Gistak Media

Crude Oil Rates Today : இன்றைய கச்சா எண்ணெய் விலை நிலவரம்

இந்தியாவில் கச்சா எண்ணெய் மார்க்கெட் மிகவும் அமைதியில்லாத (unstable) நிலையில் உள்ளது.  மத்தியகிழக்கில் ஈரான்‑யேமன்‑இஸ்ரேல்‑UAE பகுதிகளில் தொடர்ந்து நிலவி வரும் பிராந்திய பதட்டம் காரணமாக கச்சா எண்ணெய் விலை உயர்ந்து கொண்டே வருகிறது. உலகளவில் கச்சா எண்ணெய் ஒரு பீப்பாய்(Barrel) சுமார் 94–106 அமெரிக்க டாலர் என்ற நிலையில் உள்ளது. இது இந்தியாவில் (Crude Oil Rates Today) சுமார் Rs. 9,000 – Rs. 9,700 என்ற மதிப்பில் காணப்படுகிறது. உலக கச்சா எண்ணெய் சந்தை இந்த ஏப்ரல் 2026 மாதத்தில் மிகவும் அதிர்ச்சிகரமான மற்றும் அபாயகரமான நிலைக்கு சென்றுள்ளது.

இந்தியாவில் கச்சா எண்ணெய் மார்க்கெட் ஏற்றத்தின் காரணங்கள்

● மத்தியகிழக்கில் தொடருகின்ற பிராந்திய பதட்டம்

ஈரான்‑யேமன்‑இஸ்ரேல்‑UAE பகுதிகளில் நிலவுகின்ற பதட்ட நிலை ஆனது உலகளவில் கச்சா எண்ணெய் விலையில் பெரும் பாதிப்பை ஏற்படுத்தி உள்ளது.

● Hormuz கடல்சுரங்கம் (Strait of Hormuz) முடக்கம்

Hormuz கடல்சுரங்கம் (Strait of Hormuz) போன்ற முக்கிய கப்பற்‌பாதைகளில் போர் / தாக்குதல் அபாயம் உள்ளதால் (Crude Oil Rates Today) எரிசக்தி விநியோகம் தடைபடுகிறது

● OPEC+ நாடுகள் நீட்டிக்கும் உற்பத்தி குறைப்பு

OPEC+ நாடுகள் (சவுதி, UAE, ரஷ்யா, ஈராக் போன்றவை)  உற்பத்தி குறைப்புகளை நீட்டிக்கின்றன. இந்த உற்பத்தி குறைப்பு ஆனது சந்தையில் கச்சா எண்ணெய் விநியோகம் Tight-ஆக (குறைவாக) காரணமாகிறது.

● இந்தியா ஒரு வளரும் நாடு

இந்தியா பொருளாதார தேவை அதிகமுள்ள ஒரு வளரும் நாடு ஆகும். இந்திய  நாடு தனது கச்சா எண்ணெய் தேவையில் 80% க்கும் அதிகமானவற்றை இறக்குமதி செய்கின்ற  சூழலில் உள்ளது. அதனால் சர்வதேச (Crude Oil Rates Today) விலை உயர்வு ஆனது இந்தியாவை நேரடியாக பாதிக்கிறது.

Crude Oil Rates Today - GISTAK media

Crude Oil Rates Today : இந்தியப் பொருளாதாரத்தில் ஏற்படுத்துகின்ற தாக்கம்

● இந்திய ரூபாயின் மதிப்பு சரிவடைகிறது

அமெரிக்க டாலருக்கு எதிரான இந்திய ரூபாயின் மதிப்பு ஆனது சரிவடைகிறது. இந்தியா எண்ணெய் இறக்குமதிக்காக அதிக டாலர்களைச் செலவிடும் சூழல் ஏற்படுவதால் இந்திய ரூபாயின் மதிப்பு டாலருக்கு எதிராகச் சரிவடைகிறது.

● இதர பொருட்களின் விலை உயர்வால் பணவீக்கம் (Inflation) ஏற்படுகிறது

கச்சா எண்ணெய் விலை  உயர்வால் போக்குவரத்துச் செலவு அதிகரிக்கின்றது. அதனால் உணவு மற்றும் இதர பொருட்களின் விலையும் உயர்கின்றது.

● பங்குச் சந்தையில் மதிப்பு சரிவடைகிறது

(Crude Oil Rates Today) கச்சா எண்ணெய் விலையில் தொடர்ந்து நிலவி வரும் விலை உயர்வு மற்றும் தொடர்ந்து நிலவி வரும் போர் அச்சம் காரணமாக இந்தியப் பங்குச் சந்தையில் சென்செக்ஸ் மற்றும் நிஃப்டி புள்ளிகள் பெரும் சரிவைக் கண்டுள்ளன.

விலை உயர்வுகளை  தவிர்க்க முடியாத காரணத்தால் நேரடியாக நம் பொருளாதாரத்தில் பெரும்தாக்கம் ஏற்படுகிறது.

Latest Slideshows

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *

Scroll to Top