Gistak Media

CSK vs DC IPL 2026 Highlights : சஞ்சு சாம்சன் மிரட்டல் சதம்.. டெல்லியை வீழ்த்தி சென்னை அணி முதல் வெற்றி

சென்னை எம்.ஏ.சிதம்பரம் (சேப்பாக்கம்) மைதானத்தில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணி (CSK) மற்றும் டெல்லி கேபிடல்ஸ் (DC) அணிக்குமிடையே நடைபெற்ற போட்டியில் (CSK Vs DC IPL 2026 Highlights) சென்னை சூப்பர் கிங்ஸ் அணி ஆனது டெல்லி கேபிடல்ஸ் அணியை 23 ரன்கள் வித்தியாசத்தில் வீழ்த்தி தனது முதல் வெற்றியைப் பதிவு செய்துள்ளது.

முதலில் களமிறங்கிய சென்னை சூப்பர் கிங்ஸ் அணியின் அசாத்திய பேட்டிங்

ருதுராஜ் கெய்க்வாட் மற்றும் சஞ்சு சாம்சன் முதலில் தொடக்க வீரர்களாக களமிறங்கினர்.  ருதுராஜ் கெய்க்வாட் 18 பந்துகளில் ஒரு பவுண்டரியுடன் 15 ரன்கள் மட்டும் எடுத்து ஆட்டமிழந்தார். சஞ்சு சாம்சன் உறுதியாக நின்று டெல்லி பந்துவீச்சாளர்களைத் திணறடித்தார். மைதானத்தின் அனைத்துப் பக்கங்களிலும் சஞ்சு சாம்சன் பந்துகளை சிதறடித்து வெறும் 56 பந்துகளில் 115 ரன்கள் (15 பவுண்டரிகள், 4 சிக்ஸர்கள்) எடுத்து ஆட்டமிழக்காமல் இருந்தார். இளம் வீரர் ஆயுஷ் மத்ரே, சஞ்சுவுடன் ஜோடி சேர்ந்து தனது முதிர்ச்சியான ஆட்டத்தை வெளிப்படுத்தினார். அவர் 59 ரன்களில் சோர்வு காரணமாக ‘ரிடயர்ட் அவுட்’ (Retired Out) ஆனார். கடைசி கட்டத்தில் சிவம் துபே தனது அதிரடி ஆட்டத்தை வெளிப்படுத்தி 11 பந்துகளில் 20 ரன்கள் எடுத்து அணியின் ஸ்கோரை உயர்த்தினார். நிர்ணயிக்கப்பட்ட 20 ஓவர்களில்  (CSK Vs DC IPL 2026 Highlights) சென்னை அணி 2 விக்கெட் இழப்புக்கு 212 ரன்களை சேர்த்தது.

CSK vs DC IPL 2026 Highlights - GISTAK media

டெல்லி அணி 213 ரன்கள் இலக்குடன் களமிறங்கியது

தொடக்க ஆட்டக்காரர்களான பாத்தும் நிசாங்கா மற்றும் கே.எல். ராகுல் ஜோடி தங்களது அதிரடி ஆட்டத்தை வெளிப்படுத்தி 4 ஓவர்களிலேயே 50 ரன்களைக் குவித்தனர். நிசாங்கா 41 ரன்கள் எடுத்து ஆட்டமிழந்தார். ராகுல் 18 ரன்களில் அவுட் ஆனார். 61/0 என்ற வலுவான நிலைக்கு சென்ற டெல்லி அணி, அடுத்தடுத்து விக்கெட்டுகள் இழப்பிற்கு ஆழாகியது. டிரிஸ்டன் ஸ்டப்ஸ் தனி ஒரு ஆளாகப் போராடி 38 பந்துகளில் 60 ரன்கள் சேர்த்தபோதும் மற்ற வீரர்களின் சரியான ஒத்துழைப்பு கிடைக்காததால் டெல்லி அணியால் வெற்றி இலக்கை எட்ட முடியவில்லை. நிர்ணயிக்கப்பட்ட 20 ஓவர்களில்  (CSK Vs DC IPL 2026 Highlights) டெல்லி அணி அனைத்து விக்கெட்டுகளையும் இழந்து 189 ரன்களை பெற்றது. டெல்லி அணி தோல்வியைத் தழுவியது.

CSK Vs DC IPL 2026 Highlights : சஞ்சு சாம்சன் ஆட்டநாயகன் விருதை வென்றார்

சஞ்சு சாம்சனின் அதிரடி ஆட்டம் மற்றும் அவரது அபார சதம் எம்.ஏ. சிதம்பரம் (சேப்பாக்கம்) மைதானத்தில் இருந்த சென்னை ரசிகர்களைப் பெருமகிழ்ச்சியில் ஆழ்த்தியது. தோல்விகள் தனது மனதிற்குள் சந்தேகத்தை ஏற்படுத்தியபோதும் தனது அடிப்படை ஆட்டத்தில் கவனம் செலுத்தியதால் தான் வெற்றி பெற்றதாக சஞ்சு சாம்சன் கூறியுள்ளார்.    

Latest Slideshows

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *

Scroll to Top