Gistak Media

CRPF Recruitment 2026 : மத்திய ரிசர்வ் காவல் படையில் 9,195 கான்ஸ்டபிள் பணியிடங்கள்..

மத்திய ரிசர்வ் காவல் படையில் (CRPF Recruitment 2026) 2026-ஆம் ஆண்டிற்கான கான்ஸ்டபிள் தேர்வுக்கான அதிகாரப்பூர்வ அறிவிப்பு ஆனது நல்ல சம்பளத்துடன் தேசத்திற்கு சேவை செய்ய கிடைத்துள்ள ஒரு சிறந்த வாய்ப்பாகும். மொத்தம் 9,195 காலிப்பணியிடங்களுக்கான இந்த அதிகாரப்பூர்வ அறிவிப்பு ஆனது ஏப்ரல் 8, 2026 அன்று வெளியிடப்பட்டுள்ளது.

காலிப்பணியிட விவரங்கள்

  • ஓட்டுநர் பணி (Driver) – 3,176,
  • சமையல்காரர் பணி (Cook) – 1,426,
  • பக்லர் பணி (Bugler) – 1,263,
  • தண்ணீர் சுமப்பவர் பணி (Water Carrier) – 529 (ஆண் பணியாளர் மற்றும் பெண் பணியாளர் சேர்த்து).
  • துப்புரவு பணியாளர் பணி (Safai Karmchari) – 547,
  • மோட்டார் மெக்கானிக் வாகன ஓட்டி பணி – 739.

கல்வித் தகுதி குறிப்புக்கள்

(CRPF Recruitment 2026விண்ணப்பிக்க விரும்பும் விண்ணப்பதாரர்கள் அனைவரும் அங்கீகரிக்கப்பட்ட கல்வி நிலையங்களில் 10-ஆம் வகுப்பு (Matriculation) தேர்ச்சி பெற்றவர்களாக இருக்க வேண்டும்.

  • ஓட்டுநர் பணி – விண்ணப்பதாரர்கள் 10-ஆம் வகுப்பு தேர்ச்சியுடன் கனரக வாகன ஓட்டுநர் உரிமம் (Heavy Vehicle Driving License) பெற்றவராக இருக்க வேண்டும்.
  • மோட்டார் மெக்கானிக் பணி – விண்ணப்பதாரர்கள் 10-ஆம் வகுப்பு தேர்ச்சியுடன் ITI சான்றிதழ் மற்றும் அனுபவம் பெற்றவர்களாக இருக்க வேண்டும்.
  • மற்ற டிரேட்ஸ்மேன் பணிகளுக்கு விண்ணப்பிக்க விரும்பும் விண்ணப்பதாரர்கள் அனைவரும் 10-ஆம் வகுப்பு தேர்ச்சியுடன் சம்பந்தப்பட்ட தொழிலில் நிபுணத்துவம் பெற்றவர்களாக இருக்க வேண்டும்.
  • பயனியர் பணி (மேசன்/எலக்ட்ரீஷியன்) – விண்ணப்பதாரர்கள் 10-ஆம் வகுப்பு தேர்ச்சியுடன் ஒரு வருட அனுபவம் பெற்றவராக இருக்க வேண்டும். மேலும் ITI சான்றிதழ் வைத்திருப்பவர்களுக்கு முன்னுரிமை வழங்கப்படும்.

நிர்ணயிக்கப்பட்ட வயது வரம்புகள்

  • ஓட்டுநர் பணிக்கு (Driver) – 21 முதல் 27 வயது வரை உள்ளவர்கள் விண்ணப்பிக்கலாம்.
  • மற்றுமுள்ள இதர பணிகளுக்கு 18 முதல் 23 வயது வரை உள்ளவர்கள் விண்ணப்பிக்கலாம்.

அரசு விதிகளின்படி உள்ள வயது வரம்பில் தளர்வுகள் ஆனது இடஒதுக்கீடு பிரிவினர்களுக்கு வழங்கப்படும்.

CRPF Recruitment 2026 - GISTAK media

சம்பள விவரங்கள்

Pay Level-3-ன் அடிப்படையில் தேர்வு செய்யப்படும் விண்ணப்பதாரர்களுக்கு சம்பளம் வழங்கப்படும் என்று அறிவிப்புகளில் குறிப்பிடப்பட்டுள்ளது.

  • 7th Pay Commission அடிப்படையில் அமைக்கப்பட்ட Level‑3 படி சம்பளம் ரூ. 21,700 முதல் ரூ. 69,100 வரை வழங்கப்படும்.
  • இத்துடன் அகவிலைப்படி (DA), வீட்டு வாடகைப்படி (HRA), TA, Medical, PF, Gratuity போன்ற சலுகைகளும் வழங்கப்படும்.
  • அரசு பணியைப் போலவே, உடல் பயிற்சி, போனஸ், வருடாந்திர உயர்வு, பதவிஉயர்வு போன்ற சிறந்த வாய்ப்புகளும் வழங்கப்படும்.

CRPF Recruitment 2026 : தேர்ந்தெடுக்கப்படும் முறைகள்

 

பின்வரும் தேர்வுநிலைகளில் விண்ணப்பதாரர்கள் தேர்ந்தெடுக்கப்படுவார்கள்

  1. 100 மதிப்பெண்களுக்கான எழுத்துத் தேர்வு (Computer Based Test – CBT) நடத்தப்படும்.
  2. ஓடுதல் போன்ற உடல் பயிற்சி மற்றும் உடல் தகுதித் தேர்வு (Physical Efficiency Test – PET) நடத்தப்படும்.
  3. உயரம் மற்றும் மார்பளவு சரிபார்ப்பு போன்ற உடல் அளவீட்டுத் தேர்வு (Physical Standard Test – PST) நடத்தப்படும்.
  4. குறிப்பிட்ட பணிக்கான திறன் ஆய்வுத் தேர்வான தொழில்முறைத் தேர்வு (Trade Test) நடத்தப்படும்.
  5. ஆவணச் சரிபார்ப்புகள் (Document Verification) மேற்கொள்ளப்படும்.
  6. மருத்துவப் பரிசோதனைகள் (Medical Examination) நடத்தப்படும்.

விண்ணப்பக் கட்டண குறிப்புகள்

  • பொது/OBC/EWS பிரிவினர்கள் ரூ. 100 விண்ணப்பக் கட்டணத்தை டெபிட் கார்டு, கிரெடிட் கார்டு அல்லது நெட் பேங்கிங் மூலம் ஆன்லைனில் செலுத்தலாம்.
  • SC/ST/பெண்கள்/முன்னாள் ராணுவத்தினர் விண்ணப்பக் கட்டணம் செலுத்த வேண்டியதில்லை.

விண்ணப்பிக்கும் முறை

(CRPF Recruitment 2026விண்ணப்பிக்க விரும்பும் விண்ணப்பதாரர்கள் அனைவரும் https://crpf.gov.in/ அல்லது https://rect.crpf.gov.in/ என்ற அதிகாரப்பூர்வ இணையதளம் மூலம் மட்டுமே விண்ணப்பிக்க வேண்டும்.

  • ஆன்லைன் மூலம் விண்ணப்பம் தொடங்கும் தேதி ஏப்ரல் 20, 2026.
  • விண்ணப்பிக்க கடைசி தேதி மே 19, 2026.
  • விண்ணப்பக் கட்டணம் செலுத்த வேண்டிய கடைசி தேதி மே 19, 2026.

Latest Slideshows

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *

Scroll to Top