்பெறும் கேமியோ அறிமுகங்களையும் சிறப்பாக இணைத்திருப்பதை பெரிதும் பாராட்டுகின்றனர். தொடர்ந்து பல்வேறு பாசிட்டிவ் ரிவ்யூக்கள் இந்த படத்திற்கு வந்து கொண்டிருக்கின்றன.
கூலி படத்தின் கதை (Coolie Movie Review)
கூலி படத்தின் one line கதையானது விசாகப்பட்டினம் துறைமுகத்தை சேர்ந்த வில்லன் கும்பலுடன் சென்னையை சேர்ந்த மேன்ஷன் நடத்தும் ரஜினிகாந்திற்கும் என்ன தொடர்பு உள்ளது?, இதற்கு பின்னால் யார் செயல்படுகிறார்?, ஏன் ரஜினிகாந்த் விசாகப்பட்டினம் வில்லன் கும்பலைத் தேடி செல்கிறார்? அடிப்படையில் ரஜினிகாந்திற்கும் கூலிக்கும் என்ன கனெக்ஷன் என்பது போன்ற கேள்விகளுக்கு பதில் தான்.
இந்தப் படத்தின் முதல்பாதி ஆனது விசாகப்பட்டினம் துறைமுகத்தை கண்ட்ரோலில் வைத்திருக்கும் நாகர்ஜுனா மற்றும் அந்த துறைமுகத்தில் (Coolie Movie Review) நடைபெறும் பல குற்றச்சம்பவங்கள், அதன் பாதிப்புக்களை சுற்றி வலம் வருகிறது. அதனால் பாதிக்கப்பட்ட சத்யராஜ் குடும்பத்தை காப்பாற்ற ரஜினிகாந்த் களமிறங்குகிறார். அந்தப் போராட்டத்தில் ஈடுபட்ட பிறகுதான் கடத்தல் தவிர ஏராளமான கொலைகளும் நடைபெற்று வருவது தெரிகிறது.
சின்ன சின்ன சஸ்பென்ஸூகளும் மற்றும் ரஜினிகாந்தின் சிறப்பான ஆக்ஷன்களும் படத்தின் முதல்பாதிக்கு பலம் கூட்டுகிறது. மக்கள் எதிர்பார்ப்பது போல் இரண்டாம் பாதியில் முழுக்க முழுக்க ஆக்ஷன் படமாக எடுக்கப்படவில்லை. இயக்குநர் லோகேஷ் இரண்டாம் பாதியில் சென்டிமென்ட்டைச் சேர்த்து டிவிஸ்ட் கொடுத்து ஆச்சரியப்படுத்தியிருக்கிறார். ரஜினிகாந்தின் De-aging காட்சிகள் மிகவும் அற்புதம். ரஜினிகாந்த் தனது வழக்கமான பஞ்ச் வசனங்கள் (Coolie Movie Review) எதுவும் இல்லாமல் தனது நடிப்பாற்றலால் காட்சிகளுக்கு மெருகேற்றியுள்ளார். ரஜினிகாந்த் கோபமாகப் பார்ப்பது, மற்றும் வில்லனிடம் நக்கலடிப்பது போன்ற காட்சிகள் மிகவும் சிறப்பானவை. லோகேஷூம் மற்றும் கேமராமேன் கிரீஷ் கங்காதரனும் இந்த காட்சிகளை பக்காவாக வடிவமைத்துள்ளனர். நாகர்ஜூன் குறைந்த காட்சிகளில் வந்தாலும் மிக ஸ்டைலாக வந்து நிறைவாக செய்துள்ளார். ஸ்ருதிஹாசன் சிறப்பாகவே நடித்துள்ளார். மேலும் இத்திரைப்படத்தில் அமீர்கான், சத்யராஜ், சார்லி, உபேந்திரா, மற்றும் அனைவரும் தங்கள் நடிப்பை சிறப்பாக வெளிப்படுத்தியுள்ளனர்.
இந்தப் படம் ஒரு பான் இந்தியா படமாக உருவாகியுள்ளது. இந்தப் படம் சிறப்பாக திரை அரங்குகளில் ஓடி 1300 கோடி ரூபாய்க்கு மேல் வசூலை அள்ளும் என நம்பப்படுகிறது. மேலும் இந்த படத்திற்கு ஏரளாமான ரிவ்யூக்கள்(Coolie Movie Review) வந்து கொண்டிருக்கின்றன. ரஜினிகாந்தின் சினிமா வாழ்க்கையில் சிறப்பாக திரை அரங்குகளில் ஓடிய ஒரு திரைப்படமாக அமையும் என எதிர்பார்க்கப்படுகிறது.
Latest Slideshows
-
May Day History : மே தினம் உருவானது எப்படி? தோற்றம், முக்கியத்துவம் மற்றும் கொண்டாட்டம்!
-
Best Foods for Liver Health : கல்லீரல் ஆரோக்கியத்தை மேம்படுத்தும் சிறந்த 10 உணவுகள்.!
-
SSC Jobs 2026 : எஸ்.எஸ்.சி குரூப் டி மற்றும் குரூப் சி பிரிவில் 731 பணியிடங்கள்.. உடனே விண்ணப்பிங்க!
-
DC vs PBKS Highlights : டி20 கிரிக்கெட் வரலாற்றில் 265 ரன்களை சேஸ் செய்து வரலாறு படைத்தது பஞ்சாப்!
-
Crude Oil Rates Today : இன்றைய கச்சா எண்ணெய் விலை நிலவரம்
-
Kirni Fruit Benefits in Tamil : 'கிர்ணி' பழத்தில் கொட்டி கிடக்கும் நன்மைகள்!
-
PGCIL Recruitment 2026 : மின்சாரத் துறையில் 660 காலியிடங்கள்.. உடனே விண்ணப்பிங்க!
-
RCB vs DC IPL 2026 Highlights : பெங்களூரு அணியை வீழ்த்தியது டெல்லி கேபிடல்ஸ்.!
-
Mr. X Movie Review : ஜி20 மாநாடு, அணு ஆயுதத் தாக்குதல் என சுவாரஸ்யமாக இருக்கிறதா மிஸ்டர் எக்ஸ்?
-
Fun Facts About Fireflies : மின்மினிப் பூச்சிகள் பற்றிய வேடிக்கையான உண்மைகள்!