-
Smartphone Usage Increases Dopamine Levels : ஸ்மார்ட்போன் பயன்பாட்டால் அதிகரிக்கும் டோப்பமைன்.. மருத்துவர்கள் எச்சரிக்கை?
-
Gynandromorph Butterfly : பாதி ஆண், பாதி பெண்.. ஒரே உடலில் 2 பாலினம் கொண்ட அதிசய பட்டாம்பூச்சி.!
-
Hatsun Founder Success Story : ஹட்சன் அக்ரோ புராடக்ட் லிமிடெட்டின் நிறுவனர் ஆர்.ஜி.சந்திரமோகனின் வெற்றிக் கதை.!
CSIR Recruitment 2023: மத்திய மின்வேதியியல் ஆராய்ச்சி நிறுவனத்தில் வேலைவாய்ப்பு
மத்திய மின்வேதியியல் ஆராய்ச்சி நிறுவனத்தில் (Central Electrochemical Research Institute – CECRI) காலியாக உள்ள விஞ்ஞானி பணியிடத்தை நிரப்புவதற்கான அறிவிப்பினை வெளியிட்டுள்ளது. இந்த அறிய வாய்ப்பினை பயன்படுத்திக் கொண்டு விண்ணப்பிக்க ஆர்வம் உள்ள விண்ணப்பதாரர்கள் உடனடியாக அதிகாரப்பூர்வ இணையத்தளத்தின் மூலம் விண்ணப்பிக்கலாம்.
CSIR Recruitment 2023 Details
பணியிட விவரம்:
* பதவியின் பெயர்: விஞ்ஞானி
* பணியிடம்: காரைக்குடி
கல்வித்தகுதி:
* இந்த விஞ்ஞானி பணியிடங்கள் பல்வேறு பிரிவுகளின் கீழ் அறிவிக்கப்பட்டுள்ளது.
* இந்த பணிக்கு விண்ணப்பிக்க விண்ணப்பம் உள்ள விண்ணப்பதாரர்கள் அங்கீகரிக்கப்பட்ட பல்கலைக்கத்தில் வேதியியல் துறையில் முனைவர் பட்டமும், இயற்பியல், கெமிக்கல் பொறியியல் துறையில் எம்.டெக். படித்திருக்க வேண்டும், மேலும் ஆய்வு இதழ்கள் எழுந்திருக்க வேண்டும்.
வயது வரம்பு:
இந்த பதவிக்கு விண்ணப்பிக்க விருப்பம் உள்ளவர்கள் 37 வயதிற்கு குறைவாக உள்ளவர்களாக இருக்க வேண்டும். அரசு தளர்வுகள் அளிக்கப்பட்டுள்ளதாக குறிப்பிட்டுள்ளது.
மாத ஊதியம்:
இந்த பணிக்கு தேர்வு செய்யப்பட்டவர்களுக்கு மாத சம்பளமாக ரூ.67,700 ரூபாய் வழங்கப்படும்.
விண்ணப்பிக்கும் முறை:
விண்ணப்பிக்க தகுதியும் விருப்பமும் உள்ள விண்ணப்பதாரர்கள் https://www.cecri.res.in என்ற இணையத்தில் கேட்கப்பட்டுள்ள விவரங்களை பூர்த்தி செய்து விண்ணப்பிக்க வேண்டும்.
விண்ணப்பக் கட்டணம்: ரூ.500/- இடஒதுக்கீடு பிரிவினருக்கு தளர்வுகள் அளிக்கப்படும்.
தேர்வு முறை:
அறிவிக்கப்பட்டுள்ள பதவிக்கு விண்ணப்பதாரர்கள் நேர்காணல் மூலம் விண்ணப்பதாரர்கள் தேர்வு செய்யப்படுவர்.
விண்ணப்பிக்க கடைசி தேதி: ஜூலை 31, 2023.








