Gistak Media

CSK Trade Players 2026 : CSK அணியில் இணைந்தார் சஞ்சு சாம்சன்!!!

ஐபிஎல் 2025 போட்டியில் ராஜஸ்தான் அணிக்காக விளையாடி வந்த சஞ்சு சாம்சன் சென்னை சிஎஸ்கே அணியில் இணைந்ததாக (CSK Trade Players 2026) அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது.

ஐபிஎல் 2026-ம் ஆண்டுக்கான மினி ஏலம்

ஐபிஎல் 2026 மினி ஏலம் வரும் டிசம்பர் 15 ஆம் தேதி ஐக்கிய அரபு அமீரகத்தின் அபுதாபியில் நடைபெற இருப்பதாக கூறப்படுகிறது. இம்மாத இறுதிக்குள் ஐபிஎல் அணிகள் தங்களது அணிகளில் தக்கவைக்க விரும்பும் வீரர்கள் மற்றும் மாற்றிக் கொள்ள விரும்பும் வீரர்களின் பட்டியலை நவ15 ஆம் தேதிக்குள் பிசிசிஐ-க்கு வழங்க வேண்டும். தற்போது ஐபிஎல் அணிகள் ஏலத்திற்கு முன்பாக தங்களது வீரர்களை வேறு அணிக்கு மாற்றிக் கொள்ள ஆலோசனை மற்றும் முயற்சிகள் நடத்தி வருகின்றன.

சிஎஸ்கே அணியின் ஆலோசனை கூட்டம்

சிஎஸ்கே அணியின் தலைமை நிர்வாக அதிகாரி காசி விஸ்வநாதன், தலைமை பயிற்சியாளர் ஸ்டீஃபன் பிளெமிங் மற்றும் கேப்டன் ருதுராஜ் கெய்க்வாட் ஆகியோர் தலைமையில் எந்த வீரரை வெளியேற்ற வேண்டும், எந்த வீரரை தக்கவைக்கவேண்டும் என்ற ஆலோசனை கூட்டம் நவம்பர் 10 மற்றும் 11-ம் தேதிகளில் நடந்தது. சென்னை சிஎஸ்கே அணியின் அஸ்வின் ஓய்வு பெற்றுவிட்டார். கடந்த சீசனில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணி கடைசி இடத்தில் நிறைவு செய்ததால் இந்த ஆலோசனை கூட்டம் மிக முக்கியமாக கருதப்பட்டது.

சஞ்சு சாம்சனுக்காக ஐபிஎல் அணிகள் இடையே கடும் போட்டி

கடந்த சீசனில் சென்னை சூப்பர் கிங்ஸ் கடைசி நிலைக்கு தள்ளப்பட்டதால் வரும் ஐபிஎல் 2026-க்கு சஞ்சு சாம்சனை கொண்டுவர சென்னை சூப்பர் கிங்ஸ் திட்டமிட்டது. சென்னை அணி ஆனது ராஜஸ்தான் ராயல்ஸ் அணியில் இருந்து சஞ்சு சாம்சனை வாங்க முயற்சிகளை மேற்கொண்டது. ஆனால் ராஜஸ்தான் அணி தங்களுக்கு சஞ்சு சாம்சனுக்கு மாற்றாக ஜடேஜா, துபே மற்றும் தென் ஆப்பிரிக்க வீரர் பிரேவிஸ் ஆகியோரை கொடுக்க வேண்டும் என கூறி வந்தது. சஞ்சு சாம்சனை ராஜஸ்தான் ராயல்ஸ் அணியிலிருந்து தங்கள் அணிக்குள் கொண்டுவர கொல்கத்தா, டெல்லி மற்றும் சிஎஸ்கே அணிகளுக்கு இடையே கடும் போட்டி ஏற்பட்டது. 2026 ஐபிஎல் தொடருக்காக சஞ்சு சாம்சனை அணிக்குள் கொண்டுவர சென்னை சூப்பர் கிங்ஸ் அணி மிகப்பெரிய வர்த்தகம் மூலம் முயற்சி மேற்கொண்டுதாக செய்தி வெளியானது.

சென்னை சிஎஸ்கே அணியின் அதிகாரப்பூர்வ அறிவிப்பு

தற்போது ஜடேஜா சென்னை சூப்பர் கிங்ஸ் அணியிலிருந்து அதிகாரப்பூர்வமாக விலகியுள்ளார். மேலும் ராஜஸ்தான் ராயல்ஸ் அணிக்கு ரவீந்திர ஜடேஜா வர்த்தகம் செய்யப்பட்டதாக (CSK Trade Players 2026) அறிவிக்கப்பட்டுள்ளது. சஞ்சு சாம்சன் ராஜஸ்தான் அணியிலிருந்து சென்னை சூப்பர் கிங்ஸ் அணிக்கு வர்த்தகம் செய்யப்பட்டதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

CSK Trade Players 2026 - Gistakmedia

ஒப்பந்தப் பணிகள் ஆரம்பம் (CSK Trade Players 2026)

சென்னை சூப்பர் கிங்ஸ் சஞ்சு சாம்சனை தங்களது அணிக்கு  எடுக்கவும்  மற்றும் சாம் கரணை ராஜஸ்தான் ராயஸ் அணிக்கு கொடுக்கவும், இரு அணிகளும் ஒப்புக் கொண்டு வர்த்தக ஒப்பந்தம் ஏற்பட்டுள்ளதாகவும், மேலும் இரு அணிகளுக்கு இடையே  ஒப்பந்தப் பணிகள் தொடங்கிவிட்டதாகவும் கூறப்படுகிறது.

ஜடேஜாவின் பங்களிப்புகளுக்கு சிஎஸ்கே வாழ்த்து

ஜடேஜா மற்றும் சாம்கரன் இருவருடனும் சிஎஸ்கே பேசிய பிறகு, ஒரு பரஸ்பர புரிதலுடன்தான் இந்த முடிவு எடுக்கப்பட்டு உள்ளது. நீண்டகால தொலைநோக்குப் பார்வையுடன் மிகவும் யோசிக்கப்பட்டு இந்த முடிவு (CSK Trade Players 2026) ஆனது எடுக்கப்பட்டு உள்ளது. ஜடேஜாவின் சிறந்த பங்களிப்புகளுக்கும், அவர் விட்டுச் சென்ற மரபுக்கும்  சென்னை சிஎஸ்கே எப்போதும் நன்றியுள்ள அணியாக இருக்கும் என தெரிவித்துள்ளது. மேலும் ஜடேஜா மற்றும் சாம்கரன் இருவருக்கும் சிறப்பான எதிர்காலம் அமைய வாழ்த்து கூறியுள்ளது.

தோனி 2026 ஐபிஎல் சீசனில் விளையாடுவது உறுதி

சென்னை சிஎஸ்கே அணியின் தலைமை நிர்வாக அதிகாரி காசி விஸ்வநாதன் தோனி 2026 ஐபிஎல் சீசனில் விளையாடப்போவதை  உறுதி செய்துள்ளார். கிறிக்பஸ் உடன் தோனியும் பங்கேற்பார் என கூறியுள்ளார். வரும் 2025 டிசம்பர் மாதம் ஐபிஎல் 2026-ம் ஆண்டுக்கான மினி ஏலம் நடைபெற உள்ளது. 2026 ஐபிஎல் கம்பேக் கொடுக்க வேண்டிய கட்டாயத்தில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணி இருக்கிறது.

Latest Slideshows

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *

Scroll to Top